இன்று பல நாடுகள் தங்களை அடக்கியாளும் சக்திகளிடமிருந்து பிரிந்துபோய்ச் சுதந்திரப் பிரகடனங்களைச் செய்கின்றன. 1989ம் ஆண்டுக்குப்பின் இரஷ்யப் பேரரசு வீழ்ச்சியடைந்தபின் இரஷ்யாவின் பிடியிலிருந்து பல நாடுகள் விடுதலை பெற்றன. இரஷ்யாவால் பிரித்து வைக்கப் பட்டிருந்த ஜேர்மன் நாடு ஒன்று பட்டது. இதற்கெல்லாம் பின்னணியாகச் செயற்படுவத பிரித்தானியா, அமெரிக்கா ஒன்று சேர்ந்த பலமாகும்;. ஒரு நாடு உருவாக ஒரு வல்லரசின் உதவி அல்லது வெள்ளையரின் பின்னணி எவ்வளவு முக்கியம் என்பதற்குக் கொசாவோ நாட்டின் சுதந்திரப் பிரிகடனம் ஒரு சாட்சியாகும். 17.02.08ல் கொசாவோ நாட்டின் சுதந்திரப் பிரகடனம் செய்யற்பட்டது. அதை ஜரோப்பிய ஒன்றியத்திலுள்ள பெரும்பாலான நாடுகளும், அவர்களை அண்டிவாழ்பவர்கள்,ஆமாம்சாமி போடுபவர்கள் என்ற வேறு நாடுகளும் என்று 43 நாடுகள், (அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் போன்றவை) ஆமோதித்தன. இந்தியா, சீனா இலங்கை உட்பட23 நாடுகள் எதிர்த்தன. நியுசீலண்ட போன்ற 20 நாடுகள்,மேற்கத்திய வல்லரசுகளால் உண்டாக்கப்பட்ட கொசொவொவின் சுதந்திரம் பற்றிய,தார்மீகரீதியான தங்கள் சந்தேகங்களை வெளியிட்டன.கடந்த வருடம் கொசாவோ நாட்டுக்கு வந்திருந்த அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் பஷ், பிரித்தானிய பிரதமர் சொன்னபடி, கொசாவோ நாட்டின் சுதந்திரப் பிரகடனத்திற்கு வழியமைத்துச் சென்றிருந்தார். தங்கள் நாட்டின் ஒரு பகுதி பிரிந்து போவதைப் பொறுக்க முடியாத சேர்பியர்கள் பேச்சுவார்த்தைகள் மூலம் இழுத்தடித்தார்கள். ஆனாலும் மேற்கத்திய வல்லரசுகளின் ஆசியுடன் சுதந்திரப் பிரகடனம் நடந்தது. கிட்டத்தட்ட,இலங்கைத் தமிழரின் தற்போதைய நிலைமாதிரியான வாலாறும் சரித்திரப் பின்னணியும் கொண்டவர்கள் கொசாவொ நாட்டின் அல்பேனிய முஸ்லிம் மக்கள். பேரினவாதமுள்ள சேர்பியத் தலைமைத்துவத்தால் மிகவும் துயர் பட்டவர்கள். கிட்டத்தட்ட 10.000 அல்பேனிய மக்களைப் பேரினவாதத்தின் வெறிக்குப் பத்து வருட காலத்தில் பலிகொடுத்தவர்கள். 200.000 மேற்பட்ட மக்கள் அகதிகளானார்கள். சேர்பிய நாட்டுத் தலைவனான செபடோன் மிலோசவிச் என்பவன் கொவாவோ நாட்டில் உள்ள அல்பேனிய இன மக்களான முஸ்லிம் இன மக்களுக்கு1989-1998 வரைக்கும்; செய்த கொடுமைகளால் 1999ல் உலக மக்களின் கவனத்தைத் தன் பக்கம் ஈர்த்துக்கொண்ட நாடு கொசாவோ நாடு. ஜக்கிய நாடுகளின் பிரதிநிதியான மாhற்ட்டி அஹ்ரிசாரி, ''கொசாவோ நாட்டின் சுதந்திரப் பிரகடனம் தவிர்க்க முடியாதது'' என்று சிபாரிசு செய்ததை, ஜக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான்கிமூன் ஆமோதித்தார்.கொசாவோ என்ற சிறு நாடு,யூகோஸ்லொவாக்கிய சாம்ராச்சித்தின் ஒருபகுதியகாகச் சேர்பியரின் ஆதிக்கத்தில் இருந்தது. வடக்கில் சேர்பியாவையும்,தென்கிழக்கில் மசடோனியாவையும், தெற்கில் அல்பேனியாவையும், கிழக்கில் மொன்டிநீக்ரோவையும் எல்லைகளாக்க் கொண்ட நாடு. 4203 சதுரமைல்களைக்கொண்ட இந்நாட்டில் பல்லின மக்கள் வாழ்கிறார்கள்.அம்மக்களில் 94 விகிதமானவர்கள் இரணடு கோடி மக்கள் முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த அல்பேனிய இனத்தவராகும். ஒட்டுமொத்தமான கொசாவோ மக்களில் 4 விகித மானவர்கள் சேர்பியர்களாகும் மற்றச் சிறுபான்யையினர்,பொஸ்னிக்,றோமானிய,கோறானிய,துருக்கிய இனமக்களாகும். தங்கள் பிரதேசத்தில் உள்ள சிறுபான்மையின கிறிஸ்தவ சேர்பிய மக்களை அப்பிரதேசத்தின் பெரும்பானமையினமான முஸ்லிம் அல்பேனியர் துன்புறுத்துகிறார்கள் என்ற குற்றச்சாட்டில், சேர்பியத் தலைவனான செபடோன் மிலோசோவிச்சும் அவனது ஆயுதக்குழுக்குழுவும் 1989ம் ஆண்டு தொடக்கம் திட்டமிட்ட பல இன அழிப்புக் கொடுமைகளைச் செய்தார்கள். அதை எதிர்த்து கே. எல். ஏ ( கொசாவன் லிபரேசன் ஆர்மி) என்ற குழு போராடத் தொடங்கியது. மக்களுக்குப் போராட வேடம்போட்டுப் பல சமூக நலவிரோத வேலைகளைக் கே. எல் ஏ செய்ததாகக் குற்றம் சாட்டி அவர்களைத் தொலைத்துக் கட்டுவதாகச் சொல்லிக் கொண்டு சாதாரணப் பொது மக்களைப் படுகொலை செய்தார்கள் சேர்பியர்கள். ஹிட்லர் யுதர்களுக்குச் செய்த கொடுமைகள்போல் மிலோசோவிச் பல பயங்கரக் கொடுமைகளை முஸ்லிம் மக்களுக்குச் செய்தான். முஸ்லிம் இன ஒழுப்பு நடவடிக்கைகள் அன்று கொசாவோவில் நடந்த இன அழிப்பு நடவடிக்கைகள் உலகை வெட்கிக்கப் பண்ணியது. உலகம் பரந்திருந்த மனித உரிமை ஸ்தாபனங்களின் முயற்சியால் 'நேட்டோ' அமைப்பின் துருப்புக்கள் அனுப்பப்பட்டார்கள் 18.000 துருப்புக்குள் 1999லிருந்து கொசாவோ நாட்டிற் தங்கியிருந்து பாதுகாப்பு விடயங்களைப் பார்த்துக் கொண்டாலும் மக்களாற் தெரிவு செய்யப்படாத ஒரு ஆளுமையில்லாதபடியால் நிலமை மோசமடைந்தது. விடுதலைப் போராட்டம் என்ற பெயரில் பல கொலை கொள்ளைகளுடன் சம்பந்தப்பட்டவர்களில் ஒருத்தரானவர் என்று கருதப்படும் பழைய கே. எல்.ஏ (கொசாவன் லிபரேசன் ஆர்மி) தலைவன் ஹசிம் தாச்சி இப்போது நடந்த தேர்தலில் பிரதமராகப் பதவியேற்றிருக்கிறார். பொருளாதார, சுகாதார, பாதுகாப்பு நிலமைகள் படுமோசமாகவிருக்கின்றன என்று சொல்லப் படுகிறது. ஜரோப்பிலேயே மிகவும் வறுமையான நாடு கொசாவோ நாடாகும் மிகவும் கூடுதலான குழந்தைகளைப் பெறும் நாடாகவும் கணிக்கப் படுகிறது. வாழ்க்கை நிலை நாளுக்கு நாள் மிகவும் மோசமாகவுள்ளது. நாட்டின் முன்னேற்றத்திற்காக மேற்கு நாடுகள் கொடுத்த 500 மில்லியன் டாலர்சுக்கும என்ன நடந்தது என்று யாருக்கும் தெரியாது. பொருளாதர நிரவாகம் சீர் கெட்டுவிட்டது என்று அறிக்கைகள் சொல்கின்றன. வெளிறாடுகளுக்கு- முக்கியமாக ஜரோப்பிய நாடுகளுக்குப் போதை மருந்து கடத்துதல், மனிதர்களைக் கடத்துவதில- முக்கியமாகப் பெண்களைக் கடத்திப் பாலியல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்துவதில கொசாவோ நாட்டைச்சேர்நத பலர் ஈடுபட்டிருந்தார்கள்;. அதனால் மேற்கு ஜரோப்பிய நாடுகளுக்கு கொசாவோ நாட்டில் ஒரு ஸ்திர அரசை அமைக்கும் நிலை முன்னெடுக்கப் பட்டது. பிரித்தானியாவின் பழைய பிரதமர் ரோனி பிளேயர் ஆடசியிலிருக்கும்போது கொசாவோ நாட்டைப் பிரிக்கத் திட்டம் போட்டார்.
உலக சரித்திரத்தில் பல நாடுகளை உருவாக்கியவர்கள் பிரித்தானிய ஆதிக்கவாதிகள் என்பது உலகறிந்த விடயமாகும். இரண்டாம் உலக யுத்ததின் பின்னர் மத்திய தரைக்கடற் பகுதியில் கிறிஸ்தவர்களுக்கு லெபனான் நாட்டையும், யுதர்களுக்கு இஸ்ரேலையும்,இந்தியாவைப்பிரித்துப் பாகிஸ்தானையும் உண்டாக்கினார்கள். ''தங்களுக்குத்தேவையான விதத்தில் உலகை வெட்டிப்பிரிப்பதில் பிரித்தானியரும் அமெரிக்கரும் திறமை படைத்தவர்கள்'' என்று இரஷ்யா கோபம் கொள்கிறது.மேற்கு நாட்டாரின் இந்த நடவடிக்கை, சேர்பிய நாட்டின் சினேகித நாடான இரஷ்யாவைக் கோபம் கொள்ளச் செய்திருக்கிறது. சோபிய நாட்டின் 15 விகிதமான நிலப்பரப்பு, இரண்டு கோடி முஸ்லிமகளுக்குக் கொடுப்பதைச் சேர்பிய மக்கள் விரும்பவில்லை. 'பிரித்தானிய வெளிநாட்டு மந்திரி; கொசாவோவை முஸ்லிம்களுக்காகப் பிரித்துக் கொடுத்தால் தங்களுக்கும் தனி நாடு வேண்டும்'; என்று கொசாவோ நாட்டிலுள்ள சேர்பியர்கள் போர்க்கொடி தூக்குகிறார்கள். ஜக்கிய நாடுகளின் கொசாவோ நாட்டின் சுதந்திரப் பிரகடனப் பிரேரணiயை, ஐக்கிய நாடுகளின் முக்கிய அங்கத்தவரான இரஷ்யா தடை செய்யும் என்று எதிர்பார்க்கப் பட்டது. இரஷ்யா மட்டுமல்லாமல், தனி நாடு கேட்கும் ஸபெயின் நாட்டுச் சிறுபான்பையினமான பாஸ்க் இனவாதிகளின்; பயங்கரவாதத்துடன் மாரடிக்கும் ஸ்பெயின் நாடும் ஐக்கிய நாடுகளின் முயற்சியை விமர்சனம் செய்கிறது.1974ல் தனி நாடாகப் பிரிந்துபோன சைப்பிரஸ் நாட்டுத் துருக்கியப் பிதேசத்தை ஏன் மேற்கு நாடுகள் இன்னும் அங்கிகரிக்கவில்லை என்ற கேள்வியும் முன்வைக்கப் படுகிறது. தனிநாடுகேட்கும் போராளிகளுக்கெல்லாம் உதவி செய்யப்போகிறீ்ர்களா என்ற குரல்கள் பல பகுதிகளிலுமிருந்து ஐக்கியநாடுகள்;பக்கம் திரும்புகிறது. மேற்கத்திய நாடுகளைத் திருப்திப் படுத்தினால் எதுவும் நடக்கலாம் என்பது இதிலிருந்து வெளிப்படுகிறது. கொசொவொவுக்குச்; சுதந்திரம்எடத்துக்கொடுத்த மாதிரி, பல வல்லரசுகளும் சேர்ந்து தனி ஈழப் பிரகடனத்திற்கு ஆதரவு தரவேண்டுமென்பது பல விடுதலைப் புலிகளின் கோரிக்கையாகவும் ஆவலாகவும் வெளிப் படுத்தப் படுகிறது.
இந்தக்கோரிக்கை;கு ஏன் ஆதரவு கிடைக்காது என்பதை அறிவு பூர்வமாவும், அரசியல் ரீதியாவும் ஆராயாமல், வெறும் உணர்வு பூர்வமாகப்பேசும்போது, அந்தக் கோரிக்கையைப் பற்றிக் கேள்வி கேட்பவர்களையும் வழக்கம்போல் வசைபாடுகிறார்கள். முதலாம் உலக யுத்தம் நடக்கும் வரைக்கும், அமெரிக்கா ஒரு வல்லரசாகவிருக்கவில்லை; பிரித்தானியா, பிரான்ஸ், போன்ற நாடுகள் உலகைப் பங்கு போடப் போட்டியிட்டுக் கொண்டிருந்தன. ஜேர்மனி, தனது வலிமையைக் காட்ட முனைந்தபோது பிரச்சினை வந்தது. முதலாம் உலகப் போரில் பிரித்தானியா வலிமையுடனிருந்தது. அந்த வலிமையை வைத்துக் கொண்டு பல நாட்களைத் துண்டாடியது. பாரம்பரிய பலத்துடனிருந்து துருக்கிய சாமராச்சியத்தைத்(ஒட்டமான் சாமராச்சியம்) துண்டாடியது. பல நாடுகளை உருவாக்கியது-சவுதி அரேபியா அதில் ஒரு நாடு.அமெரிக்கா, முதன் முறையாக பிரித்தானியாவுக்கு உதவியது. போர்கள் வெல்லப் பட்டன. இரண்டாம் உலக யுத்தத்திலும் அமெரிக்கா உதவியுடன் பிரித்தானியா ஜேர்மனியைத் தோர்க்கடித்தது. ஜேர்மனியில் யுதர்கள் பட்ட துயரைப் பின்புலமாக்கிப் பரித்தானிய வெளிநாட்டமைச்சால் இஸ்ரேல் உருவாக்கப் பட்டது. துருக்கிய சாமராச்சியத்தில் ஒரு நாடாக ஆளப்பட்ட சிரியா துண்டாடப் பட்டு'லெபனான்' உண்டாக்கப் பட்டது.
இந்தியாவைத் துண்டாடிப் பாகிஸ்தான் உண்டாக்கப் பட்டது.
கிட்டத்தட்ட ஆயிரம் வருடங்கள் சாமராச்சிய கோலோச்சிய உரோம ஆளுமைக்குப் பின் இதுவரை பெரிய அரச பலம் கொண்ட நாடாகப் பரித்தானியா இருந்;து. இன்று அப்படி படை,பண பலம் இல்லாவிடினும்,அரச தந்திரத்தால் பல நாடுகளை இன்னும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. 1980ம் ஆண்டுகளிலிருந்து,அமெரிக்காவுடன் சேர்ந்து இரஷ்யாவைத் துண்டாடியது. இரஷ்யாவுக்குச் சினேகிதமான சேர்பியாவையும் துண்டாடியது. பொஸ்னியா, மொன்டிநீக்ரோ என்று புதிய நாடுகள் பிறந்தன. சேர்பியாவின் ஒருபகுதியாயிருந்த, முஸ்லிம் மக்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட கொசொவொ 2008ல் பிறப்பிக்கப் பட்டது.
அண்மையில் லண்டனில் தமிழர்களால் நடத்தப் பட்ட இரு கூட்டங்களில் கொசொவொ பற்றிய பேச்சுக்கள் வந்தன. 13வது திருத்தச்சட்டம் பற்றிய கலந்துரையாடலில் கலந்து கொண்ட விடுதலைப் புலி ஆதரவாளர் ஒருத்தர், 13வது சரத்துத் தமிழ் மக்களின்,சமூக அரசியல்,கல்வி,பாதகாப்பு,பொருளாதார அபிலாசைகளை நிறைவேற்றாது என்றும், தனித் தமிழ் ஈழம் கேட்டுப்போராடுவதின் தார்மீகக் கோட்பாடுகள் பற்றியும் தனது கருத்துக்களை முன்வைத்தார். பல இனங்கள் வாழும் ஒரு நாட்டில், ஒரு சிறுபான்மையினம் ; போராட்டத்தில் குதிப்பதற்குப் பல காரணிகள் உள்ளன. அவையாவன, மொழி,பொருளாதார, இன, இராணுவ என்ற பல ரீதியில் அடக்கப் படுதல். நாங்கள் இதுவரை அப்படித்தான் அடக்கப் படுகிறோம். தனியாகப் பிரிந்து போவதற்கு எங்களுக்கு உரிமையிருக்கிறது என்றார்.
தமிழரின் பகுதியில் வாழ்ந்த முஸ்லிம் மக்களைப் புலிகள் தங்கள் பாதுகாப்பு காரணமாக 24 மணித்தியாலங்களிற் துரத்திவிட்டது பற்றி யாரும் அங்கு அவர்பேசவில்லை. போராட்டத்திற்குப் போய்பபல தியாகங்களைச செய்த கிழக்குப் போராளிகள்;, புலிகளின் பிராந்திய வெறி தாங்காது பிரிந்து போனதால் புலிகளின் போராட்டம் தோற்றுப் போனதைப் பற்றியும் அவர் வாய் திறக்கவில்லை.அண்மையில் நடந்த கூட்டமொன்றிற் பேசிய, இலங்கை மத்திய அரசின் அமைச்சர்களில் ஒருத்தரான பேராசிரியர் திஸ்ஸ வித்தாரண அவர்கள், 'மேற்கத்திய வல்லரசுகளால் எற்படுத்தப் பட்ட கொசொவொ போன்ற ஒரு சுதந்திரப் பிரகடனம் இலங்கையில் ஒரு நாளும் நடக்கப் போவதில்லை என்றும், இப்போது, இலங்கையின் கிழக்கில் ஏற்பட்ட ஜனநாயக மாற்றங்கள் வடக்கிலும் வெகு விரைவில் ஏற்படும் என்றும் ஜனநாயத்தில் நம்பிக்கையுள்ளவர்கள் அந்தப் பாதைக்கு ஆதரவு கொடுத்தல் முக்கியம் என்றம் சொன்னார்.கிழக்கு மட்டுமல்லாது,நீண்டகாலமாக எந்த ஒரு வித முன்னேற்றங்கiயும் காணாத தமிழ்ப் பிரதேசங்கள் சீர் திரத்தப்பட வேண்டும் அதற்கு அமைதியான சூழ்நிலை இருகடக வேண்டும்'.'ஒரு நாட்டில் பல தேசிய இனங்கள் வாழ்வதுண்டு. அவர்களில் ஒரு சிறுபான்மையினம் பெரும்பானமையான சக்தியால் அடக்கப்பட்டால், அந்த ஒடுக்கப்பட்ட மக்கள் மக்கள் தங்களின் சுய நிர்ணய உரிமைக்காகப் போராடுவதை யாரும் மறுக்கவில்லை. ஆனால் இன்று இலங்கையில் நடக்கும் போராட்டம், ஒரு விடுதலைப் போராட்டமல்ல. ஒரு பலமான கூட்டம் தனது குழுவின் மேம்பாட்டுக்காக மற்றவர்களை அடக்கும் ஒரு சண்டையே நடந்து கொணடிருக்கிறது. வீடுதலைப் போராளிகள் தனது மக்களை அழிப்பதில்லை. இலங்கையிலுள்ள தமிழ் மக்களில் 50 விகிதத்திற்கு மேலான தமிழ் மக்கள் மற்ற இன மக்களுடன் சேர்ந்து வாழ்கிறார்கள், அத்துடன்,கிழக்கின் தேர்தல்,தமிழ் மக்கள் இனியும் போராட்டம் என்ற பெயரில் துயர்படத் தயாரில்லை என்பதைக்காட்டியது, வெளியில் வாழும் தமிழ் மக்கள் , இலங்கையில் நடக்கும் யதார்த்தத்தைப் புரிந்து கொள்ளல் நல்லது. மனித உரிமை என்ற பெயரில், வெளிநாட்டுச் சக்திகள் சிறிய நாடுகளுக்குள் புகுந்து குழப்பங்களை உண்டாக்கித் தனது ஆயுத விற்பனைகளை முன்னெடுக்கிறது, இலங்கையில் இன்றல்ல என்றுமே என்தப் பிரிவினையும் வருவதற்கு அரசு விடப்போவதில்லை' என்று தனது பேச்சில் மேலும் குறிப்பிட்டார்.முப்பது வருடங்களுக்கு மேலாகப் புலிகள் சொல்லிக் கொண்டிருக்கும் 'ஈழம்' என்ற வெற்றுப் பேச்சு கழுதை தேய்ந்து கட்டேறும்பான கதையாகிவிட்டது. மக்களிடமிருந்து கோடிக்கான பணங்களைக் கப்பமாப் பெற்று என்ன செய்தார்கள் என்பது பற்றித் தமிழ் மக்கள் கேள்வி; கேட்கலாம்.
கடந்த சில வாரங்களாக, உலகின் பல பகுதிகளில் புலிகளின் பொங்கு தமிழ் விழாக்கள் பிரமாண்டமாக நடந்தது. ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு கேளிக்கை விழா நடத்தினார்கள். இவர்களிற் பல இளம தலை முறையினருக்கு இன்று இலங்கையின் தமிழ்ப் பகுதிகளில் இருக்கும் வறுமை நிலை தெரியாது. தெரிந்திரந்தால் இந்த இளம் தலைமுறை இப்படிக் கேவலமான கேளிக்கைகளில் பணத்தைச் செலவழித்திருக்க மாட்டார்கள். வறுமையான மக்களுக்கு உதவி செய்திருப்பார்கள்அத்தடன், இப்படி இத்தனைபேர் ஆயிரக்கணக்கான தொகையில் மிகவும் ஆடம்பரமாக வாழ்ந்து கொண்டு இலங்கையில் யாருக்காக,எத்தனை தமிழர்களுக்காக ஈழம் கேட்கிறீர்கள் என்று இவர்கள் குடியேறியிருக்கும் நாட்டாரிற் சிலர் முணு முணுத்தது இவர்களுக்குத் தெரியாது,புரியாது. இவர்கள் குடியேறியிருக்கும் நாட்டின் எந்தப் பத்திரிகைகளும் இப்படி ஒரு பிரமாண்ட விடயம் பற்றிய ஒருவார்த்தையும் எழுதவில்லை. சவுத்ஹொலில் வாழும் சீக்கியனின் புதுவருட விழா லண்டன் டி.வியில் ஒளிபரப்பப் படுவதுண்டு. இலங்கைத் தமிழர் பற்றி லண்டன் தமிழர்கள் சொல்லும் விடயம் பற்றி இன்று யாரும் கவலைப் படாமலிருப்பதற்கு யார் காரணம்?புலிகள் தங்களை ஒரு அவதாரப் புருஷர்களாகக் காட்டிப் பணம் கறந்தது சரியா? அல்லது தமிழர்களுக்காகத் தங்களைத தவிர வேறு யாரும் குரல கொடுக்கக் கூடாது என்று மற்ற இயக்கங்களைக் கொன்று குவித்தது சரியா? இன்று இலங்கைத் தமிழரின் பெயரில் பலர் பெரிய வாழ்க்கை வாழ்கிறார்கள். மக்கள் போராட்டததை ஒரு மார்பியாப் போராட்டமாக்கி விட்டார்கள். தாயகத்திலும், புலம் பெயாந்த இடங்களிலும் கோயில் குளங்கள், பாடசாலைகள் என்று எல்லாவற்றையும் தங்கள் அதிகாரத்துக்குள் கொண்டுவந்து கோடி சேர்த்தார்கள். புலிகளுக்கு எதிர் என்று சொல்லிப்பல பழைய புலிகள் புதிய முக மூடிகளுடன் பணமும் புகழும் சேர்க்க ஆலாய்ப் பறக்கிறார்கள். புலிகள் மாதிரியே இவர்களும் தங்களுக்குள் எல்லாவற்றையும் அடக்கிக் கொள்ள ஐரோப்பா முழுக்கப் பறந்து திரிகிறார்கள். தமிழ் இலக்கியம் தொடக்கம், தலித் பிரச்சினை, தெரியாதவர்களின் செத்த வீடு என்ற பல இடங்களை ஆக்கிரமித்துப் பிலாக்கணம் பாடித்தள்ளுகிறார்கள். புலிகள் பிராந்தியவாதம் காட்டி தமிழரின் 'விடுதலைப்போரை(?)' கொச்சையாக்கியதுபோல் இவர்களும் தங்கள் 'ஜனநாயக(??) அமைப்புக்களில் யாரும் கிழக்கு மக்கள் வரக்கூடாத வரையறைகளைக் கடைப் பிடிக்கிறார்கள்.பழைய புலிகளும் புதிய புலிகளும் 'தலைமையை' எப்போதும் தங்கள் கைகளில் வைத்திருக்குப் பிரமப் பிரயத்தனம் செய்கிறார்கள். தங்களுக்குத் தாங்களே ஏற்றி வைத்த கிரீடங்கள் தாண்டிய தலைமைகள் மக்களாற் தேர்ந் தெடுக்கப் படும்போது அந்தத் தலைமையை அழிக்கவும், கிண்டல் செய்து பரிகசிக்கவும் முழுமுயற்சியும் எடுக்கிறார்கள்.புலிகள் கொலைகள் செயவதற்குப் பணம் சேர்ப்பதால் பணக்காரராகிறார்கள். புதிய முக மூடிகள், கொலைகளைக் கண்டிக்கும்போர்வையில் தங்களின் ''பல''(!!??) தேவைகளையும் முனனெடுக்கிறார்கள். இருவருக்கும் உள்ள ஒற்றுமை ''யாழ் மையவாதம்; என்ற அகங்காரமேயாகும். ஒரு தரப்பு மனித உரிமைவாதி கேதிஸ்வரனைப்க் கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுச் சாடப்படுகிறார்கள். மறு தரப்பு கேதிஸ்வரனை யார் கொலை செய்தார்கள் என்று தெரிந்து கொண்டு;ம், தங்களுக்குப் பணம் கொடுபபவர்களைத் திருப்திப் படுத்த, வெற்று வார்த்தைகளுடன் பிலாக்கணம் பாட மேடையேறுகிறார்கள். இருதரப்பினரும், தங்கள் சொந்தக்காரரை மேடையேற்றுவதில் முதற்கண்ணாயிருக்கிறார்கள். எந்த மேடையிலும் இதைக் காணலாம். பிரமுகர்கள் என்ற பெயரில் 'இலவசமாகச் சாப்பிடத் தங்கள்; கூட்டத்துடன்' வரும் கூட்டமிது.இரு தரப்பும் முஸ்லிம் மக்களை ஒரு இக்கட்டான நிலைக்குத் தள்ளி விட்டிருக்கிறார்கள். இனிய வார்த்தைகளால் அவர்களைத் தங்கள் பக்கம் இழுக்கப் பாhத்துக் கிழக்கில் பிரச்சினைகளை உண்டாக்கப் பல பிரயத்தனம் செய்கிறார்கள். முஸ்லிம் மக்களுக்கு ஒரு தனி ' அலகு' தருவதாக வாக்குறுதி கொடுத்திருக்கிறார்கள். இவர்கள் தாங்கள் நினைத்தபடி கிழக்கிலங்கையைப் பிரித்து 'முதுசம்' எழுதிக்கொடுக்கத் துடிக்கிறார்கள்.இவர்கள் யாருக்கு மாமா மச்சான்? கிழக்கில் வெற்றிலை பறித்தார்களா? விளைநிலத்தில் களை பிடுங்கினார்களா? மாடு மேய்த்தார்களா? மலையேறிக் கல்லுடைத்தார்களா? பட்டினி கிடந்தார்களா? பசிப்போருக்கு ஒரு நேர உணவு கொடுத்தார்களா? இவர்களுக்கு என்ன துணிவு தங்களுக்குத் தெரியாத மக்களின் தலைவிதியை நிர்ணயிக்க? மேற்குக் கலாச்சாரம் பல நல்ல விடயங்களைச் சொல்கின்றன. அத்துடன், பஞ்சமா பாதகங்களை எப்படித் திறமாகச் செய்யலாம் என்றும் தெரிந்து கொள்ள வாய்ப்புண்டு. சாணக்கியன் சொல்லாத பல தந்திரங்களைப் பாவித்துத்தான், சாணக்கியம் தோன்றிய இந்தியாவையே வெற்றி கொண்டான் பிரிட்டிஷ்;காரன். அந்தத் தந்திரத்தை, மேதாவித்தனமாக் காட்டி மக்களைப் பேய்க்காட்ட வேண்டாம். புலிகள் பொங்கு தமிழ் விழா எடுத்தது, மேற்குநாடுகள் புலிகளைப் பயங்கரவாதப் பட்டியலிலிருந்து நீக்கவேண்டும் என்ற கோரிக்கைக்குததான் என்று சொல்லப் படுகிறது. இன்று பல தோல்விகளைச் சந்தித்துத் தொய்ந்துபோயிருக்கும் புலிகளுக்கு ஆர்வம் கொடுக்க இந்த ஆர்ப்பாட்டங்கள் உலகம் பரந்த விதத்தில் நடத்தப் பட்டதாகவும்; சொல்லப்படுகிறது. 1982ல் மனித உரிமைப் போராட்டங்களை லண்டனில் நடத்தியபோது நாங்கள் ஆயிரக்கணக்கில் படையெடுக்கவில்லை. நினைவிற் தூய்மை,வாய்மையில் சத்தியம் அவைதான் எங்கள் ஆயுதம். இன்று, பழயை புலிகளின் கேளிக்னைகளோ அல்லது புதிய, பழைய புலிகள் சொல்வதோ உண்மையான மக்கள் அன்புடன் முனனெடுக்கப்படவில்லை. தங்களின் நலத்துக்காக மக்களைப் பாவிப்பவர்கள் எப்போதும் தூக்கியெறியப் படுவார்கள். விடுதலைப் போர் என்ற பெயரில், 70.000 மேலான தமிழ் மக்களைப் பறிகொடுத்து, கோடிக்கணக்குப் பெறுமதியான உடைமைகளை இழந்து, 78 நாடுகளில் அகதிகளாக அலைந்து கண்டது என்ன? இன்று (16.07.08), லண்டனில் உள்ள அகில உலக மன்னிப்புச்சபையினரின் (அம்னெஸ்டி இன்ரநாஷனல்) இலங்கை பற்றிய புகைப்படக்கண்காட்சி நடந்தது. அங்கு பல தமிழர்கள் வந்திருந்தார்கள். இலங்கையில் தற்போது நடந்து கொண்டிருக்கம் போரில் புலிகள் தோற்கவில்லை என்றும், வன்னியிற் புலிகள் மிகவும் மூர்ககமாகப் போராடுவதாகவும் சீக்கிரத்தில் 'ஈழம்' கிடைக்கப் போவதாவகும் சொன்னார்கள். கேட்கப் பரிதாபமாகவிருந்தது. யாழ்ப்பாணத்தில் மக்கள் திறந்த சிறைச்சாலைகளிலும் கிழக்கில் பட்டினியோடும் தமிழர் துயர் படுவதை இவர்கள் என்று உணர்வார்கள்? புகைப்படக் காட்சிக்கு, அகில உலக சமாதான அமைப்பொன்றிலிருந்து வந்திருந்த பிரமுகர்களில் ஒருத்தர் ' கொசொவொ போன்ற ஒரு சுதந்திர நாட்டைத் தமிழருக்கு எடுத்துக்கொடுக்க மேற்கு அரசுகள் காத்திருப்பதாகச்சொன்னார். அந்தத் தருணம் விரைவில் வரும்' என்றும் சொன்னார். 'இந்தியா அந்த முயற்சிக்கு ஆதரவு தருமா என்று கேட்கப்பட்டபோது, ' உலக மாற்றங்கள் வரும் போது ,யார் யாருக்கு உதவுகிறார்கள், எதற்கு அனுமதி கொடுக்கிறார்கள் என்பதெல்லாம் தன்பாட்டுக்கு மடையும் ' என்று பதில் சொன்னார். அப்படி ஒரு மாற்றம்வரும் என்பது மிக மிக ஆச்சரியமான விடயமாகவிருக்கும். அப்படி நடக்க(!!!!) முடியுமாகவிருப்பதற்குத் தமிழத் தலைவர்கள் அத்தனைபேரும் ஒன்றுபடுதல் முக்கியம். அது நடக்குமா? அனைத்துத் தமிழ் உணர்வுகளும் ஒன்றுபட்டால் அடையக் கூடியது பல. இன்று இலங்கையில் தமிழ் பேசுபவர்கள்,தமிழர்-முஸ்லிம்கள் என்ற பேதமின்றி, அத்தனை மக்களும் ஏதோ ஒரு பயத்துடன் வாழ்கிறார்கள். அரசியல் சூட்சுமவாதிகளால் பல குழப்பங்களுக்கு முகம் கொடுக்க வேண்டியிருக்கிறார்கள். அவர்கள் படும் துயர்கள் இனியும் தொடரவேண்டாம். புத்தளத்தில், யாழ்ப்பாணத்திலிருந்து துரத்தப்பட்ட முஸ்லிம்களும், இந்தியாவிலும் இலங்கையின் பல பகுதிகளிலும் தொடரும் போரால்; தங்கள் இடங்களை விட்டுப் இடம்பெயர்ந்துபோய் வாழும் தமிழர்களும், அமைதியான ஒரு நிரந்தர வாழ்க்கையை எதிர்நோக்கிக் காத்திருக்கிறார்கள்.இவர்களின் துயர் தீர, இன்று தொடாந்து கொண்டிருக்கும்; போர் நிறுத்தப்படவேண்டும. குழந்தைகள் படிக்க வேண்டும். வயல்கள் பயிர்காணவேண்டும்;. வரம்புகளில் நீர் தழும்ப வேண்டும். இலங்கை மக்களின் கண்களில் நீர் தழும்ப வேண்டாம். இன்று, வன்னியில் விடுதலைப் புலிகள், இலங்கை இராணுவத்தின் முன்னெடுப்புக்களால், தங்களின்; பாதுகாப்பு பற்றிய விடயத்தில இக்கட்டான நிலையில் இருக்கிறது. இலங்கை, அரசாங்கம் இராணுவ ரீதியில்,ஒரு ஒட்டுமொத்த வெற்றியைப் பெறமுடியுமா என்பதும் கேள்விக்குறியாக இருக்கிறது. இதில் மிகவும் பாரிய அளவில் பாதிக்கப்படப்போவது ஏழைத்தமிழ் மக்களே. ஆனாலும், விடுதலைப் புலிகளின் தலைமை, துயர்படும் மக்கள் பற்றித் துக்கப் படுவதாகத் தெரியவில்லை.
மனித உரிமைகளில் அக்கறையுள்ளவர்கள் அத்தனைபேரும் மக்களின் பாதுகாப்பு பற்றிக் குரல் கொடுப்புது மிகவும் முக்கிமான பணியாகும்.
- இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்
Saturday, July 19, 2008
Subscribe to:
Post Comments (Atom)

0 comments:
Post a Comment