Thursday, July 24, 2008

சொறியும் போதெல்லாம் தூக்கம் கலைந்து பொங்கி எழும் தமிழர்கள்?

பேரறுஞர் கல்லாநிதி கியூறியஸ் ஜி

தமிழன் தூங்கிக் கிடப்பான். ஆனால் யாராவது சொறிந்தால். அப்போது தான் அவன் பொங்கி எழுவான்

கனடியப் பொங்குதமிழ் களியாட்ட விழாவில் இப்படித்தான் ஒரு பிரகிருதி விளாசித் தள்ளியது, ஆகா,,, விசிலடிக்கும் கூச்சலுக்கும் ஆர்ப்பரிப்புக்கும் ஆரவாரத்திற்கும் என்ன குறைச்சல்?

அட. யாரப்பா இப்படி முரசொலிக்கும் அந்த தமிள் ரத்தம் பொங்கியெழ முயக்கமிடும் தன்மானத் தமிளன் என்று பார்த்தால்,,, ஊரிலே தமிழ்த் தலைமைகளால் துரோகி என்று முத்திரை குத்தப்பட்ட பா,உ ஒருவரிடம் செயலாளராய் இருந்து. தமிழனிடம் லஞ்சம் வாங்கி வேலை பெற்றுக் கொடுத்து. இப்போது கனடாவில் புலி வேசம் போட்டு பிழைப்பு நடத்தும் திருட்டுக் கூட்டத்தில் ஒன்று தான் அது, கூச்சலிட்ட கும்பலோ யார் எவர் என்ற பின்னணி பற்றிய கவலை ஏதுமின்றி கை தட்டி ஆரவாரித்தது?

அப்படியாயின். தூங்கிக் கிடக்கும் தமிழனைத் தட்டி எழுப்;பி பொங்கி எழச் செய்யும் திருப்பணியைத் தானே கியூறியஸ் செய்து கொண்;;டிருக்கிறான், பிறகேனப்பா. உவன் வீணாக எங்களோட சொறியிறான் என்று ஆளாளுக்கு திட்டிக் கொண்டிருக்கிறீர்கள்

தமிழன் விடிஞ்சது. பொழுதுபட்டது தெரியாமல். தூங்கிக் கிடப்பதால் தானே. இந்த ஆய்வாளர்கள் எல்லாம் தலைவர் திட்டம் வைத்திருக்கிறார். விரைவில் சிங்கள தேசம் அதை அறிந்து கொள்ளும் என்று பேய்க்காட்டிக் கொண்;டிருக்கிறார்கள், அதனால் தானே. சிலாவத்துறை முதல் விடத்தல்தீவு வரைக்கும் முன்னேறிய இராணுவத்தின் முன்நகர்வு முயற்சி மன்னாரில் முறியடிப்பு என்று கொமிக்கல் இளந்திரையன் றீல் விட்டுக் கொண்டிருக்க முடிகிறது,

தூங்கிக் கிடந்தவனை எழுப்பலாம். தூங்குவது போல் பாசாங்கு செய்பவனை எழுப்ப முடியுமா? முன்நகர்வு முறியடிப்பிற்குள்ளாலும் இத்தனை தூரம் இராணுவம் முன்னேறிய உண்மையையோ. எமது தரப்பில் எதுவித சேதமுமில்லை புழுகுக்கு பின்னால். சில மாதங்களிற்குள் ஆயிரம் பேரை இழந்ததையோ. எத்தனை ஊடகங்கள் எப்படிக் காண்;பித்தாலும். தமிழன் எழும்பவே மாட்டான், கேட்கும், ஆனால் கர்ண்ணை;த் திறக்கவே மாட்டான், கண்ணைத் திறந்தாலும் உவங்கள் பொய் சொல்லுறாங்கள். துரோகிகள்? என்று சொல்லி விட்டு மீண்டும் தூங்கப் போய் விடுவான்,

தூக்கத்தில் கிடக்கும் அவனுக்கு கொமிக்கல் இளந்திரையனும் இந்த அரசியல் ஆய்வாளர்களும் கனவில் தோன்றி. இராணுவம் அகலக் கால் வைக்கிறது என்றும் ஷஉள்ளுக்க வரவிட்டு அடிக்கப் போறாங்கள் என்றும் அருள் பாலித்து காது குத்தும் போது. புல்லரித்துப் போய் விடுவான், இன்னும் கொஞ்ச நாளில் ஆனையிறவில். கிளிநொச்சியில். புதுக்குடியிருப்பில் எல்லாம் முன்நகர்வு முயற்சி முறியடிப்பு நடக்கும் போதெல்லாம் காணாமலே விசுவசிக்கப் போகும் இந்த பாக்கியவான்களின் பகுத்தறிவின் இலட்சணம் எங்களுக்குத் தெரிந்த ஒன்று தான்,

ஆனால். இந்த கும்பகர்ணன்கள் தூங்கும் விசயம் தெரியாமல் யாரோ சொறிந்து விட்டார்கள்,

நியூஸிலாந்து முதல் கனடா வரைக்கும் தமிழன் பொங்கி எழுந்தாயிற்று, இந்தப் படை போதுமா இன்னும் கொஞ்சம் வேண்மா என்று. பஸ்ஸில் ஏற்றிச் சென்று குவிக்கப்பட்ட பொங்குதமிழ் மந்தைகள் சிவப்பும் மஞ்சளுமாய் ஏகே முனைக்கு நேர் இங்கே எதுவுமே இல்லை என்று ஏலேலோப் பாடி. பறவை முனியம்மாப் பாட்டிகளும். முகாபே ஆட்டுக்குட்டிச் செம்மறிகளும் ஆட்டம் போட்ட காட்சிகள் கண்;களுக்கு விருந்தாயிற்று, புலிகளின் ஊடகங்களும் போட்டி போட்டுக் கொண்;டு பத்தா பத்தாயிரமா என்று ஏலம் போட்ட கணக்கில் கொண்டு வந்து சேர்க்கப்பட்ட கூட்டத்தின் தொகையைப் பெருக்கிக் கொண்டே இருக்கின்றன,

இதுவரைக்கும். உத்தியோகபூர்வமான சனத்தொகைக் கணக்கெடுப்புகளில் இருந்து இந்த நாடுகளில் எத்தனை தமிழர்கள் வாழுகிறார்கள் என்று ஆதாரங்களுடன் எதையும் பார்த்ததில்லை, ஆனால். ஒரு பேப்பரில் மட்டும் இத்தனை தமிழர்கள் இருந்தும் முக்கால் வாசிப் பேர் வரவில்லை என்றும் கால்வாசிப் பேர் மட்டுமே வந்தார்கள் என்று வராதவர்களைத் துரோகிகள் என்பது போலத் திட்டித் தீர்த்திருந்தார்கள், சிலர் நுழைவுக்கட்டணமோ என்று கேட்டார்களாம், சில பெண்கள் ஐயோ. நான் மானாட மயிலாட பார்க்க வேண்டும் என்றார்களாம், இன உணர்வு இல்லாதவர்கள் என்று அந்த ஒண்ணரைப் பக்க ஏடு திட்டியிருந்தது,

சரி. கடைகளைப் பூட்டி. வானொலிகளில் பொங்கி எழுந்து. பஸ்ஸிலும் கொண்;டு போய் ஏற்றிப் பறிச்சும் என்று. இத்தனை முக்கு முக்கியும். முக்கால் வாசித் தமிழர்கள் வரவில்லை என்றால் என்ன அர்த்தம்? முக்கால் வாசித் தமிழர்கள் உங்களுக்கு எதிரானவர்கள் என்பது தானே உண்மை, வராதவர்கள் துரோகிகள் என்று நீங்கள் கூறினால். அந்த முக்கால்வாசி துரோகிகளுக்கும் தமிழர்களின் ஏக பிரதிநிதிகளான உங்களின் கூத்துக்கள் பிடிக்கவில்லை என்பது தானே அர்த்தம், இப்போதாவது. பெரும்பான்மையான தமிழர்கள் புலிகளுக்கு எதிரானவர்கள் என்ற உண்மையை ஏன் உங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை

சரி. கனடாவில் பொங்கி எழுந்தாயிற்று, ஏனாம் கடைசி நேரம் வரை நடைபெறும் இடம் சஸ்பென்ஸ் ஆயிற்றாம்? தமிழர்களின் ஏக பிரதிநிதிகள் யாருக்குப் பயப்படுகிறார்களாம்? புல்லுருவிகளுக்கு இத்தனை பயமா

ஐயா. பொன்னையா. என்னையா. எந்த உலகத்தில் ஐயா நீவிர் இருக்கின்றீர்? புல்லுருவிகளைக் களை எடுக்க வேண்டும் என்கிறீரே பலே கில்லாடி ஐயா. நீவிர்?

கொஞ்ச நாளைக்கு முன்னால் தான். விடுதலைப்புலிகளின் அதிகாரபூர்வ ஆபாச ஏடான நிதர்சனம் உம்மையும் துரோகி என்று திட்டித் தீர்த்ததை இந்த மந்தைக் கூட்டம் அறிந்திருக்காது என்ற நம்பிக்கை உமக்கு ஜாஸ்தி, இந்த மந்தைக் கூட்டத்தின் அறிவு வளம். ஞாபக சக்தி என்பவற்றில் இருக்கும் அபாரமான நம்பிக்கை தானே சூரியதேவன் முதல் நீவிர் வரைக்கும் இப்படி பிழைப்பு நடத்த வழிவிட்டிருக்கிறது,

இப்படியாகத் தானே கொஞ்ச நாளைக்கு முன்னால் மந்தைகள் முன்னால் பொங்கி எழுந்து. ஆனந்தசங்கரியைப் புல்லுருவி என்ற ஈழவேந்தன் பஜெரோ பறிக்கப்பட்டு. தலை தப்பியது தம்பிரான் புண்ணியம் என்று பொடிநடையாய் கொழும்பு சேர்ந்த கதை அறியீரோ? உம்முடன் அதே மேடையிலே சொறிக்கதை கதைத்த மிஸ்டர் மணி கூட. உலகத்தமிழரோடு ஒட்டிக் கொண்டு பின்னர் வெளியேற்றப்பட்ட பின்னால். உலகத்தமிழர்களுக்கு எதிராக பெட்டிசன் அடிச்ச ஒரு புல்லுருவி என்பதையும் அறியீரோ? புலி வேசம் போட்டு ஆடிய ஆட்டத்தில். புலி முக்மூடியோடு பக்கத்தில் நிற்பது யார் என்பதை உங்களாலேயே அறிந்து கொள்ள முடியவில்லை,

பரமசிவன் கழுத்துப் பாம்பு போல. புலிவாலில் தொங்கிக் கொணடு. கனடாவில் இருந்து கொண்டே களையெடுப்புக் கோசம் போட்ட எத்தனையோ பேரைக் கண்டிருக்கிறோம், உலகத்தமிழர்கள் முதல் உலகத்தில் இல்லாத தமிழர்கள் வரைக்கும் இப்படி ஆட்டம் போட்டவர்கள் எல்லாம் புலிகளாலேயே ஒதுக்கப்பட்டு அட்ரஸ் இல்லாமல். அடங்கிப் போனதையும் நாம் அறிவோம், அதை நீவிர் அறியீரோ உமது கூத்தும் எத்தனை நாளைக்கு என்பதையும் நாங்கள் பார்க்கத் தானே போகிறோம்,

ஏதோ உம்முடைய கவிதை புலிகளுக்கு விளங்கியபடியால் உம்மைக் கவிஞராக்கிக் கொர்;டிருக்கிறார்கள், இந்தப் பக்கமாய் உம்மை யாரும் கணக்கெடுக்காததால். அங்கே போய் ஆஸ்தானக் கவிஞராகி விட்டீர், எங்களுக்கு உமது கவிதையின் தரம் புரியாததற்கு நாங்கள் என்ன பாவம் பண்ணித் தொலைத்தோம்.

அதுசரி. நிதர்சனம் துரோகி என்றபோதே. வன்னியின் எமதூதர்கள் உமது புல்லையும் உருவியிருந்தால். இன்று இப்படி விலா அடிக்க முடியுமோ உமது குடும்பமும் இன்று பொங்கியிருக்குமோ

கடைகளைப் பூட்ட வைத்து. பஸ்ஸில் டவுன்ஸ்வியூ ஷமந்தைவெளிக்கு ஏற்றி வந்து கொட்டி இத்தனை படையைக் காட்டி என்ன பயன்? புலிகளை ஒரு கை பார்க்கும் நசனல் போஸ்ட் பத்திரிகை கார்ப்பர் அரசைப் பாராட்டி ஆசிரிய தலையங்கமே எழுதி விட்டது, ஐம்பது பேர் ஷதீபெத்துக்கு ஆதரவாய் கூடினால் கூட முன்பக்கச் செய்தி போடும் ரொரன்டோ ஸ்டார் ;ஷ்ம்,,, ஏன் நாயே என்று கேட்கவில்லை, ஓரு லட்சம் பேர் கூடிய பொங்கல் பற்றி. கனடிய ஊடகங்களில் எந்த அசுமாத்தமும் இல்லை,

ஆனால். சுய இன்பத்துக்கு குறைச்சலில்லை, இதோ. கனடிய அரசுக்கு எங்கள் பலத்தைக் காட்டி விட்டோம் என்று முழக்கமிட்ட புலி வேசம் போட்ட நரிகளுக்கு எல்லாம். கிடைத்த பலத்த கூச்சலும் கரகோசமும் இன்னும் கொஞ்ச நாளைக்குப் பிழைப்புக்கு மண்;; விழாது என்ற திருப்தி,

பிக்குகளும். தமிழகத்துத் திருட்டுச் சாமியார்களும் அணிந்து வரும் ,,, ஏன் ரொறன்ரோவின் டாக்ஸிகளும் ஓடித் திரியும் சிவப்பும் மஞ்சளும் பூசி நீங்கள் அடித்த கூத்து. கண்களை மூடிக்கொண்டு பால் குடிக்கும் பூனை உலகம் இருண்டு விட்டதாக நினைத்த கதையாக. முழு உலகத்தையும் ஸ்தம்பிக்கத் செய்து விட்டதாகக் கனவு கண்;ு கொண்டிருக்கிறீர்கள்,

கனடாவில் பெரும்பான்மைப் பலம் இல்லாமல் மயிரிழையில் தொங்கிக் கொண்;டிருக்கும் இந்த அரசு உங்களைத் தடை செய்தது, இப்போது உங்கள் பொங்குதமிழைப் பார்த்து தொடை நடுங்கி விட்டதா?

இந்தப் பொங்குதமிழ்க் கூத்துக்கள் எல்லாம் இன்று நேற்றா தொடங்கின? கொஞ்சநாளாகத் தானே இந்தக்கூட்டம் பொங்கிக் கொண்;டிருக்கிறது, இந்தப் புஜபலத்தைக் காட்டிய பின்னர் தானே. புலிகள் மீதான தடை. புலிகளின் பினாமிகள் மீதான தடை. புலிகளின் முகவர்கள் கைது என்று நடந்து கொண்;;டிருக்கின்றன, இவர்களின் பலத்தைப் பார்த்து. இந்த மேல்நாட்டு அரசுகள் எல்லாம் இவர்களின் ஷகை வைக்கப் பயந்து கொணடா இருக்கின்றன

தங்கள் நாட்டுச் சட்டதிட்டங்களை மீறிய குற்றச்சாட்டுக்களில் இன்று பல புலிவால்கள் சிறை சென்ற செம்மல்களாக கம்பி எண்கிறார்கள், பிரான்சில் கம்பி எண்ணும் இந்த சிறை சென்ற செம்மல்கள்,, சே,, புலி பாசையில் மனித நேயப் பணியாளர்கள்,,, பற்றிய கதையே காணோம், இத்தாலியில் பொங்குதமிழ் முடிந்த கையோடு நித்திரைப் பாயில் அமுக்கப்பட்ட உண்;டியல் போராளிகள் இன்னமும் வெளியே இல்லை, அவுஸ்திரேலியால். இங்கிலாந்தில். சுவிஸில் எல்லாம் சிறை மீண்;;ட செம்மல்கள் வாலைச் சுருட்டிக் கொண்டு கோடு வாசல் ஏறி அலைகிறார்கள், அமெரிக்காவிலும். செம்மல்களுக்கு குறைவில்லை, போதாக்குறைக்கு அமெரிக்கா மற்ற நாடுகளிலிருந்து கைது செய்து நாடு கடத்த வைக்கிறது,

ஐயா. இதெல்லாம் இந்த நாட்டுச் சட்டங்கள் பற்றிய பிரச்சனை, வன்னிக் காட்டு தேசவழமைச் சட்டங்கள் இங்கே செல்லுபடியாகாது, அதையும் விட. கொமிக்கல் இளந்திரையன் அண்;;டப்புழுகுப் பொய்கள் இங்கே செல்லாது,

புலிகளின் அலுவலகங்களையும் பினாமி அமைப்புகளினதும் வியாபார நிலையங்களினதும் மீதும் பொலிசார் தேடுதல் நடத்தி. புலிகளின் தலைவர் எழுதிய கடிதங்கள். பணம் சேர்த்த பட்டியல் உட்பட்ட ஆதாரங்கள் எல்லாவற்றையும் காட்டிய பின்னாலும். சீ,,சீ,, இது வெறும் தமிழர் அமைப்பு. புலிகளுக்கும் எங்களுக்கும் சம்பந்தமேயில்லை என்று இவர்கள் சொல்லும் பொய்யை. இளிச்சவாய் மந்தைக் கூட்டம் நம்பும், அதை அரசாங்கமும் பொலிசாரும் நம்ப வேண்டும் என்று என்ன கட்டாயம் இதற்குள் இந்தப் பொய்களை உயர்நீதிமன்றம் நம்பும் என்று நீதிமன்றம் செல்லப் போகிறார்களாம்?

உங்களைப் புத்திசாலி என்று நினைப்பதில் தப்பேயில்லை, ஆனால். மற்றவனை முட்டாள் என்று நினைக்காதீர்கள்,

இப்போது வழக்கு நடத்தக் காசு சேர்ப்பு நடக்கிறது, தடை செய்தாலும் உர்;டியல் தூக்க ஏதோ வழி பிறந்து கொண;டு தானே இருக்கிறது,

ஆனால். இன்றைக்கு இந்த பொங்குதமிழ் விழாக்களுக்கு முக்கிய காரணமும் உண்டு, இதுவரை காலமும் இறுதி யுத்தத்திற்கும் ஏவுகணை வாங்கவும் என்று கெஞ்சியும் மிரட்டியும் பறித்த பணத்தின் இருபது வீதக் கமிசனை நம்பி. இங்கே ஒரு கூட்டம் மாளிகை வீடும். ஆடம்பரக் காரும் வாங்கி வலம் வந்து கொண்டிருக்கிறது, இப்போது தடை வந்தவுடன் பிழைப்பில் மண்; விழுந்து விட்டது, மோட்கேஜ் கடனுக்கும் கார்க் கடனுக்கும் பொறுமை காக்க. இது என்ன தமிழீழ வைப்பகமா வருமானத்தில் துண்டு விழுந்ததால். குடையும் கொடியும் விற்கவும். விழாத் தயாரிப்புச் செலவுகளில் கல்லாவில் கை வைக்கவுமாய் சந்தர்ப்பம் வேண்டி நடத்ததப்பட்டது தான் இந்த பொங்குதமிழ் விழாக்கள், இத்தனை ஆயிரம் செம்மறிகளின் சட்டைப் பைகளை வெறுமையாக்கி உணர்ச்சி ஊட்டியது எல்லாம் மார்க்கத்து வீடுகளின் மோட்கேஜ் கட்டுவதற்குத் தான், அதில் கொஞ்சம் வாய்க்கால் வழியோடு வன்னிக்கும் ஆங்கே பொசியுமாம்?

இந்தப் பொங்குதமிழ் நிகழ்ச்சிகளில் எல்லாம் எப்போதுமே ஒரு பிரதம விருந்துக் கூட்டம் கலந்து கொள்ளும், தமிழக அரசியலின் செல்லாக்காசுகள். தமிழக சினிமாவின் வங்குரோத்துகள். தமிழ்த் தேசிய அமைப்பின் கொத்தடிமைகள். தொலைபேசி. தொலைக்காட்சி மூலமாய் மந்தை மேய்க்கும் வன்னிக் கூட்டம் என்றெல்லாம் இந்த மந்தைகளைக் குசிப்படுத்தும் கூட்டத்திற்கு என்றுமே குறைச்சலில்லை, வந்த கூட்டமும் ஏதோ புதிய உண்மையை உரைப்பது போல. தலைவர் திட்டம் வைத்திருக்கிறார் என்ற கதையை அவிழ்த்து விடுவதுண்;;டு, ஏழெட்டு வருடங்களாய் இவர்கள் நடத்தும் இந்த களியாட்டங்களில் பேசுவோர்கள் ஷதலைவர் ஈழம் காண்பார் என்பதை விட. புதிதாய் என்ன சொல்லியிருக்கிறார்கள் இவர்கள் சொன்ன இந்தக் காலத்துக்குள் கிழக்கும் போய். மன்னாரும் போய். கருணாவும் போய். மேல்நாடு எல்லாம் புலிகள் பயங்கரவாத அமைப்பாக தடை செய்யப்பட்டும் புலி முகவர்கள் கைது செய்யப்பட்டும் என்று தானே முன்னேற்றம் கண்;டிருக்கிறது,

கோப்பெருந்தேவி கோபம் கொண்;ு மாளிகைக் கதவைப் பூட்டிக் கொண்டாள் என்பதற்காய். சோழன் ஒட்டக்கூத்தனை அனுப்பப் போய். ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ் என்று தேவி இன்னொரு பூட்டுப் போட்டது போல. இவர்கள் பொங்கப் பொங்க முடிச்சு இறுகிக் கொண்;;டே போகிறதே தவிர. இவர்களின்; ஷபடை பலத்தைக் கண்;;டு இந்த அரசாங்கங்கள் எல்லாம் கை கட்டி வாய் பொத்தி வன்னிக்குச் சேவகம் செய்வதாய் தெரியவில்லை,

இதெல்லாம் வெறும் சுய இன்ப கைங்கர்யங்கள் தான், மிரட்டல்கள் மூலம் கடைகளைப் பூட்ட வைத்து. தங்கள் பினாமி ஊடகங்கள் மூலமாய் உணர்வுகளைக் கிளப்பி. போதாக்குறைக்கு உல்லாச வண்டிச் சேவையும் செய்தால். பொழுதுபோகாத தமிழன். வேலை வெட்டி இல்லாத தமிழன் எல்லாம் இன உணர்வு கொண்;டு பொங்கியெழாமல் என்ன தூங்கிக் கொண்டா கிடப்பான்?

இத்தனை பொங்கியும் இம்முறை. கலியாண வீடுகளுக்கும் சாமத்தியச் சடங்குகளுக்கும். கோட்டுப் போட்ட கனடியத் தமிழ்க் ஷகம்யூனிட்டி லீடர்களுடன் ஆஜராகி. நான்றி. வானக்கம் சொல்லும் கனடிய அரசியல்வாதிகள் யாருமே கலந்து கொள்ளவில்லையே

சும்மா தமிழர்கள் சேர்ந்து கொடி பிடித்தால் ஈழம் கிடைக்கும் என்று யார் சொன்னது? ஐரிஸ்; காரர்கள் புனித பற்றிக்ஸ் தின விழா செய்கிறார்கள், வட அயர்லாந்து இராணுவத்தின் கொடிகளையா தூக்கிச் செல்கிறார்கள் இந்தியர்கள் தேர்த்திருவிழா நடத்துகிறார்கள், ஏன் சீக்கியர்கள் விழாக் கொண்டாடுகிறார்கள். எல்லா அரசியல்வாதிகளையும் அழைக்கிறார்கள், அவர்கள் சீக்கிஸ்தான் ஜிந்தாபாத் என்று கத்துகிறார்களா? அவர்களின் கூட்டம் இதைவிடப் பெரியது,

சரி. இன்றைக்கு தமிழ் மக்களின் அவல நிலைக்கு புலிகளே காரணம் என்ற உண்;;மையை உணர்ந்து கொள்ளும் அளவுக்குத் தான் உங்களுக்கு அறிவு வளம் இல்லை, தமிழ் மக்களுக்குத் தீர்வு கிடைக்கும் சந்தர்ப்பங்களை எல்லாம் சிதறடித்து. உள்ளதையும் கெடுத்த கொள்ளிக் காரன் பற்றிப் புரிந்து கொள்ளவும் சிந்தனை வளம் கிடையாது, இனஅழிப்பு என்று நீங்கள் பாடும் கூக்குரலுக்கு சர்வதேச ச்முகம் அனுதாபத்துடன் திரும்பிப் பார்க்காததற்கு. புலிகள் சிங்கள மக்கள் மேல் நடத்தும் பயங்கரவாதத் தாக்குதல்கள் தான் காரணம் என்ற பகுத்தறிவு கூட உங்களுக்குக் கிடையாது, சர்வதேசமே பயங்கரவாதத்தை வெறுக்கும் நேரத்தில் தலைவரின் இந்த நடவடிக்கைகள் தான் பின் லாடனைப் போல. உங்கள் தேசியத் தலைவரையும் பயங்கரவாதியாகக் கணக்குப் போட்டு வைத்திருக்கிறது என்பதையும் விளங்கிக் கொள்ள முடியவில்லை, மகிந்த அரச பதவிக்கு வருவதற்கு காரணமே தலைவர் தமிழரை வாக்களிக்கத் தடுத்தமை தான் என்பதோ. மாவிலாறின் தண்ணீரைப் பூட்டி வலுச்சண்டைக்கு அழைத்தது தான் இன்றைய யுத்தத்திற்குக் காரணம் என்பதையோ உங்களால் விளங்கிக் கொள்ள முடியாது என்பதும் தெரியும்,

அட. அரசின் அடக்குமுறைகளும் இராணுவ நடவடிக்கைகளும் தமிழ் மக்களின் அன்றாட வாழ்வையும் எதிர்காலத்தையும் எவ்வளவு தூரம் பாதிக்கின்றது என்பதை எடுத்துக் காட்டி அனுதாபம் தேடுவோம் என்ற புத்திகூடவா இல்லை, தமிழ் மக்களுக்கு ஒரு நியாயமான அரசியல் தீர்வைத் தரக் கூட அரசு மறுக்கிறது என்பதை எடுத்துக் காட்டுவோம் என்று கூட இல்லை, உலகம் முழுவதும் பயங்கரவாதி என்று முத்திரை குத்தி. தடை செய்யப்பட்ட இயக்கத்தின் தலைவரின் படத்தைத் தலைக்கு மேல் தூக்கிக் கொண்டு உறுதிப் பிரகடனம் எடுத்துக் கொண்டால். சர்வதேச அங்கீகாரம் கிடைக்கும் என்று யார் சொன்னது? தமிழர் விழா என்ற போர்வையில் சேட் போட்டுச் சிரித்துக் கொண;டிருக்கும் சூரியதேவனின் படத்தை வந்தவர்கள் கையில் திர்pத்து தலைக்கு மேல் தூக்கினால் தடை நீக்கப்படும் என்று எவன் சொன்னான்

உலகம் முழுவதும் ஒலிம்பிக் சுடர் சென்ற போதெல்லாம். திபெத்தியர்கள் ஆர்ப்பாட்டம் செய்ததையும் அவர்களின் உரிமைக்குரலுக்கு மேல்நாட்டவர்கள் உதவிக் குரல் எழுப்பியதையும் தொலைக்காட்சிகளில் கண்;;டிருக்கிறோம், அதிலும் திபெத்தியர்களை விடவும். அவர்களின் உரிமைக்குரலுக்கு ஆதரவு வழங்கும் மற்ற இனத்தவர்களே அதிகம்,

சொந்த அரசியல் லாபத்துக்காக இவர்களின் மேடைகளில் தோன்றும் அந்நாட்டு அரசியல்வாதிகள். பொதுஅரசியலில் சேராத உதிரிகள் மட்டும் தானே இவர்களின் மேடைகளில் தோன்றுகிறார்கள், ஏன் வேற்றினப் பொதுமக்கள் இவர்களின் பொங்குதமிழ் நிகழ்வுகளில் கலந்து கொள்வில்லை?

நேபாளத்தில் திபெத்தியர்களின் ஆர்ப்பாட்டங்களில் பொலிசாரும் இராணுவத்தினரும் அவர்களை இழுத்துச் செல்வதைக் கண்;;டிருக்கிறோம், அவ்வாறான போராட்டத்திற்கு இந்த தமிழர்கள் தயாரா?. இவர்களைப் பொறுத்தவரை. தலைவர் ஈழம் பெற்றுத் தருவார். இவர்கள் செய்ய வேண்டியதெல்லாம் பணம் கொடுப்பதும். பொங்கி எழுவதும் மட்டுமே, இதுதான் இவர்களின் தமிழ் உணர்வின் இலட்சணம்,

வெள்ளையன் உப்புக்கு வரி போட்டான் என்பதற்காக. உப்புச் சத்தியாக்கிரகம் செய்த மகாத்மாவுடன் ஆயிரக்கணக்கானோர் சிறைக்கு இழுத்துச் செல்லப்பட்டார்களே,,, தூக்குமேடை பஞ்சு மெத்தை என்ற கூச்சலுடன் சிறை செல்லத் தயார் என்ற நிலையில் நீங்கள் எப்போதாவது போராட்டம் நடத்தியிருக்கிறீர்களா?

உங்களைப் போல. மந்தைகள் போல திரளாமல். உலக மயமாக்கல் ஏழைகளைப் பாதிக்கும் என உணர்;ந்து. திரண்டெழுந்து. தடைகளையும் உடைத்துக் கொண்டு இந்த பெருநாடுகளின் பொருளாதார மாநாடுகளின் போதெல்லாம் ஒரு கூட்டம் பொலிசாரோடு மோதிக் கொர்;டு. சிறை செல்லும் பயமேயின்றி தன் கருத்தை நியாயப்படுத்த முயல்கிறதே,,, அப்படியான ஒரு போராட்டத்திற்கு நீங்கள் எப்போதாவது தயாராக இருந்;திருக்கிறீர்களா?

புலிகள் மீதும் உலகத் தமிழர் மீதுமான கனடியத் தடை அநீதி என்று நினைத்திருந்தால். அதற்கு எதிராகப் போராட அனுமதி கேட்டு. அது மறுக்கப்பட்டால். தடையையும் மீறி ஒன்று திரண்டு. ரொறன்ரோவை ஸ்தம்பிக்கச் செய்திருந்தால் ஊடகங்களினதும் பொதுமக்களினதும் கனடிய அரசியல் வாதிகளினதும் கவனத்தை ஈர்த்திருக்க முடியும், ஐ,நா வரைக்கும் உங்கள் கருத்தைக் கொண்டு சென்றிருக்க முடியும், உங்களுக்கு நாங்கள் தலை வண்ங்கியிருப்போம்,

உங்களை தமிழகத்திலிருந்து வந்து வீறு கொள்ள வைக்கும் வழிகாட்டிகள் போல. பஸ் எரிப்பு. கட்டடத்திற்கு கல்வீச்சு. டயர் எரிப்பு. கடை உடைப்பு என்றெல்லாம் மறத்தமிழ்ப் போராட்டம் செய்யும்படி உங்களை எல்லாம் நாங்கள் கேட்கவில்லை, அறவழிப் போராட்டம் பற்றி உங்களுக்குத் என்ன தெரியுமோ தெரியாது, ஆனால். ஷகிறிமினல் றெக்கோட் இருந்தால் சிட்டிசனுக்குப் பங்கம் என்ற மகத்தான உண்;;மை உங்களுக்கு நன்றாகவே தெரியும்,

உங்கள் கருத்தை சர்வதேச அரங்கிற்கு எடுத்துச் செல்வதற்கு பெரிய கூட்டமே தேவையில்லை, கனடாவில் ஸீல்கள் எனப்படும் மிருகங்களை குருரமான முறையில் கொல்வதை கண்;;டித்த ஆர்ப்பாட்டம் உங்களைப் போல. பொங்கி எழவில்லை, ஆனால். அந்தப் போராட்டத்தினால் கனடாவிலிருந்து கடல் பொருட்களை இறக்குமதி செய்வதை நிறுத்துவது பற்றி ஐரோப்பிய சமுகம் ஆராயும் அளவுக்கு சென்றிருக்கிறது, திபெத்தியர்கள். பலுன் கொங் எனப்படும் சீனமதப் பிரிவினர் மீது நடத்தப்படும் அடக்குமுறைகளுக்கு எதிரான போராட்டம். அழகுசாதனப் பொருட்களை மிருகங்களில் பரீட்சிப்பதற்கு எதிரான போராட்டம். சமீபத்தில் எரிபொருள் விலை உயர்வை எதிர்த்து ஐரோப்பாவின் பாரஊர்தி ஓட்டுனர்களும மீனவர்களும் நடத்திய போராட்டம் என்றெல்லாம் பல்வேறு சிறிய சிறிய போராட்டங்கள் எல்லாம் வெற்றி அடைந்ததற்கு காரணம் அவர்கள் உங்களைப் போல பொங்கி எழுந்ததால் அல்ல. தகுந்த முறையில் மக்களையும் ஊடகங்களையும் அரசியல்வாதிகளையும் வர்த்தகப் பிரமுகர்களையும் சென்றடைந்ததால்தான்,

டோனில் டார்புர் பகுதியில் நடைபெற்ற இனஅழிப்புக்கு எதிராக உலகெங்கும் அந்த மக்கள் உங்களைப் போல. தங்கள் தலைவரின் கொடியைத் தூக்கிச் செல்லவில்லை, உங்களைப் போல ஆயிரக் கணக்கில் அவர்கள் மேற்குநாடுகளிலும் இல்லை, மனித உரிமை ஆர்வலர்களும். கஷாலிவூட் பிரபலங்களும் என அந்த அவலத்தில் அக்கறை கொண்;;டு தகுந்த முறையில் நடத்திய போராட்டம் தான் இன்று டோன் ஜனாதிபதிக்கு இன ஒழிப்பு. மனிதத்திற்கு எதிரான குற்றம் புரிந்தமை. யுத்தக் குற்றங்களுக்காக சர்வதேச நீதிமன்றத்தில் வழக்குத் தாக்குதல் செய்யப்பட்டிருக்கிறது,

உங்களால் முடிந்தது என்ன? பிரான்சிலும் சுவிசிலும் லெட்டர் கெட் மனித உரிமை அமைப்பு நடத்தும் கோட்டுப் போட்ட பம்மாத்துக் கூட்டம் தமிழில் விடும் அறிக்கையைப் புதினத்தில் பார்த்து. ஐ,நா அமைதிப்படையை அனுப்பி. மகிந்தவை கூண்;;டோடு கைலாயம் கொண்;டு போய் சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தப் போகிறது என்று கனவு கண்டு கொண்டிருக்கிறீர்கள்,

நீங்களோ. புலிகளின் நேரடி அமைப்புகள் மூலமாய் அனுமதி பெறப் பயந்து. பினாமிகளைக் கொண்டு. கலை நிகழ்ச்சி. சுனாமி நினைவு என்றெல்லாம் பொய்க் காரணம் காட்டி அனுமதி பெற்று. இவ்வளவு கோல்மால் விட்டு ஆட்களைக் கொணடு வந்து அவர்கள் கையில் தலைவரின் படங்களையும் திர்pத்து விட்டு. ஊடகவியலாளரோ பொலிசாரோ என்ன புலிகளின் படத்துடன் ஆடுகிறார்கள் என்று கேட்டால் ஐயோ. சிவசத்தியமாய் காணேலை என்று யேசுவை மறுதலித்த பேதுரு மாதிரி. புலிகளுக்கும் உங்களுக்கும் சம்பந்தமேயில்லை என்று மறுக்கின்ற நீங்கள்.புலிகளின் தடைக்கு எதிராக எங்கள் பலத்தைக் காட்டி விட்டோம் என்று யாருக்கையா பீலா விளையாட்டுக் காட்டுகிறீர்கள் ஷபறவை முனியம்மாக்களின் குலுக்கல் நடனம் ஆடி விட்டு. லட்சக்கணக்கில் திரண்டோம். சர்வதேசம் அங்கீகரிக்க வேண்;டும் என்று ஏன் பீற்றிக் கொள்கிறீர்கள்

இத்தனை ஆயிரமும் கூடி. வன்னிக் காட்டு வைரவருக்கு அரோகரா என்;று கும்பலில் கோவிந்தா போட்டது தான் மிச்சம், இப்போது எல்லாமே கோவிந்தா என்று நிலைமை ஆகி விட்டது,

இதோ லட்சக் கணக்கில் கலந்து கொண்டோம் என்று மார் தட்டிக் கொள்வதன் மூலம் நீங்கள் கனடிய அரசை மிரட்டவும் இல்லை, சர்வதேச சமுகத்தை அச்சுறுத்தவும் இல்லை, உங்களை நீங்களே ஏமாற்றிக் கொண்டிருக்கிறீர்கள், நீங்களே பொய்யைச் சொல்லி அதை நீங்களே நம்பி. நம்ப மறுக்கும் மற்றவர்களை துரோகிகள் என்று கொண்டிருக்கிறீர்கள்,

உங்கள் புஜபல பராக்கிரமத்தைக் காட்டி தடையை நீக்கலாம் என்ற உங்கள் அறியாமையை எண்ணி அழுவதா சிரிப்பதா என்றால். உங்களைச் சொல்லி என்ன பயன்? உங்கள் தலைவரே. துரோகிகளுக்கு மண்;டையில் போட்டு. ஈழத்தை அடிச்சுப் பறிப்பம் என்ற அரசியல் தெளிவோடு இருக்கும் போது. நீங்கள் எம்மாத்திரம் உங்களை எப்படி நாங்கள் குறை சொல்ல முடியும்? நீங்கள் என்ன வைச்சுக் கொண்டா வஞ்சகம் பர்ண்ணுகிறீர்கள் சட்டிக்குள் இருந்தால் தானே அகப்பைக்குள்ளும் அகப்படும்?

போராட்டம் என்பது வெறும் ஆயுதம் தாங்கிய தாக்குதல்கள் மட்டுமல்ல. அதற்கு ஒரு அரசியல் பரிமாணமும் இருக்கின்றது என்ற உண்;;மை உங்களுக்கு எப்போது தான் புரியப் போகிறதோ? வெறுமனே குண்டுச் சண்டிக்குள் புலி ஓடிக் கொண்டு. இந்தா காட்டியிட்டம் எங்கட பவரை, இப்ப என்ன செய்யப் போகினம் எண்டு பாப்பம் என்று பெருமையோடு சவடால் சவால் விட்டுக் கொண்டு எல்லோரும் வீடு போய்ச் சேர்ந்திருப்பீர்கள்,

உங்களுடைய அரசியல் தெளிவும் எங்களுக்கு நன்றாகவே தெரியும், புலிகள் அடி வாங்கும் போது. ஐயோ. இந்தியா தலையிட வேண்;;டும். எளியவன் நோர்வையை வன்னிக்கு வர விடுறான் இல்லை சர்வதேச சமுகம் இந்த அநியாயத்தைப் பாத்துக் கொண்;டு மௌனமாய் இருக்குதோ என்று ஒப்பாரி வைக்கும் நீங்கள். தலைவர் காக்கா எச்சம் போட்ட மாதிரி விமானத்தில் குண்டு வீசியவுடனும் யாராவது பெரிசுகளைப் போட்டவுடனும் இந்தியா தன்ரை அலுவலைப் பாக்கட்டும். சர்வதேச சமூகம் சிங்களவனோட சேர்ந்து எங்களை அழிக்கப் பாக்குது நோர்வே போன இடமெல்லாம் விடுதலைப் போராட்டம் சிதைஞ்சிருக்காம் எங்கட தலைவருக்கு எந்த நேரத்தில என்ன செய்ய வேண்டும் எண்டு தெரியும் என்றும் இன்ப அதிர்ச்சியில் ஆனந்தக் கூத்தாடுவதும் தானே உங்கள் அரசியல், இப்படியே கர்ம் வாதம். கர்ம் பித்தம் என்று நாக்கைப் பிரட்டுவது தவிர. நீங்கள் செய்தது என்னூ கண்டது என்ன?

சரி. உங்கள் தலைவர் திட்டம் வைத்திருக்கிறார். வெட்டிப் புடுங்குவார். பொட்டம்மான் போட்டுத் தள்ள தலைவர் தமிழீழம் காண்பார் என்று நீங்கள் முழுமனதுடன் விசுவசிப்பீர்களாயின். சர்வதேச அங்கீகாரமும் உங்களுக்குத் தேவையில்லை, சர்வதேசத் தடையோ. சதிவலையோ ஒன்றும் செய்து விட முடியாது,

தலைவர் புலிகளின் விமானப்படை மூலம் சிங்கள இராணுவத்தை நிர்முலமாக்கி. துவம்சம் செய்வார். தவிடு பொடியாக்குவார் என்று பரிபூரர்மாக நம்புஜவீர்களாயின். இந்தியா தலையிட வேண்டும் என்று கூக்குரல் எழுப்பவும் தேவையில்;லை, இலங்கை அரசுக்கு இந்தியா வழங்கும் இராணுவ உதவி பற்றிக் கவலைப்படவும் தேவையில்லை,

கரும்புலிகள் மூலம் தலைவர் சிங்கள தேசத்தின் அரசியில் தலைமையை கொன்று ஒழித்து ஈழம் பெற்றுத் தருவார் என்று சந்தேகத்துக்கு இடமின்றி நினைப்பீர்களாயின். உங்களைக் காப்பாற்ற நோர்வே வன்னி வர வேண்டிய அவசியமும் இல்லை, நோர்வே அமெரிக்க கையாளாக நயவஞ்சக சூழ்ச்சி செய்வதாக அச்சம் கொள்ளத் தேவையும் இல்லை,

எதற்கு இந்த களியாட்டத் திருவிழாக்கள்? காரணம் இருக்கிறது, நீங்கள் இந்தியா வந்து காப்பற்ற வேண்;;டும் என்றும் நோர்வே வந்து காவாந்து பண்ண வேண்;ும் என்றும் இத்தனை கூச்சலும் கூக்குரலும் போட்டு அழைப்பது. தலைவரின் தீர்க்கதரிசனத்திலும் வழிகாட்டலிலும் உங்களுக்கு நம்பிக்கை இழந்து விட்டது என்பதால் தானே? தலைவர் கூணடோடு கைலாயம் போகப் போகிறார் அல்லது பங்கரோடு பரலோகம் போகப் போகிறார் என்று உங்களுக்கு அடிவயிற்றில் பயம் பற்றிக் கொண்டிருக்கிறது,

தலைவர் பேச்சுவார்த்தை என்ற பொறியை தகர்த்து. சர்வதேசத்தின் சதிவலையை உடைத்துக் கொண்;;டு வெளியே வந்து விட்டார் என்று பீற்றிக் கொண்ட உங்களுக்கு இன்றைக்கு சர்வதேசம் அங்கீகரிக்க வேண்;டும் என்று கேட்க வெட்கமாயில்லை

நான்காவது இராணுவத்தை விரட்டியடித்தோம் என்று வீம்பு பேசிக் கொண்;;ட உங்களுக்கு. இந்தியா இராணுவ உதவியை நிறுத்த வேண்;;டும் என்று கெஞ்சுவதற்கு கூச்சமாயில்லை
ஏழெட்டு வருடங்களாகத் தான் பொங்கி எழுகிறீர்கள் ஒரு லட்சம் பேர் துள்ளிக் குதித்து. குதியம் குத்தி. குத்தி முறிந்து எதைச் சாதித்தீர்கள்?

தாயகம் தொடரும்

தேணி இணையம்

No comments: