Saturday, April 5, 2008

2 முகங்களுடன் அதிசய குழந்தை: தெய்வமாக நினைத்து கிராம மக்கள் பூஜை


நகரி, ஏப். 5-
உத்தரபிரதேச மாநிலம் கவுதமபுத்த மாவட்டம் சைனி கிராமத்தை சேர்ந்தவர் வினோத்குமார் சிங். விவசாயி. இவரது மனைவி சுஷ்மா.இவர்களுக்கு கடந்த மாதம் 11-ந்தேதி அங்குள்ள ஆஸ்பத் திரியில் பெண் குழந்தை பெற்றார். அந்த குழந்தைக்கு 2 முகம், 4 கண், 2 மூக்கு, 2 வாய் இருந்தது. அதைப் பார்த் ததும் சைனி கடும் அதிர்ச்சி அடைந்தார். அவரது குடும்பத் தினரும் இரட்டை முக அதிசய குழந்தையைப் பார்த்து மிரண்டு போனார்கள்.

பொதுவாக இதுபோல் பிறக்கின்ற குழந்தைகள் பிறந்த சில மணி நேரத்திலேயே இறந்து விடுவதுண்டு.ஆனால் இந்த குழந்தை நல்ல உடல் நலத்துடன் இருக்கிறது. இதனால் அதை டாக்டர்கள் தினமும் பரிசோதனை செய்து தேவையான மருத்துவ உதவி கள் செய்து வருகிறார்கள்.

சுஷ்மாவின் குடும்பத்தினர் அந்த குழந்தைக்கு `லாலி' என்று பெயரிட்டனர். லாலியை அப்பகுதி மக்கள் தெய்வமாக நினைக்கிறார்கள். தினந்தோறும் சுஷ்மாவின் வீட்டுக்கு திரண்டு வந்து `லாலி'யைப் பார்த்து பயபக்தி யுடன் கும்பிடுகிறார்கள். காணிக்கைகளும் வாரி வழங்குகிறார்கள். சிலர் தேங்காய், பழம் கொண்டு வந்து லாலியின் அருகில் வைத்து பூஜை செய்கிறார்கள்.இதனால் சுஷ்மாவின் வீடு தற் போது கோவிலாகவே மாறி விட்டது.

தனது குழந்தையை கிராம மக்கள் வழிபடுவதை கண்டு சுஷ்மா மகிழ்ச்சி அடைந்துள் ளார். அவர் கூறும்போது, "என் வயிற்றில் கடவுளின் உருவமான `லாலி' பிறந்திருப் பது பெருமையாக உள்ளது. அவளை நான் மட்டுமல்ல எனது ஊர் மக்களும் தங்கள் குழந்தையாக எண்ணி மகிழ் கிறார்கள். அதை நல்ல முறை யில் வளர்ப்பேன். 2 நாளைக்கு ஒரு தடவை லாலியை டாக்டரிடம் சென்று காட்டி வருகிறேன்'' என்றார்.

No comments: