Monday, March 2, 2009

தேவையில்லாப் புலிகளுக்காக.. தேறாமல் போகும் உயிர்களே.. (கவிதை)

தனிநாடு தேவையென்ற தருணமொன்று இருந்ததுவே..
தருவிக்க எழுந்ததுவே, தமிழினம் முழுவதுமே..
இயக்கம் என்றார், அமைப்பு என்றார்,
ஆளாளுக்கு ராஜா என்றார்.
தெருச்சண்டை பிடித்தார்கள்,
தேடித் தேடி அடித்தார்கள்,
குண்டுவைத்து வெடித்தார்கள்,
கொடூரமாக இறந்தார்கள்..
எதிரியல்ல, எம்மவர் தான்
காரணம் புலிகள் தான்..

எம்மினமே என்றாலும், எதிரியேதான் என்றனரே,
புலிகள் மட்டுமே தான் தமிழீழ புதல்வர்கள் என்றனரே,
மாற்றுத் தமிழ் கட்சியெல்லாம் மண்டியிட வேண்டினரே,
தரங்கெட்ட செய்கைகளால் தண்டித்தும் பார்த்தனரே,
தமிழன் என்றல்ல, மனிதன் என்றுகூடப் பாராமல்
பாடைகள் பல கட்டினரே,
பாருலகே பார்த்து நிற்க பரிவின்றிக் கொன்றனரே,
எதிரியை அல்ல, எம்மவரை.. சுத்தத் தமிழரினை.

தமிழர் தோல் போர்த்திய புலிகள்
தரங்கெட்டுப் போயினரே, தம்மினத்தவரையே
தட்டிக் கழித்தனரே, தள்ளியும் வைத்தனரே,
ஆதிக்க வெறி பிடித்தனரே, அடக்குமுறை கையாண்டனரே…
கதிகலங்கியது, பீதி பிடித்தது, பயமும் கொழுத்தியது
எதிரிக்கல்ல, எம்மவர்க்கு, தூய தமிழருக்கு.

உழைப்பை பறித்தனர், இளம் பிள்ளைகளைக் கடத்தினர்.
விதவைகளை நிறைத்தனர், உண்மை வீரர்களை தாட்டினர்.
எதிரியில் அல்ல, எம்மவரில், தூய தமிழர்களில்.

ஜனநாயகம் தெரியாது, ஜன உரிமைகளும் புரியாது,
எதிரிக்கும் சரி, எம் பெயர் கூறும் புலிக்கும் சரி.
அழிவது நம்மினமே என்றாலும் ஆனந்தம் கொள்வர்,
அவர்கள் வெற்றிக்காக எதையும் செய்வர்..

பெற்றதுகள், விட்டதுகள், பெரிசுகள், சிறிசுகள் எல்லாம்
பெரும் செல்லில் மாண்டாலும்,
துன்பமில்லை, துளி துயருமில்லை,
துடுக்காய் அறிவித்தல் விட
துணுக்குக் கிடைத்த இன்பம் தவிர.
இவர்கள் தானய்யா, எம்மவர்கள்
தமிழீழ புதல்வர் என்று கூறும் புலியவர்கள்..

காலம் மாறிவிட்டது, கடவுள் விழித்தும் கொண்டது.
கற்பனைகள் கடந்து விட்டது,
கற்ற சமூகம் களிப்பும் கொண்டது.
இனி பொய் கூறமுடியாது, புகழ் தேட முடியாது,
கொல்லவும் முடியாது, நின்று வெல்லவும் முடியாது.
உண்மைத் தமிழன் அரசியலில் இறங்கி விட்டான்,
நல்ல புரிதல்கள் தெரிந்து கொண்டான்..

புலிகள் தேவையில்லை, பொய்ப் புழுகுகளும் தேவையில்லை.
வேண்டும்… வேண்டும்… பெரும் வாக்குகள் வேண்டும்.
போதும்… போதும்… அதுவொன்றே போதும்.
ஆயுதம் இன்றி, ஒரு ஆட்சி செய்ய
பெரும் வாக்குகள் வேண்டும்.
தமிழர் வாக்குகள் வேண்டும்.
புலிகளுக்கல்ல, புத்திகொண்ட தமிழருக்கு.
எதிரிகளுக்குமல்ல, எம் தமிழ் தலைமைகட்கு..

கட்சி வேண்டும், நல்ல கட்சி வேண்டும்,
தமிழர்க்கென்று ஒரு கட்சிதான் வேண்டும்,
அது பெருங் கட்சியாய் வேண்டும்.
தேடவேண்டாம் ஒரு பெருங் கட்சி, கிடையவே கிடையாது,
இணைய வேண்டும் சிறுசிறு கட்சி, கிடைத்துவிடும் பெருங்கட்சி,
ஆள்வதும் நாமாகும், ஆட்சியும் நமதாகும்.
இதுதானே நம் தேட்சி, இத்தனை கால நம் தேட்சி.

“எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது
எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது
எது நடக்க இருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்குமாம்”..
பகவத் கீதை சொல்கிறது.
“எது நடந்ததோ அது நன்றாகவே நடக்கவில்லை.
எது நடந்து கொண்டிருக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது.
எது நடக்க இருக்கிறதோ அது நன்றாகவே நடக்கும்”..
பட்டுத்தேறியவர் சொல்கிறார்.

தீக்குளிப்பு வேண்டாம்…. வீண் உயிரிழப்பும் வேண்டாம்.
இந்தியாவிலே முத்துக்குமார், சுவிஸிலே முருகதாசு
ஆனால், இலங்கையிலே!? ஆனால், இலங்கையிலே!?
இல்லை, ஒருவருமே இல்லை. ஏனெனில்
இது புலம்பெயர் புலிகளின் வேலை.
இளைஞனே, தமிழ் இளைஞனே…
உன்மூளையை நீயே கழுவு,
கைவைக்க விடாதே உன் மூளையில்
புலிகளைக் கைவைக்க விடாதே,
விட்டாயோ, முடிந்திடுமே உன்கதை..

இளைஞனே,
உணர்ச்சி வசப்படுவார், உன்னை
உலக மாவீரனாய் நினைப்பாய்,
உபயோகமேயின்றி உன் உயிர் பிரிப்பாய்,
உலகைவிட்டு மறைந்தே செல்வாய்,
வாழவந்த நீ வீணாய் வாழ்வை முடிப்பாய்,
சாகவந்த புலிகள், நன்றாய் வாழ்ந்து முடிப்பர்.
மற்றவர் சாக அவர்கள் நன்றாக வாழ்ந்தே முடிப்பர்.

ஆதலால், இளைஞனே!
உன் அடுத்த சந்ததிக்கு
தன்னம்பிக்கையைக் கற்றுக்கொடு,
உன் உயிரையே மாய்க்கும்
மடமையினைக் கற்றுக் கொடுக்காதே,
அறிவியல் உலகில் வாழ வந்தவர்கள் நாம்,
நாம் அறிவோடு வாழவேண்டுமே தவிர
ஆயுதத்தோடு வாழக் கூடாது, அது நிலைத்தும் நிற்காது,
ஆதலால், அரசியல் செய், அழகாய் செய், அன்பாய் செய்.

பெறுவாய் நாடும் பெறுவாய், இவ்வுலகும் பெறுவாய்.
நாடு பெற்றுக் கொடுத்த காந்தியைப் பார்,
காடும் பெற்றுக் கொடுக்காத
பிரபாகரனைப் பின்பற்றாதே..
பின்பற்றாதே… தயவுசெய்து.. பின்பற்றாதே.

**** பாலமுருகன் -திருமலை

தமிழீழம் காண புறப்பட்ட தலைவர் நீச்சல் தடாகத்தில்! பலாத்காரமாக பிடிக்கப்பட்ட ஊராவிட்டு பிள்ளைகள் யுத்தமுனையில் பலி!

தமிழீழம் பெற்று தருதாக புறப்பட்ட தலைவர் இன்று வன்னியில் இருந்து தப்பியோடும் மக்களுக்கு தந்ததோ தடியடியும் துப்பாக்கி சூடும். அதே தலைவர் தனக்கு கட்டிவைத்ததோ வசதியானதொரு நீச்சல் தடாகம் வன்னி மக்களின் பிள்ளைகளோ பலாத்காரமாக புலிகளால் பிடிக்கப்பட்டு போதிய பயிற்சியும் இன்றி யுத்தமுனைக்கு தள்ளப்பட்டு தினமும் பலியாகும் கொடுமை.

பெருமூச்சின் பலம்!

பு (ப) லம்பெயர் மண்டுகள்!
ப (நி) லம் போக்கி உழைத்தெடுத்த
பணமெல்லாம் பறித்து வந்து
பொன் மேனி யாள் உன்னை
பொலிவுடன் குளிப்பாட்ட
யாருமில்லாத் தீவினிலே
நானமைத்தேன் குளமொன்று.

தாயகத்துப் பட்டத்து ராணியே!
பளிங்குக் கம்பளத்தில்
மெது மெதுவாய் அடிவைத்து
முன்னேறி வா புள்ள!!
கண்ணி வெடி பொதச்ச இடம்
கணவனுக்கே மறந்து போச்சு.

தமிழின விடிவுக்காய்
போராட நெனச்சித்தான்
இயக்கத்தை தொடங்கினன்.
நாடு விட்டு ஓடிவிட்ட
நம்மவர்தான் பணம்தந்து
நல்லா நீ வாழ் என்றார்.

ஓராயிரம் கரும் புலி
நமக்குக் காவல் இருந்தாலும்…
இதுவெல்லாம் மக்கள் கண்டா – பெரு
மூச்சு விட்டே கொன்னுடுங்கள்
பேசாம வா புள்ள…நாம
கூசாம முழு (மூழ்) கிடுவம்.

-ஏயெம்.ஹஸன் அலி- றியாத் - சவூதி அரேபியா

Monday, December 15, 2008

புலிகளின் செயற்பாடுகள் குறித்து சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு கண்டனம

இலங்கையில் தனிநாடு கோரிப் போராடும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு யுத்த நடவடிக்கைகளுக்காகவும் ஏனைய தேவைகளுக்காகவும் சிறுவர்களை தமது இயக்கத்தில் பலாத்காரமாகச் சேர்த்துக் கொள்வதனை உடனடியாக நிறுத்த வேண்டுமென நியூயோர்க்கிலிருந்து இயங்கும் மனித உரிமைகளுக்கான கண்காணிப்பு அமைப்ப இன்று (15) விடுத்துள்ள 17 பக்கங்கள் கொண்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

http://www.reliefweb.int/rw/rwb.nsf/retrieveattachments?openagent&shortid=FBUO-7MCCZV&file=Full_Report.pdf

இது தொடர்பாக மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பின் ஆசிய பிராந்தியத்துககுப்; பொறுப்பான பணிப்பாளர் பிரட் அடம்ஸ் அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது,

இலங்கையில் வாழும் தமிழ் மக்களுக்காகவே தமது அமைப்பு கடந்த 25 வருடங்களுக்கு மேலாகப் போராடி வருவதாக விடுதலைப் புலிகள் தெரிவித்திருந்தாலும் இவர்களின் யுத்த நடவடிக்கைகளால் வன்னிப் பகுதி மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் அரசாங்கப் படையுடன் இடம்பெற்று வரும் மோதல்கள் காரணமாக இவர்கள் இதுவரை காலமும் தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்த பல பகுதிகளையும் இழந்து வருகின்றன.

வடக்கில் இலங்கை அரசாங்கப் படையினர் முன்னெடுத்து வரும் யுத்த நடவடிக்கை காரணமாக தமது கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் வாழும் தமிழ் மக்கள் மீது விடுதலைப் புலிகள் அதிகளவு அழுத்தங்களைப் பிரயோகித்து வருகின்றனர்.

தமது கட்டுப்பாட்டுப் பிரதேசங்களிலுள்ள மக்கள் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு செல்வதற்காக அவர்களால் வழங்கப்பட்ட பாஸ் அனுமதி முறையைக் கூடத் தற்போது நிறுத்தி மருத்துவ வசதிகள் தேவைப்படும் பொதுமக்களை மட்டுமே செல்ல அனுமதிக்கின்றனர்.

தமது கட்டுப்பாட்டுப் பகுதியிலுள்ள பொதுமக்கள் சுதந்திரமாக வெளியேறி ஏனைய பகுதிகளுக்குச் செல்ல புலிகள் ஏன் அனுமதிப்பதில்லையெனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

கீழே உள்ள லிங் ஒன்ரை அழுத்தி மனித உரிமை அமைப்பினர் விடுத்த முழு அறிக்கையையும் பிடிஎவ் (PDF)வடிவில் பார்வையிடலாம்.

http://www.reliefweb.int/rw/rwb.nsf/retrieveattachments?openagent&shortid=FBUO-7MCCZV&file=Full_Report.pdf

http://www.hrw.org/sites/default/files/reports/ltte1208webwcover.pdf

http://www.hrw.org/sites/default/files/reports/ltte1208web.pdf

புலிகளின் செயற்பாடுகள் குறித்து சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு கண்டனம்

Thursday, December 11, 2008

புலிகளின் கப்பம் வசூலிப்பு மற்றும் வரி இலாகா படையினர் வசம்!

யாழ்-கண்டி வீதியில் புலிகளால் அறவிடப்பட்டுவந்த வரி மற்றும் கப்பம் கோரலின் அலுவலகம் படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. 2002ம் ஆண்டு புலிகளின் ரணிலிடையே ஏற்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தை தொடர்ந்து யாழ்-கண்டி வீதி போக்குவரத்துக்கு திறக்கப்பட்டது. இவ் வீதியால் வடபகுதிக்கு சென்ற பயணிகள், வர்த்தகர் என்று சகலரிடமும் புலிகள் நாள் ஒன்றுக்கு கோடிக்கணக்கான பணத்தினை வரியாக திரட்டினர். கப்பம் வசூலிப்பு அலுவலகம் மற்றும் அலம்பில் செம்மலை பகுதிகள் படையினரால் கைப்பற்றப்பட்டமை தொடர்பான வீடியோ ஒளிப்பதிவு இணைக்கப்பட்டுள்ளது.

முழுமையான ஒளிப்பதிவு

Monday, December 1, 2008

Tiger lost another town

Sri Lankan troops backed by artillery and mortar bombardment Monday captured yet another Tamil Tiger rebel stronghold amid fierce resistance, defence authorities said here.

The defence ministry announced that the troops launching a pre-dawn operation captured the strategic town of Kokkavil in the north on the Jaffna-Kandy main highway, some 20 kilometers south of the Tigers' de facto capital of Kilinochchi.

"Troops of Sri Lanka Army 57 division today reached long awaited milestone on their march into terrorist dens in Wanni with the liberation of the Kokkavil town," the defence ministry said.

It said the troops "have gained full control of Kokkavil" nearly after two decades. The Liberation Tigers of Tamil Eelam (LTTE) overran a military base here in 1990 and had been operating its clandestine television and relay stations from there.

Fresh fighting broke out after few days of lull in the battlefield due to heavy monsoon rains.

According to reports, the heavy rains and the flash flood had not only stalled the military onslaught, but also had caused immense hardship to hundreds of thousands of people displaced due to fresh fighting in the north.

Sri Lankan troops advancing in several directions were said to be operating on the outskirts of the LTTE's "political capital" of Kilinochchi town, lying 350 km north of here.

Military experts say the fall of Kilinochchi would deal a major blow to the LTTE politically, militarily and psychologically and they would be cornered in the jungle district of Mullaitivu.

The fresh military gain has come within a week after LTTE chief Velupillai Prabhakaran in his annual speech last week vowed to continue his campaign against the government security forces.

Conceding that the rebel group was "confronted with an intense war as never before", the elusive rebel leader, however, said the Sri Lankan government was "living in a dreamland of military victory".