அரசு வழங்கிய விவேகானந்தர் இல் லத்துக்கான உரி மையை ரத்து செய்ய எந்த அவசியமும் எழவில்லை என்று பா.ஜ.க. மாநிலத் தலைவர் இல. கணே சன் கூறினார்.
இதுகுறித்து அவர் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை: பாரத தேசத்தில் வாழ்ந்த துறவிகள் அனைவருமே தேசபக்தர்கள் என்றாலும் சுவாமி விவேகானந்தர் மட்டுமே தேச பக்த துறவி என அழைக்கப்பட்ட வர். இப்பொழுது பேசப்படுகிற பகுத்தறிவு வாதம், சமூக நீதி, மூடப்பழக்கங் களை சாடல், ஏழையின் சிரிப்பில் இறை வனைக் காணுதல் எல்லாவற்றையும் அவ ரைவிட ஆழமாக, ஆணித்தரமாக பரப்பி யவர் எவருமில்லை.
அவர் பாரத நாட்டில் தங்கியிருந்த இடங்கள் எல்லாம் வரலாற்றுச் சின்னங் களாக போற்றப்படுகின்றன. அந்த வகை யில் சுவாமி விவேகானந்தர் சென்னை யில் சில நாள்கள் தங்கியிருந்த ஐஸ்ஹ வுஸ் கட்டடம், விவேகானந்தர் இல்ல மாக செயல்பட்டு வருகிறது.
அரசாங்கம் ஒரு குறிப்பிட்ட காரணத் துக்காக, ஒரு குறிப்பிட்ட இடத்தைப் பயன்படுத்திக் கொள்ள நீண்டகால உரி மம் வழங்குவது உண்டு.
அப்படி வழங்கப்பட்ட இடம் எந்த நோக்கத்துக்காக தரப்பட்டதோ அந்த நோக்கம் நிறைவேறாது இருந்தாலோ, தவ றாகப் பயன்படுத்தப்பட்டாலோ அதை அரசு திரும்ப எடுத்துக்கொள்ளலாம்.
ஆனால் விவேகானந்தர் இல்லம் எந்த நோக்கத்துக்காக ஸ்ரீராமகிருஷ்ண மடத்துக்கு வழங்கப்பட்டதோ அதே நோக்கத் தில் எந்தவித பிசிறில்லாமல் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. எனவே அரசு உரி மத்தை இடையில் ரத்து செய்ய எந்த அவசியமும் எழவில்லை. அந்த இடத் தில் செம்மொழி மையம் அமைய உள்ள தாகத் தெரிகிறது. செம்மொழி மையம் தேவைதான். செம்மொழி மையம் எந்த இடத்திலும் அமைத்துவிடலாம்.
ஆனால் "விவேகானந்தர் தங்கியிருந்த இடம்' என்கின்ற பெருமை எல்லா இடத் துக்கும் கிடைத்து விடாது. நாடு முழுவ தும் விவேகானந்தர் வாழ்க்கையுடன் தொடர்புடைய பல இடங்கள் பராமரிக் கப்பட்டு வருகின்றன. ஆன்மிகத்தில் நாட்டம் இல்லாத கம்யூனிஸ்டுகள் ஆளும் மாநில அரசு கூட விவேகானந் தரை மதிக்கிறது.
எனவே தமிழக முதல்வர் கருணாநிதி இந்த விஷயத்தில் தலையிட்டு விவேகா னந்தர் இல்லத்துக்கு தரப்பட்டுள்ள உரி மத்தை 2010-க்கு பின்னும் 30 ஆண்டுகள் நீட்டிக்கவேண்டும் என்று இல. கணே சன் கூறியுள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment