Sunday, April 13, 2008

ஒரு அகதி அரசியல்வாதியானார்


Ricardo Lumengo



அகதியாய் சுவிற்சர்லாந்தில் அரசியல் தஞ்சம் கோரிய அங்கோலா நாட்டவரான ரிகார்டோ லுமேன்கோ (Ricardo Lumengo) தற்போது சுவிஸ் மக்களால் பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

1982ம் ஆண்டு தனது 20து வயதில் இவர் தனது தாய்நாடான அங்கோலாவிலிருந்து சுவிற்சர்லாந்திற்குள் அகதி அந்தஸ்து தேடி நுழைந்தார். லுமேன்கோ student activistஆக அங்கோலாவில் போராடியதால், அவரை சுவிஸ்நாட்டில் அகதியாக ஏற்றுக்கொள்ளப்பட்டு அவருக்கு அங்கு நிரந்தர வதிவிட உரிமையும் வழங்கப்பட்டது. அவர் சுவிஸில் உள்ள Fribourg இல் உள்ள Universityல் சட்டம் பயின்றுள்ளார்.

அவர் சுவிஸ்ஸிலுள்ள Social Democratic Party கட்சியிலும் தன்னை இணைத்துக்கொண்டார்

அவருக்கு 1997இல் சுவிஸ்பிரஜாவுரிமை வழங்கப்பட்டது. 2004இல் Biel இல் municipal council லிலும் 2006இல் Berneல் cantonal council லிலும் தெரிவுசெய்யப்பட்டார்.

2007இல் நடைபெற்ற தேர்தலில் வெற்றிபெற்று சுவிஸ்நாட்டின் முதலாவது கறுப்பினத்தவராகத் தெரிவானார். அவர் 8 மொழிகள் பேசும் திறமை கொண்டவர் (French, German, Portuguese, English, Spanish அத்துடன் 3 ஆபிரிக்க பாஷைகளான: Kikongo, Kikongo ya Leta und Lingala ஆகும்)

No comments: