படமெடுக்கும்போது எல்லோரும் படத்தில் தங்களின் முகம் தெளிவாக இருக்கவேண்டும் என்றுதான் விரும்புவார்கள். அது இயற்கை. சில வேளைகளில் எடுத்த படம் தெளிவில்லாமல் அமைந்து விட்டால் அந்த படம் எடுத்த நபரை வசைபாடித்தீர்த்துவிடுவார்கள்.
ஆனால் இங்கே எல்லாமே தலைகீழாக உள்ளது.

இப்படி ஒரு படத்தை எடுத்து சுவரில் தொங்கவிடுவதாலோ அல்லது அல்பத்தில் போட்டு வைப்பதாலோ யாருக்கு என்ன பிரயோஜனம்? முன்பின் தெரியாத ஒரு நபர் இவரின் வீட்டிற்கு வந்தால் இந்த படத்தை பார்த்து இவர் யார் என்று நினைப்பது? இந்த படத்தில் இருக்கும் நபரை நேரடியாக இவருக்கு நன்றாக தெரிந்திருந்தாலும் இவர்தான் இந்த படத்தில் உள்ளார் என்பதனை எதை வைத்து தீர்மானிப்பது? இந்த படத்தில் உள்ள நபர் பிற்காலத்தில் தனது பேரன் பேத்திகளிடம் இப்படத்தைக்காட்டி இது நான் தான் என்று சொன்னால் அவர்கள் நம்பவா போகிறார்கள்?
அல்லது இந்த படத்தில் உள்ளவர் ஏதேனும் ஒரு துறையில் உலகலாவிய ரீதியில் மிகவும் பிரபல்யம் அடைந்து வாழ்ந்து இறந்த பின்னர் இவருக்கு அடுத்த தலைமுறையினர் "எனது உறவினர் 100 வருடங்களுக்கு முன்னர் உலகலாவிய ரீதியில் மிகவும் பிரபல்யமாக இருந்தார்" என்று இவரின் பெயரை மட்டும்தான் சொல்லமுடியுமே தவிர இந்த படத்தைக்காட்டி இவர் தான் அவர் என்று சொன்னால் எப்படி இருக்கும்?.....கொஞ்சம் கற்பனை பண்ணிப்பாருங்கள்...

கொஞ்சகாலம் போன பின்னர் "நாம் அந்த நேரம் யாரோடு சேர்ந்து நின்று படம் எடுத்தோம்" என்று இந்த படத்தில் இருக்கும் இவர்களுக்கே தெரியாது. தேவைதானா இந்த முட்டாள்தனமான மூட நம்பிக்கை.................?

1 comment:
"முட்டாள்தனமா அல்லது மூடநம்பிக்கையா?"
இல்லை இல்லை மதவாத மனநோயாளிகள்.
Post a Comment