
புலிகளுக்கு நிதி சேகரித்த குற்றச்சாட்டின் அடிப்படையில் பொலிஸார் நடவடிக்கை
கனடாவிலுள்ள உலகத் தமிழர் பேரவை க்குச் சொந்தமான இரண்டு கட்டிடங்களை பொலிஸார் கடந்த வார இறுதியில் மூடி சீல் வைத்துள்ளனர்.
அத்தோடு, அவ்வமைப்பின் வங்கிக் கணக்குகள் உட்பட ஏனைய சொத்துக்களையும் பொலிஸார் முடக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
விடுதலைப்புலிகளுக்காக நிதி சேகரிப்பில் ஈடுபட்டு வந்தமை தொடர்பான குற்ற ச்சாட்டுக்களின் அடிப்படையிலேயே பொலிஸார் இந்த நடவடிக்கையை மேற் கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனினும், இதனை முற்றாக மறுத்துள்ள உலக தமிழர் பேரவை, பொலிஸார் இது வரை உத்தியோகபூர்வமாக தமது அமைப்பு மீது எவ்வித குற்றச்சாட்டுக்களையும் பதிவு செய்யவில்லை என கூறியுள்ளதோடு, தமது இரு சமூக சேவை நிலையங்களே மூடப்ப ட்டுள்ளதாக சுட்டிக் காட்டியுள்ளது.
கனடாவின் டொறன்ரோ, மொன்ட்றியல் மாகாணங்களிலுள்ள உலக தமிழர் பேரவை யின் இரண்டு கட்டிடங்களை அம்மாகாண பயங்கரவாத தடுப்புப் பிரிவு பொலிஸார் கடந்த வெள்ளிக்கிழமை மூடி சீல் வைத்துள்ளனர். அத்தோடு அவ்வமைப்புக்கு சொந்தமான வங்கிக் கணக்குகள் மற்றும் ஏனைய சொத்துக்களும் முடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
உலகத் தமிழர் பேரவை, விடுதலைப்புலி கள் அமைப்பிற்காக நிதி சேகரிப்பில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில், நீதிமன்றம் ஒன்றின் உத்தரவின் அடிப்படையிலேயே தாம் இந்த நடவடிக்கையை மேற்கொண்ட தாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பாக கனேடிய பத்திரிகை யொன்றிற்கு கருத்து தெரிவித்துள்ள உலக தமிழர் பேரவையின் சட்டத்தரணி ஸ்ரிவன் ஸ்லிம்மோவிச், விடுதலைப்புலிகள் அமைப்புக்காக நிதி சேகரிப்பில் ஈடுப்பட்டமை தொடர்பான குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் கட ந்த 2006 ஆம் ஆண்டு எமது அலுவலகங் களை சோதனையிட்ட பொலிஸார், அங்கிருந்த ஆவணங்களை பரிசீலனை செய்வதற் காக எடுத்துச் சென்றனர்.
எனினும், இரண்டு வருடங்கள் சென்ற நிலையிலும் பொலிஸார் எமது அமைப்பு க்கு எதிராக எந்தவொரு குற்றச்சாட்டையும் பதிவு செய்யவில்லை.
இந்நிலையில் எமது அமைப்பின் சமூக நல, சமூக சேவை நிலையங்களை கடந்த வெள்ளிக்கிழமை மூடி சீல் வைத்துள்ளனர்.
இலங்கையிலுள்ள தமிழர்களுக்காகவே நாம் நிதி சேகரிப்பில் ஈடுபடுகின்றோம்.
நாம் விடுதலைப்புலிகள் அமைப்பிற்கு எந்த நிதியையும் அனுப்பவில்லை. அத் தோடு, விடுதலைப்புலிகள் அமைப்பு இது வரை கனேடிய அரசாங்கத்தால் தடை செய் யப்படவில்லை என்பதையும் சுட்டிக் காட்ட விரும்புகின்றோம்.
எனவே, இதனை சட்ட ரீதியில் சந்திக்க நாம் தயாராக இருக்கின்றோம்.

No comments:
Post a Comment