Friday, April 25, 2008

என்று தணியும் திபெத் சுதந்திர தாகம்?

சீன ஆதிக்கத்திலிருந்து திபெத் விடுதலை பெற வேண்டுமென திபெத்தி யர் மீண்டும் ஆங்காங்கே கலவரத்தில் இறங்கியுள் ளனர். இந்தியா உள்பட பல நாடுகளில் சீனத் தூத ரகங்களுக்கு எதிரில் திபெத்தியர் ஆவேச கோஷங்கள் எழுப்பி வரு கின்றனர். இந்தியாவில் தஞ்சம் புகுந்த தலாய் லாமாதான் இவற்றைத் தூண்டிவிடுகிறார் என சீன அரசாங்கம் குற்றம் சாட்டுகிறது.

திபெத் நாட்டின் வரலாற்றுப் பின்னணி என்ன? சுயேச்சை நாடாக இருந்ததுண்டா? யார் இந்த தலாய் லாமா? என்பதுபோன்ற கேள்விக ளுக்கு விடையாக வரலாற்றுபூர்வமான விளக் கம் வருமாறு: கிறிஸ்தவ சகாப்தத்திற்கு முன்பிருந்தே திபெத் நாடு திபெத்திய அரச வம்சத்தினரின் தனி ஆட் சிக்கு உள்பட்ட சுயேச்சை நாடாக இருந்து வந் தது. இந்தியாவின் மூன்றில் ஒரு பங்கு பரப்பள வைக் கொண்ட அப் பீடபூமிப் பிரதேசத்தில் கி.பி. ஏழாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலேதான் புத்த மதம் பரவத் தொடங்கியது. அதற்கு முன் பாக, ""பான்'' எனும் இயற்கை வழிபாடே வழக் கில் இருந்ததாம்.

கி.பி. பதினான்காம் நூற்றாண்டில் ட்ஜோங் கபா என்ற திபெத்திய புத்த மதகுரு தோன்றி னார். அப்போது வழக்கிலிருந்த வெவ்வேறு புத்த மதப் பிரிவுகளின் சூத்திரங்களையும், தாந் திரீக முறைகளையும் ஒருங்கிணைத்து, ஒரு தனிப்பெரும் புத்த மத மரபினரைத் தோற்றுவித் தார். அதுதான் "கிலுக்' அல்லது "கிலுக்பா' எனும் பிரிவினர். இவர்கள் தமது மதச் சின்னமாக மஞ் சள் தொப்பி அணியப் பணிக்கப்பட்ட காரணத் தால் மஞ்சள் சமயத் துறையினர் என அழைக்கப் படலாயினர். வெகுவிரைவில் ஏராளமான புத்த லாமாக்களும், பொதுமக்களும் இந்த புது மஞ் சள் மரபுக்கு ஆதரவளிக்கத் தொடங்கினர்.
இதன் ஆதி குருவான ட்ஜோங்கபா மரணத் தரு வாயில் தமது அண்ணன் மகனான கெடுங்டாப் என்பவரை மஞ்சள் புத்த சமயத்தின் தலைமைக் குருவாகப் பீடத்தில் அமர்த்தினார். அந்தப் பீடா திபதிதான் பின்னர் முதல் தலாய் லாமாவாக (1391 - 1474) என சீன அரசரால் பின்னர் அறி விக்கப்பட்டார்.

பதினேழாம் நூற்றாண்டு மத்தியில் திபெத்தில் ஆங்காங்கே எழுந்த உள்நாட்டுக் கலவரங்களை அடக்கித் தனது தலைமை நிலையை உறுதிப்ப டுத்திக் கொள்வதன் பொருட்டு ராணுவ உதவி கோரி சீனச் சக்கரவர்த்திக்கு அன்றைய ஐந்தாம் தலாய் லாமா அவசர வேண்டுகோள் விடுத்தார்.

கி.பி. 1641-ல், சக்கரவர்த்தியும் சீனப் படை களை அனுப்பி கலவரங்களை நசுக்கி, தலாய் லாமாவின் அதிகாரத்தை நிலைநாட்டினார். சீனா வின் அங்கீகார அடையாளமாக தலாய் லாமா வுக்கு ஒரு பொன் முத்திரையும் வழங்கிய சீன மாமன்னன், இனி திபெத்தை ஆண்டுவரும் அர சனுக்கு இணையான அரசாட்சி உரிமையும் தலாய் லாமாவுக்கு உண்டு என்று அறிவித்தார்.

சீனப் படை பலத்துக்கு அஞ்சிய திபெத் மன்ன ரும் அதற்கு உடன்பட்டார்.
இந்த ஐந்தாம் தலாய் லாமாதான், "பஞ்சன் லாமா' என்ற இணை மதத் தலைவரை முதன்முத லாக நியமித்தவர். தான் இனி திபெத் அரசருடன் இணைந்து அரசாங்க வேலைகளையும் மேற் பார்வை இட வேண்டிவருவதால், மஞ்சள் புத்த மத விவகாரங்களைக் கவனித்துக்கொள்ள அந் தப் புதிய பஞ்சன் லாமாவுக்குக் கிட்டத்தட்ட சம அந்தஸ்து உண்டு என்று விதித்தவரும் அவரே.

1718-ஆம் ஆண்டில் திபெத்தை ஆக்கிரமிக் கும் நோக்கத்துடன் படையெடுத்து வந்த மஞ்சூ ரியாவைச் சார்ந்த சீனச் சக்கரவர்த்தியின் ராணு வத் தளபதியோடு, அந்நாள் ஒன்பதாம் தலாய் லாமா ஓர் ரகசிய ஒப்பந்தம் செய்துகொண்டார்.

அதன்படி, சீன ராணுவம் திபெத்தின் பலவீன மான அரசனைப் பட்டத்திலிருந்து நீக்கிவிட்டு, இனி தலாய் லாமாதான் திபெத்தின் முழுமை யான அரசியல் தலைவராகவும் மடாதிபதியாக வும் ஒருங்கே செயல்படுவார் என்று பிரகடனித் தது. அதற்கு அடையாளமாக சீனச் சக்கரவர்த்தி ஒரு பொன் முத்திரையை தலாய் லாமாவுக்கு அனுப்பி வைத்தார். அதேசமயம் திபெத் மீதான சீன மேலாண்மையை உறுதிப்படுத்தும் நிமித் தம், சீனப் பிரதிநிதி ஒருவர் திபெத் தலைநகர் லாஸôவில் நியமிக்கப்பட்டார்.

1910-ல் எழுந்த சீனப் புரட்சியின் காரணமாக சீனத் துருப்புகள் திபெத்தைவிட்டு அவசர அவசரமாக வெளியேற நேர்ந்தது. சீனாவில் மஞ்சூரியச் சக்கரவர்த்தியின் ஆட்சி கவிழ்ந்தது.
1912-ல் சன் - யாட் - ùஸன் தலைமையில் சீனக் குடியரசு பிரகடனமாயிற்று. அதே ஆண்டில் ஜூன் மாதம் தலாய் லாமா இந்தியாவிலிருந்து லாஸôவுக்குத் திரும்பிச் சென்றார். அவருடன் கூடவே ஸர். சார்லஸ் பெல்லும் ஒரு சிறு பிரிட்டிஷ் படையுடன் சென்றார். போய்ச் சேர்ந்த முதல் நாளே முதல் வேலையாக தலாய் லாமா திபெத்தை ஒரு பூரண சுதந்திர நாடாக அறிவித்தார். புதிய சீனக் குடியரசை நிலைகொள்ளச் செய்யும் கடினமான பணியில் சன் - யாட் - ùஸன் முழுவீச்சுடன் முனைந்திருந்ததால், அவர் அப்போது அந்த திபெத் சுதந்திர அறிவிப்பை மறுக்கவில்லை.

அடுத்து, 1914-ல் சிம்லாவில் பிரிட்டிஷ் அரசாங்கம் கூட்டிய பேரவையில் இந்தியா, திபெத், சீனா இம்மூன்று நாடுகளின் அரசாங்கப் பிரதிநிதிகள் கலந்து கொண்டு திபெத்தின் வருங்கால நிலையைப்பற்றி விவாதித்தனர்.

அப்பேரவையில் பிரிட்டிஷாரால் முன்வைக்கப்பட்ட பூர்வாங்கப்படிவம் நிலைமையை மேலும் குழப்பியது: சீன எல்லையை ஒட்டிய திபெத் மாகாணங்கள் வெளிவட்டாரத் திபெத் என்றும்,
மற்ற திபெத் பிரதேசம் உள்வட்டார திபெத் என்றும் பாகுபடுத்தப்பட்டன.

வெளிவட்டார திபெத்துக்கு முழுமையான சுய ஆட்சி உரிமையுண்டு; ஆனால் அது சீன அரசாங்கத்தின் மேலாதிக்கத்திற்கு உட்பட்டே இயங்க வேண்டும். அதேசமயம் இவ்விரண்டு வட்டாரத் திபெத் பகுதிகளிலும் பிரிட்டிஷ் அரசாங்க பொது மேற்பார்வைக்கும், தலைமைச் செல்வாக்கிற்கும் இடமளிக்கும் வகையில் சுயாட்சி நிர்வகிக்கப்பட வேண்டும் என்று வகுக்கப்பட்டது. பிரிட்டிஷ் ராணுவ பலத்திற்கு அஞ்சிய சீனக் குடியரசு அந்தப் படிவ ஷரத்துகளுக்கு மறுப்புக் கூறவில்லை; அதேசமயம் அவற்றை அதிகாரபூர்வமாக அங்கீகரிக்கவும் இல்லை. இக் குழுவின் படிவத்தை அமல் செய்யும் வகையில் லாஸô நகரில் ஒரு பிரிட்டிஷ் ஏஜெண்ட் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டார்.
இந்தியா சுதந்திரம் பெற்ற மூன்று ஆண்டுகளுக்குப் பிறகும் இந்த வழக்கம் தொடர்ந்தது. சுதந்திர இந்திய அரசாங்க சார்பில் 1950 முடிய ஒரு பிரிட்டிஷ் கண்காணிப்பாளரே லாஸôவில் தொடர்ந்து இருந்து வந்தார்.

அதன்பின் இந்தியா வேறு புதிய ஏஜெண்ட் யாரையும் நியமிக்கவில்லை.
பதின்மூன்றாம் தலாய் லாமா 1933-ஆம் ஆண்டில் காலமானார். கிழக்கு திபெத் கிராமம் ஒன்றில் ஓர் எளிய விவசாயக் குடும்பத்தில் பிறந்த லமோ தோன்துப் என்ற குழந்தை 1935ஆம் ஆண்டில் இரண்டு வயது நிரம்பியபோது, பதினான்காம் தலாய் லாமாவாக (இப்போது இருக்கும் தலாய் லாமா) திபெத் பெரியவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்- டான். நான்காம் வயதில் தலாய் லாமாவாக லாஸôவில் பிரும்மாண்ட பொடாலா அரண்மனையில் பட்டாபிஷேகம் நடந்தேறியது. ஐந்து வயது முதற்கொண்டு படிப்பு, பாராயணம், 14-ம் வயதிலிருந்து புத்த மதக் கோட்பாடுகள், சூத்திரங்கள், தத்துவார்த்த வாதங்கள் அச்சிறுவனுக்குத் தலைகீழ்ப் பாடம்! 1949-ல் சீன கம்யூனிஸ்ட் படைகள் ஜெனரல் மாசே - துங் தலைமையில் முழு வெற்றியடைந்ததும் சீன தேசிய ஜனநாயக (கம்யூனிஸ்ட்) அரசாங்கம் நிறுவப்பட்டது. சியாங் - கை - ஷேக் தோல்வியுற்ற தன் படையினருடன் பின்வாங்கி ஃபார்மோஸô தீவில் தன் தேசிய சீன அரசாங்கத்தைத் தொடர்ந்தார்.
புதிய சீன கம்யூனிஸ்ட் அரசாங்கம் திபெத் பொது மக்களை நிலப்பிரபுக்களின் ஆதிக்கத்திலிருந்து விடுவித்துப் புனருத்தாரணம் புரியும் கைங்கர்யத்தை உடனடியாய் மேற்கொள்ளத் துடிதுடித்தது. 1950 அக்டோபர் மாதம் திபெத் எல்லைக்குள் சீனத் துருப்புகள் மடமடவென ஊடுருவி ஆக்கிரமிப்பில் இறங்கிவிட்டன என்ற செய்தி தலைநகர் லாஸôவுக்கு எட்டியது. "திபெத்தை அமைதியாக மீட்கும் பணி தொடங்கிவிட்டது'' என்று சீன அரசாங்கம் உலகிற்கு அறிவித்தது.

அன்று பதினைந்தே வயது நிரம்பிய பதினான்காம் தலாய் லாமா புத்த புராணங்களை மேன்மேலும் படித்தறிவதிலும் மஞ்சள் மரபு விதிமுறைப் பயிற்சியிலும் முழுதாய் ஈடுபட்டிருந்தார். ஆங்கிலம் கற்பிக்க ஹென்றி ஹோரா என்ற ஆங்கிலேய ஆசானும் உண்டு.
திபெத் அரசாங்கத்தை சிறுவன் தலாய் லாமா சார்பில் பிரதம மந்திரியும் அதிகாரிகளும் நடத்தி வந்தனர். சீன ஆக்கிரமிப்புப் படைகளை எதிர்க்குமாறு ஆங்காங்கே அமைந்திருந்த திபெத்திய துருப்புகளுக்கு ஆணை பறந்தது.

திபெத்தியர்கள் ஆக்ரோஷத்துடன் சீனப் படையினரை எதிர்த்துப் போரிட்டனர்.
ஆயினும், 80,000 சீன வீரர்களை எதிர்த்து நவீன படைக்கலங்களற்ற 8,500 பேர் கொண்ட திபெத் ராணுவம் எவ்வளவு நாள்தான் தாக்குப் பிடிக்க முடியும்? வேறு வழியின்றி திபெத் மந்திரி சபை சீன அரசாங்கத்துடன் சமாதானப் பேச்சுவார்த்தைக்கு இணங்கி ஒரு தூது கோஷ்டியை சீனத் தலைநகர் பீஜிங்கிற்கு அனுப்பி வைத்தது. சீன அரசாங்க வற்புறுத்தலுக்குக் கீழ்ப்பட்டு, 17 ஷரத்துகள் அடங்கிய சீன - திபெத் ஒப்பந்தம் 1951-ல் கையெழுத்திடப்பட்டது. அதன்படி திபெத் மீது சீனாவுக்கு உள்ள மேலாதிக்க உரிமை ஒப்புக்கொள்ளப்பட்டது. திபெத்தின் மத விவகாரங்களிலும் உள்நாட்டு ஆட்சியிலும் சீனா தலையிடாது என்று சீனா வாக்களித்தது.

ஆனால் இந்த உடன்பாடு சீனாவைப் பொருத்தவரை பெயரளவில்தான் பின்பற்றப்பட்டது. பல சந்தர்ப்பங்களில் உள்நாட்டு ஆட்சி முறைகளில் சீனப் பிரதிநிதிகள் குறுக்கிடலாயினர். திபெத்தில் சீன ராணுவ முகாம்கள் விஸ்தரிக்கப்பட்டன.

1955-ல் திபெத்தின் காம் மாகாணத்தில் சீன அதிகார அமல்களுக்கு எதிராக உள்நாட்டுப் போராட்டம் உருவாகி ஓரளவு தீவிரமாகப் பரவத் தொடங்கியது. இதை சாக்காகக் கொண்டு சீன ஆயுதப் படையினர் பல புத்த மடங்களை நாசமாக்கினர். ஏராளமான புத்த பிட்சுகளும், திபெத் அதிகாரிகளும் கைது செய்யப்பட்டு, சீனா - திபெத் எல்லையில் சாலைகள் அமைக்கும் ஆட்களாக வேலை வாங்கப்பட்டனர். திபெத் மலைவெளிகளில் ரயில் பாதைகள் போடப்பட்டு, சீன இனத்தினர் ரயில் ரயிலாக வந்திறங்கி திபெத்தின் வெவ்வேறு பகுதிகளில் குடியேறத் தொடங்கினர்.

1959 தொடக்கத்தில் திபெத்திற்கும் சீனாவுக்கும் இடையிலான உறவுகள் மேலும் விரிசல் கண்டன. சீன ஊடுருவல்களுக்கு எதிரான திபெத்திய கொரில்லாத் தாக்குதல்கள் ஆங்காங்கே அதிகரித்தன. சீன ராணுவ அடக்குமுறை கொடூரமாயிற்று. தலைநகர் லாஸôவில் 24 வயது இளைஞர் தலாய் லாமாவுக்கு எந்நேரமும் சீன ராணுவத்தினரால் ஆபத்து நேரலாம் என்று திபெத்திய மக்கள் பதைபதைத்தனர். அவர்களுக்கு தலாய் லாமாதான் தெய்வீக அரசர்.
இந்தப் பதற்றச் சூழ்நிலையில் லாஸôவில் முகாமிட்டிருந்த சீன ராணுவத் தலைமையகத் திலிருந்து 1959 மார்ச் 10 அன்று தலாய் லாமாவுக்கு ஓர் அழைப்பு வந்தது. அந்த ராணுவ முகாமில் ஒரு விசேஷ கலைநிகழ்ச்சிக்கு தலாய் லாமா சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு கௌரவிக்க வேண்டுமாறு சீனத் தளபதி ரகசிய அழைப்பு மடலை அனுப்பியிருந்தார்: தனிப்பட்ட கலைநிகழ்ச்சி இது. தங்கள் மந்திரிகள், பிரதானிகள் வேண்டாமே? சும்மா தாங்கள் மட்டும் ஒரு சில பாதுகாவலரோடு வந்து போனால் நன்று என்ற குறிப்பு வேறு! இந்த ரகசிய அழைப்பு எப்படியோ தீப்போல் நகரெங்கும் பரவியது.
இது நமது இளம் தெய்வீக அதிபதியை நம்மிடமிருந்து பிரித்து அவரது மனதை மாற்றச் செய்யவோ அல்லது கைது செய்யவோ நடக்கும் சீன சூழ்ச்சி என்று மந்திரிகளும் மக்களும் பீதியுற்றனர். பெரியோர், சிறியோர், பெண்கள் உள்பட முப்பதாயிரத்திற்கும் மேற்- பட்ட மக்கள் கூட்டம், தலாய் லாமாவின் பிரும்மாண்ட பொடாலா அரண்மனையைச் சூழ்ந்துகொண்டு, எக்காரணத்தை முன்னிட்டும் சீன ராணுவ முகாமுக்குப் போகாதீர்கள்! போகாதீர்கள்! என ஆர்ப்பரித்த வண்ண மிருந்தனர்.

தலாய் லாமாவின் அரண்மனையைச் சுற்றி சீன எதிர்ப்பு கோஷம் செய்யும் திபெத்திய ஆர்ப்பாட்டக் கும்பல்களைப் பயமுறுத்தும் வண்ணம் 1959 மார்ச் 17 அன்று சீன ராணுவ முகாமிலிருந்து வீசப்பட்ட இரண்டு மூன்று பீரங்கிக் குண்டுகள் அரண்மனைக்கு அருகில் வீழ்ந்தன. இனி தலாய் லாமாவுக்குப் பேராபத்து என்பதை உணர்ந்த அவரது அவைப் பெரியவர்களும், கஷக் எனும் திபெத் மந்திரிசபையும் அன்று பிற்பகலிலேயே அவசர அவசரமாகக் கூடி விவாதித்தது. தலாய் லாமா இனியும் காலம் கடத்தாமல் உடனடியாக லாஸô தலைநகரைவிட்டு வெளியேறிச் சென்றுவிட வேண்டும் என்று ஏகமனதாய் முடிவெடுக்கப்பட்டது. தாம் திபெத்தை விட்டு அகன்றால்தான் மக்களைப் பேரழிவினின்றும் காப்பாற்ற முடியும் என்றுணர்ந்த தலாய் லாமாவும் அதற்கு ஒப்புக்கொண்டார்.

அன்றிரவு 10 மணிக்கு தலாய் லாமா ஒரு சாதாரண திபெத் வீரர்போல முரட்டு உடை அணிந்து தோளில் துப்பாக்கி சகிதம் அரண்மனையின் பின் கேட் வழியாக வெளியேறினார்.

No comments: