
ஸ்பெயினில் நாட்டின் இராணுவ அமைச்சராக ஒரு கர்ப்பிணிப்பெண் நியமிக்கப் பட்டுள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஸ்பெயினில் சமீபத்தில் நடந்த தேர்தலையடுத்து சோசலிஷ அரசு பதவியேற்றுள்ளது. பிரதமராக ஜோஸ் லூவிஸ் ரோட்ரிக்ஸ் சபாடெரோ பதவியேற்றுள்ளார். அவர்களுடன் எட்டு அமைச்சர்களும் பதவியேற்றுள்ளனர்.
இராணுவஅமைச்சராக முதன்முறையாக ஒருபெண் நியமிக்கப்பட்டு இருக்கிறார். அவர் பெயர் சார்ம்சாகோன்(Carme Chacon) வயது 37 தற்பொழுது அவர் கர்ப்பிணிப் பெண்னாக உள்ளார். இராணுவம் சம்பந்தப்பட்ட எந்த படிப்பு திறமையும் இவரிடம் இல்லை அவர் பதவியேற்ற பின் இராணுவ மரியாதை ஏற்றார். ஏழமாத கர்ப்பிணியான இவர் அணிவகுப்பு மரியாதையை ஏற்ற படத்தை முதல்பக்கத்தில் பல பத்திரிகைகளும் வெளியிட்டுள்ளன சர்வதேச அளவில் பிரபலமான ஹெரால் டிரிபியோனிலும் இவரின் போட்டோ முதல் பக்கத்தில் வெளியாகியுள்ளன.
கர்ப்பிணி பெண்ணான சார்ம் நியமிக்கப்பட்டதை பெண்கள் அமைப்பினர் வரவேற்றாலும் சர்ச்சை கிளம்பியுள்ளது. இராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற அதிகாரிகள் சிலர் இராணுவத்துக்கு சம்பந்தமே இல்லாத ஒருபெண்ணை அமைச்சராக இதற்கு முன்னர் நியமித்ததே இல்லை முதன்முறையாக இப்போதுதான் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை ஓரினச்சேர்க்கை பிரியர்கள் திருமணம் செய்து கொள்ளலாம் அரசியல் கட்சிகள் நியமிக்கலாம் பொறுப்புதரலாம் என்று பல சீர்திருத்த திட்டங்களை புதிய அரசு மேற்கொண்டு வந்துள்ளது. சமத்துவ அமைச்சகம் என்ற ஒரு தனி அமைச்சகத்தையும் அமைக்க அது முடிவு செய்துள்ளது என தெரிவிக்கப்படுகிறது.

No comments:
Post a Comment