
மடு தேவாலயப் பகுதி சமாதான வலயமாக அறிவிக்கப்படுகின்ற உத்தரவாதம் கிடைத்த பின்னரே மடு மாதா திருச்சொரூபம் ஆலயத்துக்கு கொண்டுவரப்படும் என மன்னார் மறை மாவட்ட குருமார் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது
இலங்கையின் வடமேற்கே மன்னார் மாவட்டத்தில் மடு பகுதியை ராணுவம் சில நாட்களுக்கு முன்னர் கைப்பற்றியதை அடுத்து, மடு மாதா தேவாலயத்திலிருந்து சமீபத்தில் அப்புறப்படுத்தப்பட்ட மடு மாதாவின் திருச்சொருபத்தை மீண்டும் அங்கு கொண்டுவரவேண்டும் என்ற பிரச்சினை குறித்து ஆராய திங்களன்று மன்னார் மறை மாவட்ட குருக்கள் மன்னாரில் கூடினர்.
மடு தேவாலயப் பகுதியை சமாதான வலயமாக அறிவித்து, அங்கு இடம்பெயர்ந்த மக்கள் வாழ்வதற்கு அனுமதியளிக்க இலங்கை இராணுவத்தினரும் விடுதலைப் புலிகளும் எழுத்துமூல உத்தரவாதம் வழங்கிய பின்னரே மாதா சிலையை மீண்டும் மடுவுக்கு கொண்டுவருவது என்று இக்கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
படையினர் அனுமதிக்கும் பட்சத்தில் தற்போதைக்கு மூன்று குருமார்களை ஆலயத்திற்கு அனுப்பி அதனை மீண்டும் வழிபாட்டுக்குரிய ஒரு இடமாக ஒழுங்கு செய்வது என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment