பார்ப்பதற்கே வேதனையாக இருந்த காட்சி அது: புது தில்லி, 10, ஜன்பத் சாலையில் உள்ள சோனியா காந்தி வீட்டு வாசலில் பிரதமர் தலைமையில் நாட்டின் உயர் தலைவர்கள் வரிசையாக அணிவகுத்து நின்றுகொண்டு இருந்தார்கள்.
சோனியா காந்திக்குத் தமது ""ஆழ்ந்த நன்றி'யைத் தெரிவிப்பதற்காக கைகளில் மலர்க்கொத்துகளுடன் அவர்கள் நின்று கொண்டு இருந்தனர். எதற்காக? அவர்களது தலைவராக அவர் 10 ஆண்டுகள் இருந்துவிட் டமைக்காக.
இதே அளவுக்கு வேதனையைத் தந்த மற் றொரு விஷயம், கடந்த வாரம் பெங்களூர் நாளிதழ்களில் அதிக முக்கியத்துவம் கொடுத் துப் பிரசுரிக்கப்பட்டு இருந்த ஒரு விளம்பர மாகும்.
""உதயமாகிவரும் துடிப்புமிக்க இளம் இந்தி யாவின் சின்னமான எமதருமைத் தலைவர் திரு. ராகுல் காந்தி அவர்களுக்கு இதயம் கனிந்த நல்வரவு'' என கர்நாடக மாநில காங்கி ரஸ் கமிட்டி வெளியிட்டிருந்த விளம்பரம் தான் அது.
ஆந்திரப் பிரதேச சட்ட மேலவைக்குத் தன்னை நியமிக்கக்கோரி ஹைதராபாதைச் சேர்ந்த காங்கிரஸ்காரர் ஒருவர், சோனியா காந்திக்கு அண்மையில் ஒரு கடிதம் எழுதியி ருந்தார். ""மிகவும் மேன்மை பொருந்திய சோனியா காந்தி அம்மையார் அவர்களே!.....
பிரியங்கா மற்றும் ராகுல் காந்தி பேரவை யைத் தனி அமைப்பாக 1994-லேயே தொடங் கியவன் நான்....'' என்று போகிறது அக் கடி தம்.
கர்நாடக மாநில காங்கிரஸ் கமிட்டி காட் டியிருந்த தாழ்மையுணர்ச்சி அந்தக் கடிதத் தைவிட ஒரு மாற்றுதான் குறைவு என்பதை ஒப்புக்கொண்டே ஆக வேண்டும்.
இத்தகைய அடிமைத்தனமிக்க துதிபாடிக ளுக்கென இரு அடிப்படை விதிகளும் இருக் கின்றன.
முதலாவதாக, இதன் மூலம் ஆதாயம் பெறு பவர்கள், மேலிடத்தின் ஆசியும் ஊக் குவிப்பும் இல்லாமல் அவ்வாறு செய்ய முடியாது. 2004-ல் நடை பெற்ற அகில இந்திய காங்கிரஸ் கமிட்டிக் கூட்டத்தின்போது, ""என் னைப் புகழ்ந்து பேசி நேரத்தை வீணாக்காதீர்கள்'' என்று சோனியா காந்தியே கூறும் அளவுக்கு, அவரை வானளாவப் புகழ்ந்து பேசினர் அவரது கடைக்கண் பார்வைக்காகக் கூழைக்கும்பிடு போடும் கட் சித் தலைவர்கள். ஆனால், உண்மையில் அந்த அர்த்தத்தில் சோனியா அதைக் கூறவில்லை என்பது வேறு விஷயம்.
தன்னைப் புகழ்ந்து பேசுவதை அவர் உண் மையிலேயே விரும்பவில்லையெனில், காங்கி ரஸ் கட்சியின் தலைமைப் பதவியில் மேலும் ஓர் ஆண்டைப் பூர்த்திசெய்வது என்னும் மிகச் சாதாரணமான காரியத்துக்காக, தமது நன்றியைத் தெரிவிப்பதென்ற மிகச் சாதார ணச் செயலுக்காக பிரதமரும் மத்திய அமைச் சர்களும் தனது வீட்டு வாசலில் காத்துக் கிடக்கத் தேவையில்லை என்று அவர் கூறி இருந்திருக்கலாம். ஆனால், அவர் அதைச் செய்யவில்லை; ஏனென்றால் எதுவுமே செய் யாமல் எல்லாவற்றையும் அனுபவித்துக் கொண்டு இருப்பவர்களைப் போலவே, அவ ரும் அவரைச் சுற்றி அரசவை துதிபாடிக ளைப்போல ஒரு கூட்டம் இருப்பதை விரும் புகிறார்.
இந்த அடிமைத்தனத்துக்கான இரண்டா வது விதி என்னவென்றால், ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் புகழ்ச்சிக்குரியவர் பட்டிய லில் யார்யார் இடம்பெற்று இருக்கிறார் களோ அவர்களை மட்டுமே புகழ வேண்டும் என்பதாகும்.
கட்சியின் மீதான தனது பிடியை சோனியா காந்தி உறுதிப்படுத்திக் கொண்டு விட்டவுடன் இந்திரா காந்தியின் பெயர் பின்னுக்குத் தள் ளப்பட்டு விட்டது. அதோடு, ராஜீவ் காந்தியின் பெயர் முன்னுக்குக் கொண்டு வரப்பட்டு சுவ ரொட்டிகள், விளம்பரங்கள், தலைவர்களின் உரைகள் அனைத்திலும் அவருக்கே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது.
அதேபோல அதிகாரபூர்வமாக ராகுல் காந்தி முன்னிறுத்தப்பட்டவுடன், துதிபாடி கள் அவசியமானால், போகிற போக்கில் பிரி யங்கா காந்தியின் பெயரைக் குறிப்பிட்டால் போதும் என்ற நிலை உருவாக்கப்பட்டுள் ளது. அனைத்துப் பரம்பரை ஆட்சிகளி லுமே வாரிசுரிமை யாருக்கு என்பது மிக முக் கியமானதாகும்.
எங்கெங்கு காணினும் ராஜீவ் காந்தி என்ற சூழ்நிலையில், ஹைதராபாத் புதிய விமான நிலையத்துக்கும் ராஜீவ் காந்தியின் பெயரைச் சூட்டியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி விட் டிருக்கிறது.
சொல்லப்போனால், இந்தியாவில் உள்ள விமான நிலையங்களிலேயே எந்த விமான நிலையத்துக்கு ராஜீவ் காந்தியின் பெயரை வைக்கக்கூடாது என்று கேட்டால் அது ஹைதராபாத் விமான நிலையத்துக்குத்தான்.
ஏனென்றால், ஹைதராபாத் விமான நிலை யத்தில்தான் அன்றைய ஆந்திரப் பிரதேச முதல்வர் டி.அஞ்சையாவை பகிரங்கமாக அவமதித்து, ஆந்திரத்தின் ஆத்மகெüரவத் தைக் காயப்படுத்தினார் ராஜீவ் காந்தி.
மும்பை விமான நிலையத்துக்கு ராஜீவ் காந்தியின் பெயரைச் சூட்டுவதற்கு முயற்சி செய்தார் முன்னாள் மத்திய அமைச்சரான மாதவராவ் சிந்தியா. ஆனால், மகாராஷ்டிர மக்கள் அந்த முயற்சியை முறியடித்து விட்ட னர்.
ஆந்திரப் பிரதேசத்தில் இப்போது முதல்வ ராக இருப்பவர் காங்கிரஸ்காரர். தெலுங்கு தேசம் கட்சி ஆட்சியின்போது தொடங்கப் பட்ட இளைஞர் நலம் மற்றும் நிலச் சீர்திருத் தத் திட்டங்களுக்கே ராஜீவ் காந்தியின் பெயரை மறு-நாமகரணம் செய்து தனது விசு வாசத்தைக் காட்டிக் கொண்டிருப்பவர் அவர்.
உண்மையில், நாடு முழுவதும் உள்ள பல் வேறு நிறுவனங்களுக்கும் திட்டங்களுக்கும் ராஜீவ் காந்தியின் பெயரைச் சூட்டுவது ஏதோ தொற்றுநோய் போல பரவி இருக்கி றது.
ராஜீவ் காந்தி மருந்தியல் அகாதெமி, ராஜீவ் காந்தி கணினி கல்வித் திட்டம், ராஜீவ் காந்தி தேசிய தர விருது, ராஜீவ் காந்தி வித்யூதி கரண் யோஜனா, ராஜீவ் காந்தி குடிநீர்த் திட் டம், ராஜீவ் காந்தி உயிரியல் கல்லூரி... எனப் பட்டியல் நீண்டுகொண்டே போகிறது. அவ் வளவு ஏன், இந்திய ~ சீன எல்லையைக் குறிக் கும் மக்மோகன் கோட்டையே ""டெங் ~ ராஜீவ் கோடு'' எனப் பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்று யோசனை கூறினார் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ்.
ஆக, இப்போது இந்து மகா சமுத்திரத் துக்கு ""ராஜீவ் காந்தி மகா சமுத்திரம்'' என்று பெயர் சூட்ட வேண்டியதுதான் பாக்கி.
தற்போது வெளியாகியிருக்கும் "தி எக்கனா மிஸ்ட்' ஆங்கில இதழில், மிக மகிழ்ச்சியாக இருக்கும் சோனியா காந்தியின் படத்தைப் பிரசுரித்து, ""இத்தாலியின் மிக வெற்றிகர மான அரசியல்வாதி' என்னும் நறுக்கென்ற விளக்கத்தைக் கொடுத்திருந்ததன் அர்த்தம் இப்போதுதான் மெல்லப் புரியத் தொடங்கி யிருக்கிறது நமக்கு.
(தினமணி கட்டுரையாளர்: பத்திரிகையாளர்)
Sunday, April 6, 2008
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment