Friday, May 9, 2008

5 இலங்கைப் பெண்கள் கைது

போலி விஷா மூலம் இத்தாலிக்கு செல்ல முயன்ற இலங்கையைச் சேர்ந்த 5 பெண்கள் அமிர்தரஸ் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர் என தமிழக நாளேடுகளில் இருந்து செய்திகள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து மேலும் தெரிவிக்கப்பட்டவை பின்வறுமாறு

இலங்கையை சேர்ந்த டயானா, நிஷானி, வர்ணகுலசூரிய, திலினி மற்றும் சமந்தி ஆகியோர் கடந்த மார்ச் மாதம் பெங்களூர் வந்தனர். அங்கிருந்து டில்லி சென்ற அவர்கள் நேற்று முன்தினம் அமிர்தரஸ் சென்றனர் பின்னர் நேற்றுமுன்தினம் மாலை அவர்கள் அனைவரும் ராஜாசன்சி விமான நிலையத்தில் இருந்து எயார் இந்தியா விமானம் மூலம் இத்தலிக்கு செல்ல முயன்றுள்ளனர். அப்போது குடியேற்ற அதிகாரிகள் சோதனையில் அவர்கள் பிடிபட்டனர் ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த அவர்கள் பிழைப்புக்காக இத்தாலி செல்ல முயன்றனர் என்று விசாரணையில் தெரிய வந்துள்ளது அவர்கள் ஐந்து பேரையும் தடுப்புக்காவலில் வைத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் என தெரிவிக்கப்படுகிறது.

No comments: