இலங்கை இராணுவத்துக்கு இந்தியா ஆயுதம் வழங்கவில்லையென்றால் பாகிஸ்தானும் சீனாவும் ஆயுதங்களை வழங்கும். எனவே இலங்கை இராணுவத்திற்கு இந்தியா ஆயுதங்களை வழங்குவதை குறைகூற முடியாதெனத் தெரிவித்துள்ள தே.மு.தி.க. தலைவரும் நடிகருமான விஜயகாந், இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு தமிழகம் சார்ந்த பார்வை, இந்திய அளவிலான பார்வை என இரு கோணங்கள் இருப்பதாகவும் குறிப்பிட்டார்.
தற்போது டில்லியில் தங்கியிருந்து கூட்டணி தொடர்பாக காங்கிரஸ் தலைவர்களுடன் ரகசிய பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுவரும் விஜயகாந், தனது கட்சியின் அணுகுமுறை தொடர்பாக ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கையிலே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது;
இலங்கைத் தமிழர் பிரச்சினையை பொறுத்தவரை அங்கு மனிதாபிமான அடிப்படையில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாண வேண்டும். நாகாலாந்தில் இயங்கும் தடை செய்யப்பட்டுள்ள அமைப்புகளுடன் மத்திய அரசு பேச்சு வார்த்தை நடத்துகிறது. அப்படியிருக்கும் போது இலங்கையில் தற்போது நடக்கும் இனப்பிரச்சினைக்கு தீர்வுகாண விடுதலைப் புலிகளுடன் இந்திய மத்திய அரசு ஏன் பேச்சுவார்த்தை நடத்தக் கூடாது?
இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு இரண்டு கோணங்கள் உள்ளன. ஒன்று தமிழகம் சார்ந்த பார்வை. மற்றையது இந்திய அளவிலான பார்வை. இலங்கை இராணுவத்துக்கு இந்தியா ஆயுதங்களை வழங்காது விட்டால் சீனா, பாகிஸ்தான் நாடுகள் ஆயுதங்களை வழங்கும். எனவே இந்தியா ஆயுதங்கள் வழங்குவதை குறைகூற முடியாது.
வேலூர் சிறையிலுள்ள ராஜீவ் கொலைக்கைதி நளினியை பிரியங்கா காந்தி சந்தித்தது மனிதாபிமான அடிப்படையிலானது. கூட்டணி குறித்து பேசுவதற்கு நான் டில்லி வரவில்லை. ஆனாலும் காலங்கள் மாறும். அரசியல் சூழ்நிலைகள் மாறும்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment