Sunday, May 11, 2008

வயோதிப மாது ஷெல்லில் காயம்

மன்னார், வங்காலை இராணுவ முகாமுக்கு அருகில் உள்ள வீடு ஒன்றுக்கு முன்னால் நேற்றுமுன்தினம் இரவு 7.40 மணியளவில் வீழ்ந்து வெடித்த ஷெல்லினால் அந்த வீட்டில் தங்கியிருந்த நாகம்மா (வயது 76) என்ற வயோதிபப் பெண் காயமடைந்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்று இரவு எட்டுமணியளவில் சிகிச்சைக்காக இந்த வயோதிப மாது மன்னார் பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார் என்றும், இந்தத் தாக்குதலை விடுதலைப் புலிகளே மேற்கொண்டனர் என்றும் படைத்தரப்பில் கூறப்பட்டது.

No comments: