Friday, May 9, 2008

வை.கோவின் முயற்சியை இந்திய அரசு நிராகரிப்பு

வை.கோவினால் இலங்கைக்கு எதிராக ஐ.நாவில் தாக்கல் செய்ய மேற்கொள்ளப்பட்ட முயற்சியை இந்திய அரசாங்கம் நிராகரித்துள்ளது

இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையில் மனு ஒன்றை தாக்கல் செய்வதற்கு தமிழக அரசியல்வாதி வை.கோ மேற்கொண்ட முயற்சிக்கு இந்திய அரசாங்கம் மறுப்பு தெரிவித்துள்ளது. இந்த செய்தியை தினமின செய்திதாள் குறிப்பிட்டுள்ளது.

அண்மையில் புலிகளின் ஆதரவுடன் நோர்வோ மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு மேற்கொண்ட விஜயத்தின் போது வை.கோ. இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக ஐரோப்பிய பாராளுமன்றம் அழுத்தங் கொடுக்க வேண்டும் கோரிக்கை விடுத்திருந்தார். வன்னிக்கு மருந்து பொருட்கள் மற்றும் உணவுப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட வேண்டும் என்று மத்திய அரசிடம் வை.கோ. முன்வைத்த கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments: