போதைப் பொருள் கடத்தியதாக 2 தமிழருக்கு சீனாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டது.
.
ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர் அஸ்கர் மியான். இவர் கடந்த 2003ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் தாய்லாந்தில் சமையல் வேலை பார்க்க சென்றார். அப்போது அவரை சுல்தான் என்பவரும், அவரது மகன் சலீம்கான் என்பவரும் சந்தித்து லண்டனில் வேலை வாங்கித் தருவதாக ஆசை காட்டினார்கள். அதை நம்பி சுல்தானுக்கு 3.5 லட்சம் ரூபாய் தருமாறு அஸ்கர் தனது குடும்பத்தினரிடம் கூறினார்.
பணத்தைப் பெற்றுக்கொண்ட பின்னர் சுல்தான் அஸ்கரிடம் கம்போடியாகவுக்கு சென்று சீனா வழியாக லண்டனுக்கு செல்ல ஏற்பாடு செய்துள்ளதாக கூறினார். அதன் பேரில் அஸ்கர் கம்போடியாவுக்கு சென்று 2 ஆண்டுகள் கடுமையாக உழைத்தார்.
கடந்த ஆண்டு பிப்ரவரி 14ம் தேதி அஸ்கர் தனது குடும்பத்தினரிடம் தொடர்பு கொண்டு சீனாவுக்கு செல்வதாக கூறினார். 1301 கிராம் ஹெராயின் என்ற போதைப் பொருள் வைத்திருந்ததாக அதே மாதம் 22ம் தேதி சீன சுங்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
இதேபோன்று, தஞ்சாவூரைச் சேர்ந்த உசேன் மைதீன் என்பவரும் கடந்த ஆண்டு மார்ச் 31ம் தேதி சீனாவில் குவாங் சூ மாகாணத்தில் நுழை முற்பட்டபோது சந்தேகத்தின் பேரில் அவரை அதிகாரிகள் பிடித்து சோதனை நடத்தினர். அப்போது அவருடைய வயிற்றில் இருந்து 300.09 கிராம் ஹெராயின் போதைப் பொருளை கைப்பற்றினர். அவருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே 3 முறை உசேன் மைதீன் போலி பெயர்களில் சீனாவுக்கு போதைப் பொருளை கடத்தி இருப்பதாக விசாரணையில் ஒப்புக்கொண்டார்.
இவருக்கும், அஸ்கர் மியானுக்கும் கடந்த ஆண்டு ஆகஸ்டு 2ம் தேதி மரண தண்டனை விதிக்கப்பட்டது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment