Tuesday, June 17, 2008

புலிகளுக்கு தமிழீழம் வழங்கப்பட மாட்டாது

தமிழ் மக்களுக்கு சுயாதீன தமிழ் ஈழமொன்று வழங்கப்பட வேண்டும் என நோர்வே அரசாங்கத்தின் ட்ரொன்ட் ஜென்ஸ்ட்ரெட் வெளியிட்ட கருத்துக்கு இலங்கை அரசாங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பான எதிர்ப்பை இலங்கை அரசாங்கம் நோர்வே அரசாங்கத்திற்கு நேற்றைய தினம் வெளியிட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எந்த வகையிலும் தமிழீழம் வழங்கப்பட மாட்டாது என அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது. மேலும், வன்னியில் முன்னெடுக்கப்படும் இராணுவ நடவடிக்கைகளும் நிறுத்தப்பட மாட்டாதென குறிப்பிட்டுள்ளது. கடந்த சனிக்கிழமை (யூன்14) நோர்வேயில் நடைபெற்ற பொங்கு தமிழ் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே குறித்த நோர்வே அரசியல்வாதி இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார். ஒஸ்லோவில் நடைபெற்ற இந்த நிகழ்வின் போது தமிழீழ கொடி ஏற்றப்பட்டிருந்தது. இந்த பொங்கு தமிழ் நிகழ்விற்காக அண்டை நாடுகளிலிருந்து புலி ஆதரவாளர்கள் போக்குவரத்து செய்த பேரூந்துகளில் புலிக்கொடி ஏற்றப்பட்டிருந்ததாக நோர்வேயின் புளொட் அலுவலகம் உறுதிப்படுத்தியதாக செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன.

No comments: