Thursday, June 12, 2008

அரசனும் ஒருநாள் ஆண்டியாவான் என்ற அன்றையகதை இன்று நெஐயமாகி “நேபாளம்”

நேபாளத்தின் இறுதி மன்னரான கஜனேந்திரா, நேற்று மாலை தனது குடும்பத்தினருடன் மாளிகையை விட்டு வெளியேறி காட்டுப்பகுதியில் அமைந்துள்ள நாகார்ஜுனா மாளிகையில் குடியேறியதாக தெரிவிக்கப் படுகிறது. நேபாளத்தில் மன்னராட்சி முடிவுக்கு கொண்டுவரப்பட்டு அந்நாடு குடியரசாக பிரகடனப் படுத்தப்பட்டதையடுத்து பதவியை விட்டு வெளியேறிய மன்னர், அரண்மனையையும் விட்டு வெளியேறவேண்டு மென மாவோவாத கட்சியினர் அழுத்தங் கொடுத்து வந்தனர். இந்நிலையில் அவர்களால் விதிக்கப்பட்ட காலக்கெடுவுக்கு ஒருநாள் முன்பாக முன்னாள் மன்னர் அரண்மனையை விட்டு வெளியேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நாராயண்ஹிதி அரண்மனை தேசிய சொத்தாக தற்போது மாறியுள்ளது. முன்னாள் மன்னார் தற்போது குடியேறியுள்ள நாகார்ஜுனா மாளிகையையும் ஒரு அரண்மனைக்குரிய சகல வசதி களையும் கொண்டமைந்துள்ளது. மேற்படி மாளிகையின் கட்டிடத் தொகுதியில் முன்னாள் மன்னர்களுக்கான குடியிருப்பு, 3 விருந்தினர் இல்லங்கள், ஒரு அலுவலகம், ஒரு அலுவலர் குடியிருப்பு உள்ளடங்கலாக 10 கட்டிடங்கள் வரை அமைந்துள்ளன. முன்னாள் மன்னர் அரண்மனையை விட்டு வெளியேறு வதையொட்டி நேற்று காலை பிரதமர் கிரிஜா பிரசாத் கொய்ராலாவுக்கும் உள்துறை அமைச்சர் கிருஷ்ண பிரசாத் சிதாவுலாவுக் குமிடையே விசேட சந்திப்பு இடம்பெற்றது. இதன்போது நேபாள தலைமை இராணுவ தளபதிருக்மாங்கத் கத்வால் மற்றும் நேபாள பொலிஸ் உயர் அதிகாரிகள் பலரும் சமூகமளித்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இச்சந்தி ப்பில் கஜனேந்திரா புதிதாக குடியேறும் மாளிகையின் பாதுகாப்பு நிலை, அவருக்கு வழங்கப்பட வேண்டிய பாதுகாப்பு போன்ற விடயங்கள் தொடர் பில் ஆராயப்பட்டதாக கூறப்படுகிறது.நேபாளத்தின் இறுதி மன்னரான கஜனேந் திரா, நேற்று மாலை தனது குடும்பத்தினரு டன் மாளிகையை விட்டு வெளியேறி காட்டுப்பகுதியில் அமைந்துள்ள நாகார்ஜுனா மாளிகையில் குடியேறியதாக தெரிவிக்கப் படுகிறது. நேபாளத்தில் மன்னராட்சி முடிவுக்கு கொண்டுவரப்பட்டு அந்நாடு குடியர சாக பிரகடனப் படுத்தப் பட்டதையடுத்து பதவியை விட்டு வெளியேறிய மன்னர், அரண்மனையையும் விட்டு வெளியேற வேண்டு மென மாவோவாத கட்சியினர் அழுத்தங் கொடுத்து வந்தனர். இந்நிலையில் அவர்களால் விதிக்கப் பட்டகாலக்கெடுவுக்கு ஒருநாள் முன்பாக முன்னாள் மன்னர் அரண்மனையை விட்டு வெளியேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நாராயண்ஹிதி அரண் மனை தேசிய சொத்தாக தற்போது மாறி யுள்ளது. முன்னாள் மன்னார் தற்போது குடியேறியுள்ள நாகார்ஜுனா மாளிகை யையும் ஒரு அரண்மனைக்குரிய சகல வசதி களையும் கொண்டமைந்துள்ளது. மேற்படி மாளிகையின் கட்டிடத்தொகுதியில் முன்னாள் மன்னர்களுக்கான குடியிருப்பு, 3 விருந்தினர் இல்லங்கள், ஒரு அலுவலகம், ஒரு அலுவலர் குடியிருப்பு உள்ள டங்கலாக 10 கட்டிடங்கள் வரை அமைந் துள்ளன. முன்னாள் மன்னர் அரண்மனையை விட்டு வெளியேறுவதையொட்டி நேற்று காலை பிரதமர் கி?ஜா பிரசாத் கொய்ராலா வுக்கும் உள்துறை அமைச்சர் கிருஷ்ண பிரசாத் சிதாவுலாவுக்குமிடையே விசேட சந்திப்பு இடம்பெற்றது. இதன்போது நேபாள தலைமை இராணுவ தளபதி ருக்மாங்கத் கத்வால் மற்றும் நேபாள பொலிஸ் உயர் அதிகாரிகள் பலரும் சமூகமளித்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இச்சந்திப்பில் கஜ னேந்திரா புதிதாக குடியேறும் மாளிகையின் பாதுகாப்பு நிலை, அவருக்கு வழங்கப் பட வேண்டிய பாதுகாப்பு போன்ற விட யங்கள் தொடர்பில் ஆராயப்பட்டதாக கூறப்படுகிறது.

No comments: