Monday, June 2, 2008

"இலவச" மோசடிகள்

தங்கக் காசு மோசடி, போஸ்ட் கார்டு மோசடி, வெளிநாட்டில் வேலை வாங்கித் தரு வதாகக் கூறி பண மோசடி போன்றவை தற் போது பரபரப்புக்குள்ளாகியுள்ளன. இது, "ஏமாறுகிறவர்கள் இருக்கும்வரை, ஏமாற்று வோர் இருக்கத்தான் செய்வர்' என்பதையே காட்டுகிறது.
மதுரையில் ஆயுதப்படை மைதானம் பகுதி யில் உள்ள கல்யாண மகாலில் ஒரு தனியார் நிறுவனம் செய்துள்ள விளம்பரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அதில் உள்ள வாசகங்கள், "ரூ. 360 மதிப் புள்ள ஒரு சேலை வாங்கினால், ஒரு கிராம் எடையுள்ள தங்க மூக்குத்தி மற்றும் 15 பொருள்கள் இலவசமாக வழங்கப்படும்' இந்த விளம்பரத்தை நம்ப முடிகிறதா? இதை நம்பி, இலவசப் பொருள்களுக்காகவே அந்தச் சேலையை வாங்குவோர் ஏராளம்.
இதேபோல், 5 பவுன் தங்க நகைகள் வாங்கி னால் அரை பவுன் இலவசம்; 10 பவுன் வாங்கி னால் 1 பவுன் நகை இலவசம், 1 பட்டுச் சேலை எடுத்தால் ஒரு பட்டுச் சேலை இலவ சம், 1 கிலோ கோழிக் கறி வாங்கினால் 4 முட் டைகள் இலவசம், தனியார் நிதி நிறுவனத் தில் பணம் டெபாசிட் செய்தால் 30 அல்லது 35 சதவிகிதம் வட்டி... என இதுபோன்று ஏராளமான கவர்ச்சிகரமான விளம்பரங்கள் தொலைக்காட்சிகளிலும், வானொலியிலும், பத்திரிகைகளிலும் செய்யப்பட்டு வருகின் றன.
"விளக்கு வெளிச்சத்தில் விழும் விட்டில் பூச் சிகளாய்' அதுபோன்ற கவர்ச்சி விளம்பரங் களை நம்பி, நுகர்வோர்களும் தரமற்ற பொருள்களை வாங்கி ஏமாந்து வருகின்ற னர்.
ஆனாலும், தனியார் நிறுவனங்கள் போட் டிபோட்டுக்கொண்டு தங்களது பொருள் களை விற்க, நுகர்வோரின் "வாங்கும் எண் ணங்களைத்' தூண்டிவிடும் விளம்பரங்களை செய்துகொண்டுதான் உள் ளன. அவற்றை முறைப்படுத்த போதிய நடவடிக்கை இல்லை.
இதுபோன்ற மாயையான விளம்பரங் களை நம்பி நுகர்வோர் பாதிக்கப்படுவது தொடர்கதையாகி வருகிறது.
"இலவசம்' என்ற கவர்ச்சியால் நுகர்வோ ரின் இயல்பான சிந்தனை சிதறடிக்கப்படுகி றது. இதுபோன்ற விளம்பரங்கள்கூட மனித உரிமை மீறல்களே.
இந்த நிறுவனங்களால் எப்படி இவ்வளவு பொருள்களை இலவசமாகத் தரமுடியும் என்ற கேள்வி அனைத்துத் தரப்பினருக்கும் எழுவது இயல்பே.
பத்து பவுன் தங்க நகைகள் வாங்கினால் 1 பவுன் நகை இலவசம் என்று அறிவிக்கப்பட் டுள்ள கடைகளில், அந்த நகைகளை வாங்கும் நுகர்வோருக்கு "பில்' கொடுப்பது இல்லை.
மாறாக பில் வேண்டும் என்றால் அதற்கென தனியாக "புரியாத வரி விதிப்புகள்' குறித்து நுகர்வோர்களை கடைக்காரர்கள் குழப்ப, "பில்' வேண்டாம் என்ற மனநிலைக்கு வந்து விடுகின்றனர்.
இதுபோன்று வாங்கப்படும் தங்கம் தரம் வாய்ந்தவையா? எவ்வளவு "காரட்' கொண்டவை என்று நுகர்வோர்கள் சோதித்துப் பார்ப்பதற்கான வாய்ப்பையும் கடைக்காரர்கள் தருவ தில்லை. வாங்கப்பட்ட நகைகளை அவசரத் தேவைக்காக வேறு கடைகளில் விற்பனை செய்யும்போதுதான் அந்த தங்கத்தின் தரம் போன்ற உண்மை நிலவரம் தெரிய வருகிறது.
ரூ. 360-க்கு விற்பனை செய்யப்படும் சேலை யுடன் ஒரு கிராம் மூக்குத்தி கொடுக்கப்பட் டாலும், அந்த வகையான மூக்குத்தி தங்கத் தால் ஆனதா? என்று யாரும் பார்ப்பதில்லை.
அது "கவரிங்'காக இருந்தாலும் அதை வழங்கி யவர் மீது நடவடிக்கை எடுக்க ரசீது இல்லை.
மேலும், மூக்குத்தியுடன் வாங்கப்படும் பெரும்பாலான பொருள்கள் பிளாஸ்டிக் வகைகளே.
அவை அனைத்தும் 3-ம் தரம் வாய்ந்தவை.

அவை திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் டன் கணக்கில் விலைக்கு எடுக்கப்படுகின்றன.
அதில் வழங்கப்படும் சேலையின் அசலே (மொத்த விலையில் எடுக்கும்போது) ரூ.
50-க்கும் குறைவாகவே இருக்கும் என விவரம் தெரிந்த வியாபாரிகள் கூறுகின்றனர்.
இதுபோன்ற நேரங்களில் ஏமாந்துவிட் டோமே என்ற ஆதங்கத்தில் பாதிக்கப்பட் டோர் நுகர்வோர் நீதிமன்றத்தை நாடினால், அங்கு முதலில் கேட்கப்படுவது "பில்' உள் ளிட்ட ஆதாரங்கள் மட்டுமே. இச் சூழலில் தான் இலவசப் பொருள்களுக்காக நாம் ஏமாந்துவிட்டோமே என்று நுகர்வோர்க ளின் புத்தியில் படும்.
இதுபோன்ற மோசடிகள் குறித்து நுகர் வோர் பாதுகாப்புச் சட்டம்-1986-ல் "நேர்மை யற்ற வணிக முறை' என குறிப்பிடப்பட்டுள் ளது.

அச் சட்டத்தில், குலுக்கல் முறையில் பரிசு அளிப்பது, ஒரு பொருள் வாங்கினால் ஒரு பொருள் இலவசமாகத் தருவது, வங்கியில் ஒரு குறிப்பிட்ட தொகை வைப்புத் தொகை யாக (டெபாசிட்) இருந்தால்தான் "வங்கி லாக் கர்' வசதியைப் பயன்படுத்த முடியும் என்பது உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட நிபந்தனை கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
நேர்மையற்ற வணிக முறையில் நுகர்வோர் களுக்கு "பில்'கள் வழங்கப்படுவதில்லை என்ப தால், பாதிக்கப்பட்டோர் நீதிமன்றங்களுக்கு இதுபோன்ற வழக்குகளைக் கொண்டு செல் லமுடிவதில்லை.

எனவே, இதுபோன்ற இலவச மோசடிகள் குறித்து காவல் துறையினர் தானே முன்வந்து விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும் அல்லது வணிக ரீதியாக "இலவசங்கள்' வழங்கப்படுவது தொடர்பாக சில முறையான சட்டத் திருத் தங்களை அரசு விரைந்து மேற்கொள்ள வேண்டும்.
அப்போதுதான் நுகர்வோர்கள் பாதுகாக் கப்படுவர். அதுவரை பெயர் தெரியாத நிறுவ னங்கள் மேற்கொள்ளும் இதுபோன்ற கவர்ச் சியான, இலவச விளம்பரங்களால் நுகர் வோர் ஏமாற்றப்படுவது தொடர்கதையாகத் தான் இருக்கும்.

No comments: