Friday, June 6, 2008

மகிந்தவுக்கு பிரபாகரன் சவால்

மாலைநேரம் மகிந்த தனது அலவலகத்தில் இருந்தபோது
தொலைபேசி அழைத்தது.



"ஹலோ மிஸ்டர் ராஜபக்ஷ” கனத்த குரலில் ஒருவர் பேசினார்.
நான் பிரபாகரன் பேசுகிறேன். நான் உங்களை அழைத்ததன்
காரணம் நான் உத்தியோகபூர்வமாக யுத்தப்பிரகடனம் ஒன்றை
உங்களுடன் செய்துகொள்கிறேன்.

நல்லது பிரபாகரன் இது நிச்சயமாக முக்கியமான செய்தி.
சொல்லுங்கள் உங்களிடம் இராணுவ பலம் எவ்வளவு.

பிரபாகரன் கணக்கு பார்க்கின்றார். நான் எனது நண்பன் எனது
அயலவர் விடுதலைச் சிறுத்தைகள் முழுக் கிராமத்திலுமுள்ள
ஜுனியர் கிறிக்கட் குழு எல்லாமாகச் சேர்த்தால் எட்டு இராணுவம்
உள்ளது.

ராஜபக்ஷ பெருமூச்சு விட்டு விட்டு சொல்லுகிறார்.பிரபாகரன் நான்
உமக்குச் சொல்லுறன் ஒரு மில்லியன் ஆண்கள் உள்ள
இராணுவம் என் ஆணைக்காக காத்திருக்கின்றது.

பிரபாகரன் சொல்கிறார் ஓகே நான் திரும்ப போன் பண்ணுகிறேன்.

மறுநாள் பிரபாகரன் போனில் அழைக்கிறார். சரி மிஸ்டர் ராஜபக்க்ஷ யுத்தம் இன்னும் அமுலில் தான் உள்ளது. நாங்கள் மேலும்
சில உபகரணங்களைப் பெற்றுக் கொண்டுள்ளோம்.

ராஜபக்ஷ கேட்கிறார் மிஸ்டர் பிரபாகரன் என்ன உபகரணங்
களைப் பெற்றுள்ளீர்கள்.

பிரபாகரன் சொல்கிறார் என்னிடம் இரண்டு நெல்லு வெட்டும்
கொம்பைன் இயந்திரங்களும் புல்டோசர், ட்ராக்டர் எல்லாம்
வைகோவின் பண்ணையிலிருந்து பெற்றுக் கொண்டுள்ளோம்.

மீண்டும் பெருமூச்சுடன் ராஜபக்க்ஷ சொல்கிறார், பிரபாகரன் நான்
உமக்குச் சொல்கிறன் என்னிடம் ஐம்பதாயிரம் சீன டாங்கிகளும்
இரண்டாயிரம் இஸ்ரேல் தயாரிப்பு கண்ணிவெடிகளும் பத்தாயிரம்
சீனத்தயாரிப்பு கவச வாகனங்களும் அத்தோடு நான் உம்மோடு
கடைசியாக கதைத்ததை விட இப்பொழுது ஒன்றரை மில்லியன்
இராணுவமாக அதிகரிகக்கப்பட்டுள்ளது.

பிரபாகரன் சொல்கிறார் நான் இன்னும் உறுதியுடனிருக்கிறேன்.
திரும்பவும் போன் பண்ணுகிறேன்.

மறுநாள் மீண்டும் பிரபாகரன் ராஜபக்ஷவை போனில் அழைக்கிறார்.
மிஸ்டர் ராஜபக்ஷ யுத்தம் இன்னும் அமுலில்தான் உள்ளது. நாங்
கள் ஆகாயமார்க்கமாக தாக்கும் வசதிகளைப் பெற்றுக்கொண்டுள்
ளோம். இரண்டு றைபிள்களுடன் பயிர்களுக்கு கிருமிநாசினி தெளிக்
கும் கருவியுடன்கூடிய விமானமும் அத்துடன் நெடுமாறனின்
ஹொக்கி விளையாட்டு ரீமும் எம்முடன் இணைந்துள்ளன.

மீண்டும் பெருமூச்சுடன் ராஜபக்க்ஷ சொல்கிறார்.
நான் உமக்கு கட்டாயமாகச சொல்லவேண்டும் மிஸ்டர் பிரபாகரன்
என்னிடம் நாலாயிரம் கிபிர் குண்டுவீச்சு விமானங்களும்
எண்ணாயிரம் பாகிஸ்தானித் தயாரிப்பு அதிரடித் தாக்குதல்
நடத்தக்கூடிய விமானங்களும் அத்துடன் கதிர் உதவியுடன்
தாக்கக் கூடிய ஆகாய மார்க்கத் தாக்குதல் ஏவுகணைகளும்
இந்தியாவினால் வழங்கப் பட்டுள்ளன. அதுமட்டுமல்ல நான்
உம்முடன் கடைசியாக கூறியதைவிட இரண்டு மில்லியனாக
இராணுவம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதிர்ச்சியடைந்த பிரபாகரன் மிஸ்டர் ராஜபக்க்ஷ நான் திரும்ப
போன் எடுக்கிறேன் என்றார்.

பிரபாகரன் மீண்டும் போனில் அழைக்கிறார்.
சரி மிஸ்டர் ராஜபக்க்ஷ நான் சொல்வதையிட்டு மன்னிக்கவும். நான்
யுத்தத்தை வாபஸ் பெறுகின்றேன்.

இதைக்கேட்கும் போது வருத்தமாக உள்ளது ராஜபக்க்ஷ கூறினார்.
இந்த மனமாற்றத்திற்கு காரணம் என்ன மிஸ்டர் பிரபாகரன்

பிரபாகரன் கூறினார். நாங்கள் கலந்தாலோசித்து முடிவு செய்துள்
ளோம். இரண்டு மில்லியன் போர்க் கைதிகளை வைத்துச் சமாளிக்க எங்களால் முடியாது.

No comments: