
கொல்கத்தாவில் பிச்சைக்காரர்கள் சேமித்து வைத்திருக்கும் பணத்தால் அவர்களது உயிருக்கு ஆபத்தேதும் ஏற்படலாம் என உணர்ந்த அப்பகுதிக்கான ஆளுநர் அவர்களின் சேமிப்புக்கான வங்கிக் கணக்கொன்றை திறக்கும் திட்டம் ஒன்றை ஆரம்பித்து வைத்தார். இதனையடுத்து அப்பகு தியைச் சேர்ந்த பிச்சைக்காரி ஒருவர் 3 வாளிகளில் தான் சேமித்து வைத்திருந்த பணத்தை கொண்டு வங்கிக் கணக்கொன்றை ஆரம்பித்துள்ளார். லட்சுமிதேவி (வயது 50) என்பவரே இக்கணக்கை ஆரம்பித்து வைத்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, மேற்படி திட்டம் குறித்த அறிவித்தலையடுத்து லட்சுமிதேவி இந்திய மத்திய வங்கியில் தனது வாழ் நாள் பூராகவும் தான் சேமித்த பணத்தை 3 வாளிகளில் எடுத்து வந்து ஒப்படைத்தார்.
அதில் 10, 20, 25, 50 சத நாணயங்கள் ஏராள மாக காணப்பட்டன. காலை 10 மணிக்கு அவற்றை கணக்கிடத் தொடங்கிய வங்கி ஊழியர்கள் வங்கி வேளை முடிவதற்கு சற்று முன்னதாக எண்ணி முடித்தனர்.
மொத்தம் அதில் ரூ.4296 காணப்பட்டது.
இதில் பெரும்பாலான ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர். வெறும் 4 ஆயிரம் ரூபா நாணயங்களை எண்ண ஒரு நாள் முழுவதும் செலவானதையிட்டு வங்கி ஊழியர்கள் பெரிதும் ஆதங்கப்பட்டுக் கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து லட்சுமிதேவிக்கு வங்கிக் கணக்கு ஆரம்பிக்கப்பட்டு சேமிப்பு புத்தகமும் வழங்கப்பட்டது. இது குறித்து லட்சுமிதேவி தெரிவிக்கையில், இப்பொழுது எனது சுமை குறைந்து விட்டது.
நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்றார்.
No comments:
Post a Comment