துபாயில் முகத்துக்கு நேரே நடுவிரலை காட்டினால், பொது இடங்களில் முத்தமிட்டால், கட்டி தழுவுதல் போன்ற அநாகரீக செயல்களில் ஈடுபட்டால், நாடு கடத்தப்படுவீர்கள்!!
துபாயில் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் பணியாற்றி வருகிறார்கள். அவர்களுக்கு எதிராக கடுமையான பெடரல் தண்டனை சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி, பொது இடங்களில் மற்றவரின் முகத்துக்கு எதிராக நடுவிரலை காட்டினாலோ, பொது இடங்களில் முத்தமிடுதல், கட்டி தழுவுதல் போன்ற அநாகரீக செயல்களில் ஈடுபட்டாலோ, உடனே அத்தகைய நபர்கள் அவர்களின் தாய்நாட்டுக்கு திருப்பி அனுப்பப்படுவார்கள். இதே காரியங்களை துபாய் நாட்டினர் செய்தால், அவர்களுக்கு சிறைத்தண்டனையோ, அபராதமோ அல்லது இரண்டும் சேர்ந்தோ தண்டனையாக விதிக்கப்படும். எனவே, வெளிநாட்டினர் பொது இடங்களில் கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ள வேண்டும் என்று அரசு தலைமை வக்கீல் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment