Saturday, July 12, 2008

வீட்டுப் பணியாளர்களை அடிமைகளாக நடத்தும் சவுதி

சவுதி அரேபியாவில் இலங்கை உட்பட ஆசிய நாடுகளைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்கள் அடிமைகளாக நடத்தப்படுவதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் சாடியுள்ளது.
வீட்டுப் பணியாளர்களின் மனித உரிமைகள் மோசமாக மீறப்படுவதாகவும் அவர்களுக்கு தொழில் வழங்குவோர் தண்டனையிலிருந்து தப்பிவிடுவதாகவும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் குற்றம் சாட்டியுள்ளது.

பல மாதங்கள், வருடங்களாக சம்பளம் கொடுக்கப்படாமலும் உடல் ரீதியான தண்டனை வழங்கியும் பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்டும் பலவந்தமாக தடுத்துவைத்திருந்தும் தொழில் வழங்குபவர்கள் துன்புறுத்துகின்றனர்.

சவுதியில் 15 இலட்சம் பேர் வெளிநாடுகளைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்களாவர். இவர்களில் அநேகமானோர் இலங்கை, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், நேபாளத்தைச் சேர்ந்தவர்களாவர். வருடாந்தம் துஷ்பிரயோகங்கள் தொடர்பாக ஆயிரக்கணக்கான முறைப்பாடுகள் தெரிவிக்கப்படுகின்றன.

No comments: