Friday, August 1, 2008

நிர்வாண எம்எம்எஸ்: போலீசில் நயன் புகார்!!

நடிகர் சிம்புவுடன் ஏடாகூடமான நிலையில் தான் இருப்பதைப் போன்ற எம்எம்எஸ்களை வேண்டுமென்றே தனது தொழில் எதிரிகள் பரப்பி வருவதாகவும், இதை உடனடியாகத் தடுக்க வேண்டும் என்றும் போலீசில் புகார் செய்துள்ளார் நடிகை நயன்தாரா.

தென்னிந்திய சினிமாவின் மிக அதிக சம்பளம் பெறும் நம்பர் ஒன் நடிகையான நயன்தாரா தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். வல்லவன் திரைப்படத்தில் சிம்புவுடன் நடிக்கத் தொடங்கியதிலிருந்து இருவருக்கும் காதல் ஏற்பட்டதாகக் கூறப்பட்டது. இதை ஒரு கட்டத்தில் இருவருமே ஒப்புக் கொணாடார்கள்.

ஆனால் திடீரென இந்தக் காதல் முறிந்துவிட்டதாக அறிவித்த நயன்தாரா, சிம்புவிடமிருந்து விலகி இருந்தார். அதுவரை சாதாரண நடிகையாக இருந்தவர், காதல் முறிவுக்குப் பின் வந்த இரு ஆண்டுகளில் மிக உயர்ந்த இடத்துக்குப் போய்விட்டார். இப்போது அவரது சம்பளம் ரூ.15 கோடி என்கிறார்கள்.

ஆனால் சிம்புவும் நயனும் மிக நெருக்கமாக எடுத்துக் கொண்ட புகைப்படங்களும் வீடியோ கிளிப்புகளும் இரு ஆண்டுகளுக்கு முன்பிருந்தே மீடியாக்களில் உலா வந்து கொண்டுள்ளன.

இந்நிலையில் கடந்த சில தினங்களாக மேலும் ஒரு புது எம்எம்எஸ் பரவத் தொடஙகியுள்ளது. மூன்று நிமிடம் ஓடக்கூடிய இதில் நயன்தாராவும் சிம்புவும் மிகவும் அந்தரங்கமாக இருப்பதைப் போன்ற காட்சிகள் உள்ளதாகக் கூறப்படுகிறது.

இதைத் தொடர்ந்து, நயன்தாரா சென்னை மாநகர கமிஷனரிடம் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

தொழில் போட்டி மற்றும் பொறாமை காரணமாக எனது விரோதிகள் சிலர் என் உருவத்தை மார்ப்பிங் செய்து எம்எம்எஸ் ஒன்றைப் பரப்பி வருகின்றனர்.

அடுத்த மாதம் நான் நடித்துள்ள குசேலன் மற்றும் சத்யம் ஆகிய இரு பெரிய படங்கள் வெளியாகின்றன. இந்நிலையில் என் பெயருக்கும் நான் நடித்துள்ள படங்களுக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் மிகவும் ஆபாசமான எம்எம்எஸ்களை எனது விரோதிகள் பரப்பி வருகின்றனர். இந்த விஷயத்தில் உடனடியாக நடவடிக்கை எடுத்து, இதற்குக் காரணமானவர்களைத் தண்டிக்க வேண்டும், எனக் கூறியுள்ளார் நயன்தாரா.

இந்த ஆபாச எம்எம்ஸ், திருச்சியைச் சேர்ந்த ஒருவரது மொபைலிலிருந்து வந்திருப்பதைக் கண்டுபிடித்துள்ள போலீஸ், விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளது.

நயன்தாராவின் தொழில் எதிரி யார், அவருக்கும் இந்த ஆபாச எம்எம்எஸ்ஸூக்கும் என்ன தொடர்பு என்பதை விசாரிக்க, ஒரு தனி போலீஸ் படை கோடம்பாக்கத்திலும் களமிறக்கப்பட்டுள்ளது.

இது என்ன கலாட்டா...

No comments: