இந்திய அரசியலில் தற்போதுள்ள காங்கிரஸ் கட்சிக்குள்ள அரசியல் சிக்கலுக்குள் இவ் அமைப்பை சேர்ந்த ஒருவரை பிரதமர் மட்டத்தில் சந்திக்கவேண்டிய தேவையெதுவுமில்லை.அதுவுமல்லாமல் இன்னமும் மனித உரிமை விடயத்தில் உலகளாவிய ரீதியில் சர்ச்சையில் உள்ள இன்னமும் பராமிலிட்ரியாக செயற்படும் ஒருவரை சந்திப்பது என்பது அதுவும் பிரதமர் சந்திப்பது இந்தியாவுக்கு ராஜதந்திர அவமானமாக கருத இடமுண்டு என இந்திய கொள்கை வகுப்பாளர்களால் சுட்டிக்காட்டப்பட்ட பின்னரே பிள்ளையானை சந்திப்பதில்லை என முடிவெடுக்கப்பட்டதாக தெரியவருகிறது.சார்க் மகாநாடு தொடங்கவிருந்த சூழலில் டெல்லியிலிருந்து வெளியிடப்பட்ட ஆசிய மனித உரிமை அமைப்பின் சிலோன் தொடர்பான மோசமான மனித உரிமை மீறல்களில் அதிகம் சம்பந்தப்பட்ட தரப்பினரும் குறித்த பராமிலிட்ரி என்பதால் சந்திப்பது இல்லையென தீர்க்கமான முடிவானது என்கிறார் இந்திய பத்தியாளர்.
சார்க் மகாநாட்டின் போது விருந்தினர் அழைப்பில் பிள்ளையானை சேர்த்து அச்சந்தர்ப்பத்தில் பிள்ளையானை ஒர் சம்பிரதாய அறிமுகத்தை ஏற்பாடு செய்ய ராஜபக்சே முயன்றதாகவும் ஆனால் இந்திய தரப்பினர் பிள்ளையானை தவிர்க்கும்படி ஆலோசனை கூறியதாகவும் சொல்லப்படுகிறது.
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment