Monday, August 11, 2008

கிளிநொச்சி அக்கராயன் வன்னேரிக்குளம் பகுதியிலும் இடம்பெயர்ந்த மக்களுக்குப் பாதுகாப்பு இல்லை

கிளிநொச்சி அக்கராயன் வைத்தியசாலைக்கு அருகில் உள்ள வன்னேரிக்குளம், ஆனைவிழுந்தான் ஆகிய பகுதிகளில் கடந்த வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்ற எறிகணை வீச்சுக்களினால் அந்தப் பிரதேசத்தில் தஞ்சமடைந்துள்ள இடம்பெயர்ந்த மக்கள் பெரும் அச்சத்திற்கு உள்ளாகி, பாதுகாப்பான வேறு இடங்களை நாடவேண்டிய நிலைமைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இங்கிருந்து மீண்டும் இடம்பெயரத் தொடங்கியுள்ள மக்கள் வன்னேரிக்குளம் ஆனைவிழுந்தான் பகுதிகளுக்கும் கிளிநொச்சி நகரத்திற்கும் இடைப்பட்ட பிரதேசங்களை நோக்கி நகரத் தொடங்கியிருப்பதாகக் கூறப்படுகின்றது;.

வன்னேரிக்குளம் பகுதியில் எறிகணை வீழ்;ந்து வெடித்ததில் 49 வயதுடைய சிள்ளத்தம்பி அருளானந்தம் என்பவர் கொல்லப்பட்டது தெரிந்ததே. இதேவேளை கடந்த புதன்கிழமை முல்லைத்தீவு பகுதியில் நடத்தப்பட்ட விமானக் குண்டுத் தாக்குதலில் காயமடைந்த 18 பேரில் ஒருவர் சத்திர சிகிச்சையின் பின்னர் உயிரிழந்துள்ளதாக கிளிநொச்சி வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவி;த்துள்ளன.

விமானக்குண்டு வீச்சு, எறிகணை வீச்சுக்கள் காரணமாக கிளிநொச்சி நகரை அண்டிய பகுதிகளை நோக்கி இடம்பெயரும் மக்களைப் பாதுகாப்பாக பாடசாலைகளில் தங்க வைப்பதற்கான நடவடிக்கைகளை கிளிநொச்சி மாவட்ட அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களைச் சேர்ந்த அதிகாரிகள் நடவடிக்கைகளை எடுத்துள்ளனர்.

இதற்கென 15 பாடசாலைகள் அடையாளம் காணப்பட்டு அங்கு தங்கவைக்கப்படுபவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை வழங்குவதற்கான கட்டமைப்பு வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரி;வித்துள்ளனர். கிளிநொச்சி வைத்தியசாலையில் எரிபொருளுக்குத் தட்டு;ப்பாடு குளிர் நிலையில் பேணப்பட வேண்டிய பெறுமதிமிக்க தடுப்பு மருந்துகளைப் பாதுகாக்க முடியாத அவல நிலை

No comments: