Wednesday, August 13, 2008

விடுதலைப் புலிகளுக்கு எதிராக இலங்கை அரசு இராணுவ ரீதியில் வெற்றி பெறும் என்று நிச்சயமாக நான் கூறமாட்டேன்

ஸ்ரெய்ட்ஸ் ரைம்ஸ் பத்திரிகைக்கு அளித்த பிரத்தியேக செவ்வியிலேயே இந்திய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் இவ்வாறு தெரிவித்துள்ளார். இலங்கை விவகாரம் தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர் பதிலளிக்கையில் கூறியிருப்பதாவது: இலங்கை இராணுவம் கடந்த சில வாரங்களாக களத்தில் பாரிய முன்னேற்றத்தை அடைந்துள்ளது. ஆனால் கள முனைகளில் இலங்கைப் படையினர் என்னதான் வெற்றிகளை குவித்தாலும் விடுதலைப் புலிகளுக்கு எதிராக இலங்கை அரசு இராணுவ ரீதியில் வெற்றி பெறும் என்று நிச்சயமாக நான் கூறமாட்டேன். ஏனனில் இலங்கை அரசின் பக்கம் தமிழ் மக்களது ஆதரவோ பெரும் பலமோ இல்லை. தமிழ் மக்களுக்கு போதியளவு அதிகாரங்கை வழங்கக்கூடிய அதிகாரப் பகிர்வின் மூலம் அவர்களை தம்வசப்படுத்த இலங்கை அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். என்பதையே நாம் வலியுறுத்கிறோம். எனது இந்த ஆலோசனை இலங்கை அரசுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தாது என்பதை நான் அறிவேன். அவர்களுக்கு அறிவுரை கூறுவதில் எங்களுக்கும் நாட்டமில்லை. ஆனால் நோர்வே மற்றும் வேறு எந்த நாட்டையும் விட இலங்கைக்கு இந்தியாவினால் நல்ல ஆலோசனைகளை வழங்க முடியும். விடுதலைப் புலிகள் கடந்த காலங்களை விட தற்போது பாரிய இழப்புக்களை சந்தித்து பலம் இழந்துள்ளான். படைக்கு ஆட் சேர்ப்பது என்பது அவர்களுக்கு சிக்கலான விடயாமாக உள்ளது. மேற்கு நாடுகளில் அவர்களது அமைப்புக்கு விதிக்கப்பட்டுள்ள தடைகள் மூலம் அவர்களது நிதி சேகரிப்பு மற்றும் ஆயுதக் கொள்வனவு ஆகிய நடவடிக்ககள் பெரும் சிக்கலை எதிர்நோக்கியுள்ளன. சகல சமிக்ஞைகளும் விடுதலைப் புலிகளுக்கு பாதகாமன தாக்கத்தை ஏற்படுத்துபவையாக வே உள்ளன. தமிழ் மக்கள் சகல விடயங்களிலும் தமது தலைவிதியை தீர்மானிக்கக்கூடிய உரிமையை வழங்காதவரை இலங்கை அரசு வெற்றி பெறப்போவதில்லை. இதுதான் நாம் முன்வைக்கும் வாதமாகும்.

No comments: