வன்னி பெருநிலப்பரப்பில் தொடரும் யுத்தத்தினால் வீடுவாசல்களை இழந்து நிர்க்கதியாக மரணத்தின் விளிம்பில் நிற்கும் பல்லாயிரக்கணக்கான மக்களின் அடிப்படைத் தேவைகளுக்கு உதவி புரியுமாறு புலம்பெயர்ந்து வாழும் மக்களை மன்றாடிக் கேட்டுக் கொள்வதாக புலம்பெயர்ந்து வாழும் மக்களின் தொண்டு நிறுவனமான செடோட் கோரிக்கை விடுத்துள்ளது.
தமிழ் மக்களின் பாதுகாப்பு வலயமாகத் திகழும் வன்னிப்பகுதியை இன்று போர் மேகங்கள் சூழ்ந்துள்ளன. வீடுகள் பாடசாலைகள் கோவில்கள் வயல்நிலங்கள் என இவை யாவும் இலங்கை அரசினால் இன்று அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. மக்கள் நிர்க்கதியாக மரங்களின் கீழ் வெய்யிலிலும் மழையிலும் வாழ வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது. பசியால் கதறும் பாலகர்களின் அழுகுரல், அந்தத் துயரம் தாங்காத பெற்றோரின் கவலை, தள்ளாத முதுமை மற்றும் நோயுடன் முதியோர் என்று போர் எல்லாத் தரப்பினரையும் அவலத்திற்குள்ளாக்கியுள்ளது. இந்த நிலையில் புலம் பெயர்ந்த உறவுகள் தங்களாலான உதவியை அல்லலுறும் மக்களுக்கு வழங்க முன்வர வேண்டும் என்றும் செடோட் தனது அறிக்கையில் கோரியுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment