சென்னையில் கைது செய்யப்பட்ட விடுதலைப்புலிகளின் முக்கிய தலைவர் தம்பி அண்ணா போலீசாரிடம் திடுக்கிடும் வாக்குமூலம் கொடுத்துள்ளார். தமிழகத்திலிருந்து பொருட்களை கடத்தி செல்வதற்கு புதிய விïகம் வகுப்பதற்காக சென்னை வந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தம்பி அண்ணா
விடுதலைப்புலிகளின் இயக்கத்தில் பல்வேறு பிரிவுகள் உள்ளது. உளவு பிரிவு, அரசியல் பிரிவு, பொருட்கள் கடத்தல் பிரிவு என்பன போன்ற பல்வேறு பிரிவுகள் உள்ளன. இவற்றில் பொருட்கள் கடத்தல் பிரிவின் தலைவராக இருந்தவர் தம்பி அண்ணா (வயது 46). விடுதலைப்புலி இயக்கத்தின் முக்கிய தலைவர்களில் இவரும் ஒருவர் ஆவார். கடந்த 18 ஆண்டுகளாக விடுதலைப்புலி இயக்கத்தில் உள்ளார். இலங்கை கிளிநொச்சியில் பிறந்த இவர், பிளஸ்-2 வரை படித்துள்ளார்.
விடுதலைப்புலிகளுக்கு ஆயுதங்கள், உணவு பொருட்கள், வெடிமருந்து பொருட்கள் உள்பட பல்வேறு பொருட்கள் வெளிநாடுகளிலிருந்து கப்பல்களிலும், படகுகளிலும் இவரது தலைமையின் கீழ்தான் கடத்தி வரப்பட்டன. தமிழகத்திலிருந்து படகு மூலம் இலங்கைக்கு பொருட்களை கடத்தி செல்லும் பணியை தம்பி அண்ணா தான் நேரடியாக கவனித்து வந்தார்.
இவர் மீது ஏற்கனவே தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு படகை கடத்தி சென்றதாக ஒரு வழக்கும், வெடிகுண்டு செய்ய பயன்படும் 2,000 கிலோ அலுமினிய கட்டிகளை கடத்தி சென்றதாக 2 வழக்குகளும், மொத்தம் 3 வழக்குகள் தமிழக கிï பிரிவு போலீசில் உள்ளது. கிï பிரிவு போலீசார், தம்பி அண்ணா தமிழகத்திற்கு வந்தால் மடக்கி பிடிக்க தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.
கூட்டாளிகள் கைது
தம்பி அண்ணாவின் கூட்டாளிகளான கடத்தல்காரன் வில்லாயுதம் மற்றும் ஜேம்ஸ், ஜெயக்குமார், ராகுலன், ரமேஷ், குமார் ஆகியோர் ஏற்கனவே கிï பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டுவிட்டனர். தம்பி அண்ணா கடந்த 2006-ம் ஆண்டு தமிழகத்திற்கு ரகசியமாக வந்துவிட்டு, போலீஸ் கையில் சிக்காமல் மீண்டும் இலங்கை சென்றுவிட்டார். தம்பி அண்ணாவை பிடித்தால்தான் தமிழகத்திலிருந்து, இலங்கைக்கு பொருட்கள் கடத்தி செல்லப்படுவதை தடுக்க முடியும் என்ற கட்டாயத்திற்கு தமிழக கிï பிரிவு போலீசார் தள்ளப்பட்டனர்.
எனவே, தம்பி அண்ணாவின் நடவடிக்கைகளை தீவிரமாக கண்காணிக்க டி.ஜி.பி. கே.பி.ஜெயின் உத்தரவிட்டார். ஐ.ஜி. ஜாபர்சேட், டி.ஐ.ஜி. சங்கர் ஜிவால் ஆகியோருடைய நேரடி மேற்பார்வையில், கிï பிரிவு சூப்பிரண்டு அசோக்குமார், கூடுதல் சூப்பிரண்டு சுப்பிரமணியம், துணை சூப்பிரண்டு சந்திரசேகரன் ஆகியோர் தலைமையில் தம்பி அண்ணாவை பற்றி கிï பிரிவு போலீசார் தகவல்களை சேகரித்து வந்தனர்.
தமிழகம் வந்தார்
இந்த நிலையில், கடந்த ஜுலை மாதம் 1-ந் தேதி அன்று கிï பிரிவு போலீசாருக்கு ஒரு அதிர்ச்சி தகவல் வந்தது. தம்பி அண்ணா அதிவேக இயந்திர படகு மூலம் ராமேஸ்வரத்தில் வந்து இறங்கி தமிழகத்தில் தங்கியுள்ளதாக அந்த தகவலில் தெரிய வந்துள்ளது. எனவே கிï பிரிவு போலீசார் தமிழகம் முழுவதும் முடுக்கிவிடப்பட்டனர். தம்பி அண்ணா எங்கிருக்கிறார் என்பதை விசாரித்தபோது அவர் சென்னையில் வளசரவாக்கத்தில் உள்ள அவரது நண்பர் ஸ்ரீகரன் என்பவரது வீட்டில் தங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது.
அநëத வீட்டை கண்காணித்தபோது தம்பி அண்ணா அங்கு வந்ததாகவும், பின்னர் வெளிïர் சென்றுவிட்டதாகவும், மீண்டும் அவர் அங்கு வருவார் என்றும் தகவல் கிடைத்தது. இதனால் அந்த வீட்டை கடந்த ஒருவாரமாக கிï பிரிவு போலீசார் கண்காணித்து வந்தனர்.
கைதானார்
நேற்று முன்தினம் இரவு தம்பி அண்ணா வளசரவாக்கத்துக்கு வந்தபோது கிï பிரிவு போலீசார் அவரை மடக்கி பிடித்து கைது செய்தனர். அவரை ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில், தமிழகத்திற்கு வந்தது ஏன்? என்பது குறித்து தம்பி அண்ணா திடுக்கிடும் தகவல்களை வாக்குமூலமாக தெரிவித்தார். அவர் கொடுத்த வாக்குமூலம் வருமாறு:-
நான் விடுதலைப்புலி இயக்கத்தில் உணர்வுபூர்வமான உறுப்பினராக என்னுடைய 28-வது வயதில் சேர்ந்தேன். அந்த இயக்கத்தின் கொள்கை, கோட்பாடுகள் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. விடுதலைப்புலிகளின் இயக்கத்தில் கடல்புலிகள் பிரிவு தலைவர் சூசை எனக்கு நெருங்கிய நண்பர். அவர் தான் எனக்கு தலைவர். அவருடைய கட்டுப்பாட்டில்தான் நான் இருந்தேன்.
நான் ஏற்கனவே 2006-ம் ஆண்டு தமிழகத்திற்கு வந்தேன். அப்போது சுமார் ஒரு மாத காலம் தமிழகத்தில் தங்கியிருந்து சென்றேன். தமிழகத்திலிருந்து பொருட்களை கடத்தி செல்வதற்கு நல்ல படகுகள் தேவைப்பட்டது. அந்த படகுகளை தமிழகத்தில் இருந்து வாங்கி இலங்கைக்கு கொண்டு செல்வதற்காகவும், அதற்கான ஏற்பாடுகளை செய்வதற்காகவும் 2006-ல் தமிழகம் வந்தேன். என்னுடைய ஏற்பாட்டின்படி ஒரு படகை இலங்கைக்கு கடத்தி சென்றுவிட்டோம்.
போலீஸ் கெடுபிடி
தமிழகத்தில் உள்ள கடத்தல்காரர்கள் ஏராளமானபேருடன் எனக்கு தொடர்பு உள்ளது. இலங்கையை சேர்ந்த ஜேம்ஸ் என்பவரிடம் தான் ஏராளமான படகுகள் உள்ளன. அவருடைய படகுகளில்தான் தமிழகத்தில் இருந்து பொருட்களை கடத்துவோம். தமிழகத்தில் ராமேஸ்வரத்திலிருந்து எங்களுக்கு தேவையான பொருட்களை கடத்தி வருவதை வழக்கமாக வைத்திருந்தோம். தற்போது போலீஸ் கெடுபிடியால் ராமேஸ்வரத்தில் இருந்து பொருட்களை கடத்துவது மிகவும் கஷ்டமாக உள்ளது.
எனவே, தமிழகத்தில் வேறு இடத்தில் இருந்து போலீசுக்கு தெரியாமல் பொருட்களை கடத்தி செல்ல முடிவு செய்தோம். இதற்கு புதிய விïகம் அமைப்பதற்கு நான் தற்போது தமிழகத்திற்கு வந்தேன். ஜுலை 1-ந் தேதி அன்று நான் ஒருவன் மட்டும் தனியாக இயந்திர படகில் ராமேஸ்வரத்தில் வந்து இறங்கினேன். என்னை ஏற்றி வந்த படகு மீண்டும் இலங்கை போய்விட்டது. என்னை பார்ப்பதற்கு யாரும் வரவேண்டாம் என்று எனது நண்பர்களிடம் கூறிவிட்டேன்.
பஸ் மூலம்
ராமேஸ்வரத்தில் இருந்து பஸ் மூலம் சென்னை வந்தேன். சென்னையில் வளசரவாக்கத்தில் என்னுடைய நண்பர் ஸ்ரீகரன் தங்கியிருக்கிறார். வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்வதற்காக அவர் சென்னையில் வந்து தங்கியிருந்தார். அவருடைய வீட்டில் தங்கினால் தான் போலீசுக்கு தெரியாது என்று அங்கு தங்கினேன். தமிழகத்தில் இருந்து பொருட்களை கடத்தி செல்வதற்கு ஏதுவான இடம் எது என்பதை பார்ப்பதற்காக தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட கடற்கரை பகுதியான அதிராம்பட்டினம், மல்லிபட்டினம், தேவிபட்டினம், கோட்டை பட்டினம் ஆகிய பகுதிகளை பஸ்சில் சென்று நேரில் பார்வையிட்டேன்.
தமிழகத்தில் கோடியக்கரை பகுதியில் இருந்து இலங்கைக்கு இயந்திர படகில் ஒரு மணி நேரத்தில் போய்விடலாம். எனவே அங்கிருந்து பொருட்களை படகில் ஏற்றி இலங்கைக்கு கடத்தி செல்லலாமா? என்பது பற்றி ஆலோசனை நடத்தினோம். அந்த விஷயத்தில் இன்னும் முடிவு செய்யவில்லை. அதற்குள் போலீசார் பிடித்துவிட்டனர்.
சண்டைபோட்டேன்
நான் விடுதலைப்புலி இயக்கத்தில் கடல் புலிகள் பிரிவில் சாதாரண போர் வீரனாக முதலில் பணியாற்றினேன். அப்போது இலங்கை கடற்படையினரோடு நேரடியாக பலமுறை சண்டை போட்டேன். விடுதலைப்புலி இயக்கத்தில் கடும் கட்டுப்பாடுகள் இருந்தாலும் மனைவி, குழந்தைகளோடு தனியாக குடும்பம் நடத்தி கொள்ளலாம். மத நம்பிக்கை வைப்பதிலும் தடையில்லை. குழந்தைகளை படிக்க வைப்பது முதல், குடும்பம் நடத்துவதற்கான அனைத்து செலவுகளையும் விடுதலைப்புலி இயக்கம் ஏற்றுக்கொள்ளும்.
எனக்கு ஸ்ரீதேவி என்ற மனைவியும், 10 வயதில் ஒரு மகளும், 8 வயதில் ஒரு மகனும், 6 வயதில் இன்னொரு மகனும் உள்ளனர். கிறிஸ்தவ மதத்தில் மிகுந்த ஈடுபாடு உள்ள நான், தமிழகத்திற்கு வரும்போது வேளாங்கண்ணி மாதா கோவிலுக்கு செல்ல முடிவு செய்திருந்தேன். அதை ஒரு வேண்டுதலாகவும் வைத்திருந்தேன்.
மொட்டை போட்டேன்
தற்போது தஞ்சாவூர் சென்றிருந்தபோது வேளாங்கண்ணி சென்று மாதாவை தரிசித்தேன். அங்கு தலையில் மொட்டை போட்டுக்கொண்டேன். எனது நீண்டகால வேண்டுதல் இதன் மூலம் நிறைவேறியுள்ளது.
தமிழக மக்களை எங்கள் சகோதரர்களாகவே நாங்கள் கருதுகிறோம். நான் போலீசில் பிடிபட்டதால் விடுதலைப்புலி இயக்கத்துக்கு எந்த பின்னடைவும் இல்லை. என்னுடைய இடத்தில் இப்போது வேறொருவர் நியமிக்கப்பட்டிருப்பார். எனவே, விடுதலைப்புலிகள் இயக்கம் தலைவர்கள் வீழ்ச்சி அடைந்தாலும் ஒருபோதும் வீழ்ச்சி அடையாது.
இவ்வாறு தம்பி அண்ணா தனது வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.
ஜெயிலில் அடைப்பு
தம்பி அண்ணா கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு 15 நாள் நீதிமன்ற காவலில் சென்னை புழல் மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டார். அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க திட்டமிட்டுள்ளனர். காவலில் விசாரிக்கும்போது அவரிடமிருந்து மேலும் திடுக்கிடும் தகவல்களை பெறலாம் என்று கிï பிரிவு போலீசார் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment