போலந்து நாடு, அமெரிக்காவின் ஏவுகணை எதிர்ப்பு ராக்கெட்டுகளை தங்கள் நாட்டில் நிறுத்தி வைக்க ஒப்புக்கொண்டதை தொடர்ந்து, அந்த நாட்டின் மீது அணுகுண்டு வீசி தாக்குதல் நடத்தப்போவதாக ரஷியா எச்சரித்து உள்ளது.அமெரிக்காவுக்கும், ரஷியாவுக்கும் இடையே பனிப்போர் நிலவிய காலத்தில் உலக நாடுகள் இரு பக்கமும் அணி பிரிந்து நின்றன. அப்போது போலந்து ரஷியாவின் பக்கம் இருந்தது. அது கம்ïனிஸ்டு நாடாகவும் இருந்தது. ரஷியாவில் கம்ïனிஸ்டு ஆட்சி கவிழந்தபோது,போலந்து நாட்டிலும் கம்ïனிஸ்டு ஆட்சி கவிழந்தது. அதன்பிறகு போலந்து அமெரிக்கா பக்கம் சாயத் தொடங்கிவிட்டது.
அமெரிக்காவின் ஏவுகணை எதிர்ப்பு திட்டத்தில் அதுவும் பங்கு எடுத்துக்கொண்டு உள்ளது. எதிரிகளின் ஏவுகணைகளை தாக்கி அழிப்பதற்காக அமெரிக்காவின் ராக்கெட்டுகளை போலந்து நாட்டில் நிறுத்தி வைப்பதற்கு போலந்து தளம் அமைத்து கொடுக்க ஒப்புக்கொண்டு உள்ளது.
இந்த திட்டத்தில் போலந்து சேர்வதற்கு ரஷியா கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. இந்த திட்டம் ரஷியாவை குறிவைத்து கொண்டு வரப்பட்டு உள்ளது. இதற்கு போலந்து துணை போகக்கூடாது என்றும் அது கேட்டுக்கொண்டு உள்ளது. இதை போலந்து காதில் போட்டுக்கொள்ளாமல், அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு உள்ளது. அமெரிக்கா தளம் அமைப்பதற்கு இடம் அளிக்க போலந்து ஒப்புக்கொண்டு உள்ளதால், அதன் விமான பாதுகாப்பை உயர்த்த அமெரிக்கா சம்மதித்து உள்ளது.இதைத்தொடர்ந்து ரஷிய ராணுவத்தளபதி ஜெனரல் அனட்டோலி நோகோவிட்சி போலந்து நாட்டை எச்சரித்து இருக்கிறார்.
அமெரிக்காவுடன் போலந்து ஒப்பந்தம் செய்து கொண்டிருப்பதை நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது. எங்கள் நாட்டை குறிபார்த்து போலந்தில் நிறுத்தப்பட இருக்கும் 10 ராக்கெட்டுகளையும் தாக்கி அழிப்போம். அந்த நாட்டின் மீது அணுகுண்டு வீசி தாக்குதல் நடத்துவோம் என்று ரஷிய தளபதி எச்சரித்தார்.
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment