Monday, August 18, 2008

புலிகளின் நிலத்தடி முகாமான ஜீவன்பேஸ் மணலாறில் மீட்பு

முல்லைத்தீவு மணலாறு பிரதேசத்தில் அமைந்திருந்த புலிகளின் நிலத்தடி முகாமான ஜீவன் முகாம் நேற்றுமாலை இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. அதற்கு பயிற்சி எடுக்கும் வசதிகளும் இருந்ததாக இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர். நு}றிற்கும் மேற்பட்ட பாதுகாப்பரண்கள் அங்கு காணப்படுவதாக இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர். மாவீரர் சமாதியும் அங்குள்ளதாகவும் அங்கு 67 புலிகளின் கல்லறைகள் காணப்படுகின்றதென்றும் இராணுவத்தினர் சுட்டிக்காட்டியுள்ளனர். பீரங்கி மற்றும் விமானத் தாக்குதல்களுக்கு தாக்குப் பிடிக்கும் அளவில் இந்த நிலத்தடி முகாம் அமைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த முகாமிற்கு அருகில் இராணுவத்தினரால் நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கையின்போது புலிகளின் சித்திரவதை முகாம்கள் நான்கும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

No comments: