
ஆசின் நல்லவர். என்னை அவர் வீட்டில் அடைத்து சித்திரவதை செய்யவில்லை என்று அவரது வேலைக்காரப் பெண் பியூலா சென்னை போலீஸார் முன்பு நேரில் ஆஜராகி தெரிவித்துள்ளார்.
ஆசின் வீட்டு வேலைக்காரப் பெண் பியூலா (21). தனது மகளை சட்டவிரோதமாக வீட்டில் அடைத்து வைத்திருப்பதாக பியூலாவின் தாய் நரசம்மா சமீபத்தில் போலீசில் புகார் செய்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் பியூலா, நடிகை அசினுடன் மும்பையில் இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து தொலைபேசி மூலம் ஆசின் மற்றும் பியூலாவிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது, தான் கஜினி ஹிந்தி படப்பிடிப்புக்காக அசினுடன் வந்திருப்பதாகவும், தன்னை யாரும் அடைத்து வைக்கவில்லை என்றும் பியூலா போலீசாரிடம் கூறினார்.
இதையடுத்து விசாரணைக்காக சென்னை வரவேண்டும் என்று போலீசார் உத்தரவிட்டனர். இதைத் தொடர்ந்து ஆசினின் தந்தை ஜோசப்புடன் பியூலா சென்னைக்கு வந்தார். பின்னர் அங்கிருந்து வழக்கறிஞர் சண்முகத்துடன் தேனாம்பேட்டை போலீசில் பியூலா நேற்று ஆஜரானார்.
அவரை அவரது தாயார் நரசம்மாவிடம் போலீஸாரர் ஒப்படைத்தனர். பின்னர் பியூலா ததனது தாயார் கூறிய புகார் குறித்துக் கூறுகையில், ஆசினின் உதவியாளராக வேலை செய்கிறேன். என்னை வேலைக்காரியாகவோ, வேறு நபராகவோ என்னை அவர்கள் நடத்தவில்லை. எனக்கு கொடுக்கப்படும் சம்பளம் ரூ.4,000த்தை வங்கியில் போட்டு விடுகின்றனர்.
ஆசினுடன் நான் மும்பைக்கு சென்ற நேரத்தில் எனது தாய், என்னை பார்க்க விரும்பினார். ஆனால் அவருடன் பேச முடியாமல் போனது. அந்த கோபத்தில்தான் இப்படி புகார் கொடுத்துவிட்டார். நான் வீட்டுக்கு வந்திருப்பது எனது குடும்பத்தினருக்கு மகிழச்சி அளிக்கிறது.
மீண்டும் ஆசினிடமே வேலை பார்க்க விரும்புகிறேன். எனது வீட்டுப் பிரச்சினைகளை முடித்து விட்டு ஆசினிடம் திரும்புவேன் என்றார்.
No comments:
Post a Comment