Monday, August 11, 2008

பொதுமக்கள் மீதான தாக்குதல்கள் ஜெனிவா பிரகடனத்தை மீறும் செயல்

இலங்கை அரசு ஜெனிவா பிரகடனத்தை மீறி வன்னிப் பகுதியில் பொதுமக்கள் இலக்குகள் மீது தாக்குதலை மேற்கொண்டு வருவதாக விடுதலைப் புலிகளின் சமாதான செயலகப் பணிப்பாளர் புலித்தேவன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

முல்லைத்தீவு அரச மருத்துவமனை மற்றும் அரச அதிபர் பணிமனை மீது மேற்கொள்ளப்பட்ட ஷெல் தாக்குதல் குறித்து இணையத்தளம் ஒன்றுக்குப் புலித்தேவன் கருத்துத் தெரிவிக்கையில்,

பொதுமக்கள் மருத்துவமனை மற்றும் மனிதாபிமானப் பணிகளுக்குப் பொறுப்பாக உள்ள அதனைக் கண்காணிக்கின்ற அரச உத்தியோகத்தர் பணிமனை போன்றவற்றை வேண்டுமென்றே இலக்குவைப்பதன் மூலம் அரசு ஜெனிவாப் பிரகடனத்தை மீறுகின்றது என்று குறிப்பிட்டள்ளார்.

No comments: