Sunday, August 3, 2008

மன்மோகன் சிங்கிற்கும் மஹிந்தவுக்குமிடையிலான இருதரப்பு பேச்சுவார்த்தைகளின் போது சாhச்சைக்குரிய கச்சதீவு விவிகாரத்தை மன்மோகன்சிங் தவிர்த்துக் கொண்டுள்ளர


கடந்த வெள்ளியன்று மன்மோகன் சிங் கொழும்புக்கு வருகை தந்தவுடனேயே மஹிந்தவுடன் இரு தரப்பு பேச்சு வார்த்தையை மேற்கொண்டார்.

இந்தச் சந்திபிபின் போது கச்சதீவு விவகாரம் பற்றிப் பேசப்பட்டதா என்று கேட்கப்பட்ட போது இல்லை அந்த விவகாரம் பேசப்படவில்லை என்று இலங்கை அதிகாரி ஒருவர் தெரிவித்தாக எக்ஸ்பிரஸ் செய்திச் சேவை தெரிவித்ததது, அத்துடன், கடந்த வியாழனன்று இந்திய வெளிவிவகார அமைச்சர் இலங்கை வெளிவிவகார அமைசருக்குமிடையிலான இருதரப்பு கலந்துரையாடலின் போதும் முகர்ஜி கச்சதீவு விவகாரத்தை எழுப்பவில்லையென தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்க்ள தொடர்ந்து தாக்கப்படும் விடயங்கள் குறித்தும் கச்சதீவு விவகாரம் தொடர்பாகவும் இலங்கை அரசாங்கத்துடன் பேச்சு வார்த்தை நடத்துமாறு தமிழக முதலமைச்சர் கருணாநிதி இந்தியப் பிரதமைரக் கேட்டிருந்தார்.

No comments: