லண்டன் : கணவர் இறந்து நான்கு ஆண்டுகளுக்கு பின், செயற்கை முறையில் அவரது குழந்தையை பெற்றெடுத்தார் மனைவி.
லண்டனை சேர்ந்தவர் லிசா ராபர்ட். இவரது கணவர் ஜேம்ஸ் ராபர்ட். நான்கு ஆண்டுகள் முன், ஜேம்சுக்கு காலில் புற்றுநோய் ஏற்பட்டது. லேசர் சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்தார். இந்த சிகிச்சை மேற்கொண்டால், அவரால் குழந்தை பெற்றுக் கொள்ள முடியாது என்று டாக்டர்கள் அறிவுறுத்தினர். எனவே, சிகிச்சைக்கு முன், அவரது உயிரணுக்கள் சேகரிக்கப்பட்டு பதப்படுத்தப்பட்டன. பின்னர் சிகிச்சை பலனின்றி ஜேம்ஸ் உயிரிழந்தார்.
இவரது மனைவி லிசா ராபர்ட், தனது கணவரின் உயிரணுக்கள் மூலம் செயற்கை முறையில் குழந்தை பெற்றுக் கொள்ள விரும்பினார்.
கணவரின் உயிரணுக்கள் சேகரிக்கப்பட்டு நான்கு வருடங்கள் ஆவதால், இது பலன் அளிக்க, மிகவும் குறைவான வாய்ப்புகளே உள்ளது என்று டாக்டர்கள் தெரிவித்தனர். ஆனால், லிசாவின் முயற்சிக்கு வெற்றி கிடைத்தது. அவரும் கர்ப்பமுற்று, பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். இது குறித்து லிசா கூறுகையில், "நான் இதற்காக மூன்று லட்சம் ரூபாய்க்கு மேல் செலவழித்துள்ளேன். என் கணவர் உயிரோடிருந்தால், மிகவும் சந்தோஷம் அடைந்திருப்பார்' என்றார்.
நன்றி : தினமலர்
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment