Wednesday, March 26, 2008

சட்டவிரோதமாக மனித கருமுட்டை விற்பனை

சியோல் :சட்டவிரோதமாக, மனித கருமுட்டைகள் விற்பனையில் ஈடுபட்டவரை தென்கொரிய போலீசார் கைது செய்துள்ளனர். தென் கொரியாவின் தெற்கு சுங்சியோங் மாகாணத்தில், டெய்ஜியோன் நகரை சேர்ந்த கிரண் என்பவர், குழந்தை இல்லாத தம்பதிக்கு சட்டவிரோதமாக கருமுட்டைகளை விற்று வந்தார். இணையதளம் மூலம் இந்த விற்பனை நடந்து வந்தது.

வாடகை தாய்கள், குழந்தையில்லாத தம்பதிகள் போன்றவர்களுக்கு இவற்றை விற்பனை செய்து வந்தார். இதுவரை, 50 பேருக்கு கருமுட்டைகள் விற்பனை செய்ததன் மூலம், ரூ.50 லட்சம் பெற்றுள்ளார்.இவரிடம் கருமுட்டை பெற்றவர்கள் அனைவரும் தென்கொரியாவை சேர்ந்தவர்களே. கிரண் மீதான குற்றம் நிரூபணமானால், குறைந்த பட்சம் இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும்.

தினமலர்

No comments: