சியோல் :தனது ஆறு வயது பெண் குழந்தையை வங்கியில் கொள்ளையடிக்க வைத்த தாய் கைது செய்யப் பட்டுள்ளார். தென்கொரியாவின் ஜெஜு தென் தீவில் உள்ள ஒரு வங்கிக்கு தனது பெண் குழந்தையுடன் சென்றார் அந்த தாய். அங்கிருந்த வி.ஐ.பி., அறையில் யாரும் இல்லை. உள்ளே சென்று, அங்கு இருக்கும் பணத்தை எடுத்து வருமாறு தனது குழந்தையிடம் கூறினார்.
வி.ஐ.பி., அறைக்குள் சென்ற சிறுமி, அங்கிருந்த மேஜை டிராயரில் இருந்த ரூ. ஐந்து லட்சம் ரொக்கப்பணம் மற்றும் காசோலைகளை திருடிக் கொண்டு வந்தார். குழந்தையுடன் வெளியேறிவிட்டார் அந்த பெண். குளோஸ்டு சர்க்யூட் கேமராவில், இவை அனைத்தும் பதிவானது. பணம் கொள்ளை போன தினத்தன்றே, அந்த பெண்ணை போலீசார் கைது செய்துவிட்டனர். திருடிச்சென்ற பணமும் பறிமுதல் செய்யப்பட்டது.
தினமலர்
Wednesday, March 26, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment