Wednesday, March 26, 2008

அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை வேண்டுமா? அந்தரங்க உறவுக்கு பேரம் பேசும் ஏஜென்ட்டுகள்

நியூயார்க் :அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை பெற வேண்டுமா? குடியுரிமை பெற்றுத் தரும் ஏஜென்டின் இச்சையை தீர்க்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். இப்படித்தான், கொலம்பியாவை சேர்ந்த 22 வயது பெண்ணை, அந்தரங்க உறவுக்கு கட்டாயப்படுத்திய ஏஜென்ட், சிக்கிக் கொண்டுள்ளார்.

நியூயார்க்கில், குடியுரிமை பெற்றுத்தரும் ஏஜென்ட்டாக பணியாற்றி வருபவர் இசாக் பைசு; வயது 46. கொலம்பியா நாட்டை சேர்ந்த 22 வயது பெண்ணை திருமணம் செய்து கொண்ட அமெரிக்கர், அந்த பெண்ணுக்கு அமெரிக்காவின் நிரந்தர குடியுரிமைக்கு விண்ணப்பித்தார். விண்ணப்பத்தை வாங்கிக் கொண்ட ஏஜென்ட் இசாக், அந்த பெண்ணின் மொபைல் போன் எண்ணை கேட்டு வாங்கிக்கொண்டார்.

மூன்று நாட்களில் இசாக்கிடம் இருந்து அந்த பெண்ணுக்கு மொபைல் போனில் அழைப்பு வந்தது. தன்னை தனியாக சந்திக்கும் படி இசாக் கூறினார். இதன் படி, இசாக் குறிப்பிட்ட பொது இடத்தில் இருந்த காரில் அந்த பெண் ஏறினார். அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை பெறுவது தொடர்பாக பேரம் துவங்கியது. காரில் ஏறுவதற்கு முன்பே அந்த பெண், பேச்சை பதிவு செய்யும் வகையில் தனது மொபைல் போனை ஆன் செய்து வைத்திருந்தார்."நிரந்தர குடியுரிமை பெற வேண்டுமானால், என்னுடன் ஓரிரு முறை அந்தரங்க உறவுக்கு சம்மதிக்க வேண்டும். ஓரிரு முறை மட்டும் தான்; அதற்கு பின், நான் உன் கண்ணில் படவே மாட்டேன்!' இது தான் இசாக்கின் நிபந்தனை. அத்துடன், "சம்மதிக்காவிட்டால், அமெரிக்காவை விட்டு நிரந்தரமாக வெளியேற நேரிடும். உனது கணவர் வீட்டாருடன் இனி சேர்ந்திருக்கவே முடியாது' என்ற மிரட்டலும் சேர்ந்து வந்தது.

அரை குறை மனதுடன், பின்னர் சந்திப்பதாக அந்த பெண் வெளியேற முயற்சி செய்தார். அப்போது, "இந்தவிஷயத்தில் நீ எவ்வளவு ஆர்வமாக இருக்கிறாய் என்பது தெரியவேண்டும். எனவே, இப்போதைக்கு உடனடியாக ஓரல் செக்ஸ் வேண்டும்' என்றார் இசாக். அதிர்ந்து போன அந்த பெண், சம்மதிக்க மறுக்கவே, அவரை இறக்கிவிட்டு, சாவகாசமாக தனது வழியில் சென்று விட்டார்

இசாக்.பதிவு செய்த பேச்சை, பத்திரிகைகளுக்கு அளித்த அந்த பெண், பின்னர், மாவட்ட மாஜிஸ்டிரேட் கோர்ட்டிலும் வழக்கு தொடர்ந்துள்ளார். பதிவான பேச்சைக் கேட்டு நீதிபதியும் அதிர்ந்து போனார். "குடியேற்றத் துறையினர், சட்டத்தை பயன்படுத்தி செய்து வரும் அட்டகாசங்களில் இது ஒரு சாம்பிள் மட்டுமே' என்று, நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார். இசாக் மீது குற்றச்சாட்டு உறுதியானால், அவருக்கு ஏழு ஆண்டு சிறை தண்டனை உறுதி. இத்தனைக்கும், இசாக்கும், கயானாவில் இருந்து அமெரிக்காவில் குடிபெயர்ந்தவர் தான்.

தினமலர்

No comments: