Friday, March 21, 2008

கணணி கிராஷ்!

எப்போதாவது உங்கள் கணணி கிராஷ் ஆனதா?
கணணி செயலிழந்து நின்றால் அது கிராஷ் ஆனதா அல்லது சாதாரணமாக புரோகிராம் மூடப்பட்டதா என்று பலருக்குத் தெரியாது. கணணி கிராஷ் எப்போது ஏற்படுகிறது? உங்கள் கணணியில் உள்ள புரோகிராம் அல்லது ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் உள்ள ஒரு பகுதி தன் வழக்கமான செயல்பாட்டை மேற்கொள்ள முடியாமல் செயலிழந்து செல்வதே கணணி கிராஷ். கிராஷ் ஆன பின்னர் புரோகிராம் அப்படியே முடங்கிப் போகிறது. செயலிழந்து போகும் புரோகிராம் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் ஒரு பகுதி என்றால் கணணி தொடர்ந்து இயங்க மறுக்கும். கிராஷ் எதனால் ஏற்படுகிறது? இதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. புரோகிராம் செயல்பட கொடுக்கப் பட்ட கட்டளைகள் சரியாக இல்லாமல் இருக்கலாம்.
அல்லது புரோகிராம் ஒன்றின் பகுதிகளுக்குள்ளாக சரியான கட்டளைத் தொடர்பு விட்டுப் போயிருக்கலாம். இவற்றைக் கண்டறியும் வழிகளைக் காணலாம்.
குறிப்பிட்ட புரோகிராம் ஒன்றை இயக்குகையில் ஒரே மாதிரியாக முடக்கம் ஏற்பட்டால் முடங்குவதற்கு முன் நீங்கள் என்ன என்ன செயல்பாட்டை மேற்கொண்டீர்கள் என்று பட்டியலிடுங்கள். இதில் செயல்பாட்டின் இடையே ஏதாவது எரர் மெசேஜ் வந்திருந்தால் அவற்றை முழுமையாகக் copy பண்ணி குறித்து வைக்கவும். அல்லது ஏதேனும் டயலாக் பாக்ஸ் தோன்றி ஏதேனும் குறிப்புடன் உங்களிடம் option கேட்டிருந்தால் அதனையும் குறித்துக் கொள்ளுங்கள்.
இவற்றைக் குறித்துக் கொண்டவுடன் குறிப்பிட்ட புரோகிராம் உருவாக்கிய நிறுவனத்தின் இணைய தளத்திற்குச் செல்லவும். அங்கு அந்த புரோகிராகிறாமிற்க்கு லேட்டஸ்ட்டாகக் ஏதாவது பட்ச் (patch) பைல்கள் உள்ளனவா என்று பார்க்கவும். அவற்றை நீங்கள் உங்கள் புரோகிராமில் இணைக்கவில்லை என்றால் உடனடியாக டவுண்லோட் பண்ணி இணைக்கவும். அநேகமாக இந்த தீர்வு சரி செய்துவிடும். இல்லை என்றால் அந்த தளத்திலேயே நீங்கள் பயன்படுத்தும் புரோகிராம் பதிப்பு எண் மற்றும் நீங்கள் சந்தித்த பிரச்னை குறித்து ஏதேனும் குறிப்புகள் உள்ளனவா என்று பார்த்து அங்கு தீர்வுக்கான வழிகள் கொடுத்திருந்தால் சரி செய்திடவும்.
கிராஷ் உண்டானதற்கான காரணங்களை அறிய இன்னொரு வழியும் உள்ளது. விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் உள்ள Windows event log என்ற வசதியைப் பயன்படுத்தலாம். விண்டோஸ் இது போல அப்ளிகேசன் கிராஷ் மற்றும் சிஸ்டம் கிராஷ் ஆன நிகழ்வுகளைப் பதிவு செய்து வைக்கும் இடமே Windows event log.

இதற்கு My Computer ல் வலது கிளிக் செய்து அதில் Manage என்னும் பிரிவில் கிளிக் செய்திடவும். இப்போது கணணி மனேஜ்மென்ட் என்னும் விண்டோ கிடைக்கும். இதன் இடது பிரிவில் Event Viewer என்பதைக் கிளிக் செய்திடவும். தொடர்ந்து இதில் காணப்படும் + அடையாளத்தில் கிளிக் செய்து பார்த்தால் மூன்று வெவ்வேறு பிரிவுகள் – Application, Security and System– காணப்படும். இதில் Application என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இதில் உங்கள் சிஸ்டம் கிராஷ் ஆனதற்கான காரணங்கள் பட்டியலிடப்பட்டிருக்கும். இங்கு எந்த இடத்திலாவது சிகப்பு கிராஸ் அடையாளம் தென்பட்டால் அதில் கிளிக் செய்திடவும். இது Event Properties என்னும் பெட்டியைத் திறக்கும். இங்கு கிடைக்கும் தகவல்கள் உங்கள் கம்ப்யூட்டர் கிராஷ் ஆனதிற்கான காரணத்தைத் தெரிவிக்கும். அதற்கு ஏற்றாற் போல் ஆப்பரேட்டிங் சிஸ்டம் அல்லது அப்ளிகேஷன் புரோகிராம்களை சரி செய்திடும் அல்லது மீண்டும் பதிக்கும் வேலையில் ஈடுபடலாம்.

No comments: