Sunday, March 23, 2008

இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 7 ல் தோன்றும் எச்சரிக்கை box நிற்பாட்டும் வழி:

இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தொகுப்பின் 7 பயன்படுத்துவோருக்கு இன்டர்நெட் எக்ஸ்புளோரரை மூடும்பொழுது ஒரு எச்சரிக்கை பெட்டி தோன்றி Do you want to close all tabs? என கேட்கும். இந்த செய்தி ஒன்றுக்கு மேற்பட்ட டேப்களைத் திறந்து பணியாற்றுகையில் மட்டுமே தோன்றும்.

இந்த எச்சரிக்கை box தேவையில்லை என்று எண்ணுபவர்கள் கீழ்க்கண்டபடி செட் செய்துவிட்டால் இந்த எச்சரிக்கை தொடர்ந்து தோன்றாது. "Tools" பட்டன் கிளிக் செய்து அதில் "Options" என்ற பிரிவைத் தேர்ந்தெடுக்கவும். அதில் "Internet Options" என்ற பல டேப்கள் அடங்கிய விண்டோ கிடைக்கும். இதில் "General" என்ற டாபை கிளிக் செய்க. இதன் பின் "Settings" என்ற பட்டனில் கிளிக் செய்திட்டால் "Tabbed Browsing Settings" என்ற டயலாக் பாக்ஸ் தோன்றும். இதில் "Warn me when closing multiple tabs" என்ற பிரிவிற்கு முன்னால் உள்ள சிறிய கட்டத்தில் உள்ள டிக் அடையாளத்தின் மீது மவுஸால் கிளிக் செய்து அதனை எடுத்துவிடவும். பின் ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.

No comments: