Saturday, March 29, 2008

கிராஷ் ஆகாத கிரேஸி பிரவுசர்

இது முற்றிலும் இலவசம். மிகச் சிறிய (688 கேபி) பைலை டவுண்லோட் செய்து எளிதாக இன்ஸ்டால் செய்து இயக்கலாம். இதனை இயக்கத் தொடங்கியவுடன் தளத்துடன் வரும் பாப் அப்களை (popup) மடக்குகிறது. மற்ற பிரவுசர்களைப் பயன்படுத்தும் போது அடிக்கடி ஜாவா ஸ்கிரிப்ட் எர்ரர் என பிழைச் செய்தி கிடைக்கும். அதாவது சில தளங்களைப் பார்க்க வேண்டும் என்றால் உங்கள் கம்ப்யூட்டரில் ஜாவா வேண்டும் என்ற கட்டுப்பாடெல்லாம் இதில் கிடையாது.

இதிலேயே பல சர்ச் இஞ்சின்கள் கான்பிகர் செய்யப்பட்டுத் தேடுவதற்கு ரெடியாகத் தரப்படுகின்றன. மற்றவற்றைப் போல இதில் டேப் பிரவுசிங் உள்ளது. ஆனால் இதில் மட்டுமே பல தளங்களை குரூப் செய்திடும் வசதி உள்ளது. எடுத்துக் காட்டாக தமிழ் செய்தித் தாள் இணைய தளங்கள் பலவற்றை ஒரு குரூப்பாக்கி விட்டால் அடுத்து ஒரே ஒரு கிளிக்கில் அனைத்து தளங்களும் திறக்கப்படும். இதனால் நம் வேலை எளிதாகிறது. எத்தனை டேப்கள் வேண்டு மானாலும் இதில் திறந்து செயல்படலாம். வரையறை இல்லை. அவற்றை ஒரே வரிசை அல்லது பல வரிசைகளில் காட்டும்படி செய்திடலாம். இதனால் கிரேசி பிரவுசர் கிராஷ் ஆகாது.

மிகச் சிறப்பான ஒரு அம்சமாக மவுஸ் இயக்கத்தைக் குறிப்பிடலாம். குறிப்பிட்ட வழிகளில் இயங்கும் வகையில் நம் மவுஸை இந்த பிரவுசரில் கான்பிகர் செய்திடும் வசதி தரப்படுகிறது. எடுத்துக் காட்டாக மவுஸின் நடுப் பட்டனை அழுத்தினால் பார்க்கும் தளம் முழுத் திரையில் காட்டப்படுகிறது. மீண்டும் அழுத்தினால் பழைய தோற்றத்தை அடைகிறது. ஒரே டேப்பில் பல தளங்களைத் திறந்திருந்தால் இடது வலது மவுஸின் அழுத்தங்கள் இணைய தளங்களை முன் பின் காட்டுகின்றன. இது சரியாகப் பழக சில நிமிடங்கள் ஆகலாம்.

மிகவும் பயனுள்ள வசதி இது. தமிழில் இல்லாவிட்டாலும் பல மொழிகளில் இந்த பிரவுசரை அமைத்துக் கொள்ளலாம். மற்ற பிரவுசர்களில் உள்ள புக் மார்க் மற்றும் பேவரிட் தளப் பட்டியலை எடுத்துக் கொண்டு செயல்படுகிறது. உங்களுடைய இமெயில் கிளையண்ட் புரோகிராமை இதிலிருந்தே இயக்கி செயல்படுத்தலாம். பிரவுசரை மூடுகையில் ஹிஸ்டரி பைல்களை அழித்தல், தற்காலிக பைல்களை நீக்குதல் போன்ற செயல்களை மேற்கொள்ளக் கேட்டுப் பின் மூடுகிறது. இணைய தள முகவரிகளை டைப் செய்கையில் மற்ற பிரவுசர்களில் .com தளங்களுக்கு மட்டும் கண்ட்ரோல் + என்டர் அழுத்தினால் முழு முகவரியை பிரவுசர் தானே அமைத்துக் கொள்ளும். இந்த பிரவுசரில் இதனை நான்கு வகையான தள முகவரிகளுக்கு அமைத்துக் கொள்கிறது. அண்மையில் இதன் மூன்றாவது பதிப்பு சோதனை பதிப்பாக புதிய வசதிகளுடன் வந்துள்ளது.

இதனைப் பெற இங்கே கிளிக்குங்கள்

No comments: