Friday, March 21, 2008

கூகுள் சர்ச் இஞ்சினில் தேடுகையில் வரும் பல பி.டி.எப். பைல்களை(PDF) இல்லாமல் செய்ய

கூகுள் சேர்ச் எஞ்சினில் தேடுகையில் தேவையில்லாமல் பல பி.டி.எப். (PDF)பைல்கள் அடங்கிய தள முகவரிகளும் வருகின்றன.

நாம் குறிப்பாக சில தகவல்கள் தரும் இணையப் பக்கங்களை மட்டும் காண முயற்சிக்கையில் இது தடையாக உள்ளது. பி.டி.எப். பைல்கள் உள்ள தளங்களை கூகுள் காட்டுவதில் இருந்து தடுக்க வேண்டுமாயின்
http://www.google.com/ சென்று அங்குள்ள சேர்ஜ் எஞ்ஜினில் நீங்கள் தேடவிரும்பும் சொல்லை டைப்செய்து விட்டு அதனை தொடர்ந்து ஒரு மைனஸ் அடையாளம் இட்டு (minus sign -) pdf என்று டைப் செய்துவிட்டு தேடவும்.

உதாரணத்திற்கு India -pdf என்று தேடவும்

பி.டி.எப். பைல்கள் அடங்கிய தள முகவரிகள் எதுவும் காணமுடியாது.

அப்படிக்காண வேண்டுமாயின் அந்த மைனஸ் அடையாளத்தையும் pdf என்ற சொல்லையும் நீக்கிவிடுங்கள்.

உதாரணத்திற்கு India என்று மட்டும் டைப்செய்து தேடவும்.

No comments: