Wednesday, April 9, 2008

105 வயது நிரம்பிய மூதாட்டிக்கு பல் முளைக்கிறது; முடி கறுக்கிறது

லகீம்புர் கேரி:உ.பி.,யில், 105 வயது நிரம்பிய பெண்ணுக்கு, பல் முளைக்கிறது; தலை முடி மீண்டும் கறுப்பாகிறது.நம்ப முடியவில்லையா? ஆனால், உண்மை!

உ.பி.,யில், லகீம்புர் கேரி மாவட்டம் உள்ளது. இங்கு, ஹிதாயத் நகரில், பிஸ்மில்லா என்ற, 105 வயது பெண் வாழ்கிறார். இவரின் கணவர் கலீல், இறந்து 30 ஆண்டுகள் ஆகின்றன. அவர் தவிர, இவருடைய மூன்று மகன்கள், ஒரு பெண், ஒரு மருமகளும் இறந்துவிட்டனர். நான்கு தலைமுறைகள் கண்ட இவருடைய குடும்பத்தில், தற்போது 80 பேர் உள்ளனர்.

இருபது ஆண்டுகளுக்கு முன், இவருக்கு, அனைத்து பற்களும் விழுந்து விட்டன. தலைமுடியும் பஞ்சு போல் வெண்மையாகிவிட்டது. ஆனால், நினைவுத்திறன், கண் பார்வை, செவித்திறன், அனைத்தும் நல்ல நிலையில் உள்ளன. பனி, கொசுக்கடி இவரை ஒன்றும் செய்வதில்லை. ஏழ்மையில் வாடினாலும், ஆரோக்கியமாக உள்ள இவருக்கு, சமீப காலமாக, பற்கள் மீண்டும் முளைக்கின்றன. தலைமுடியும் கறுமையாக மாறி வருகிறது. இதுகுறித்து, உ.பி.,யில் பிரபல டாக்டர் ஜி.பி. அவஸ்தி கூறுகையில், "இந்த வயதில் முடி கறுப்பாவது மிகவும் ஆச்சரியம். நல்ல ரத்த ஓட்டம், சாப்பாட்டில் நேரம் தவறாமை, மனத்துணிவு தான் இவர் இவ்வளவு நாட்கள் உயிரோடு இருப்பதற்கு காரணம்' என்றார்.

Thinamalar

No comments: