கவுகாத்தி:வாயே திறக்காமல் பாட முடியுமா? நம்புங்கள். அப்படிப்பட்டவர் அசாம் மாநிலத்தில் இருக்கிறார். அசாம் மாநிலம் நல்பாரி மாவட்டம் பாலபரா சுபா கிராமத்தை சேர்ந்த விவசாயி மலின் மேதி. 19 ஆண்டுக்கு முன் பாடல்கள் பாட துவங்கினார். ஆனால், அவரது கச்சேரிகளுக்கு வரவேற்பு இல்லை. அசாமில் புகழ்பெற்ற பாடகர் புபேன் ஹசாரிகா முதல் யா அலி புகழ் ஜுபின் கார்கின் பாப் பாடல்கள் வரை, அனாயசமாக பாடுகிறார். தற்போது லிம்கா மற்றும் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற முயற்சித்து வருகிறார்.
இதுவரை எந்த பாடகரும் செய்யாத வகையில், வாய் திறக்காமல் 10க்கும் அதிமான பாடல்களை பாடுகிறார். இயற்கையாகவே அவருக்கு நாக்கு நீளமாக இருப்பதால், இது சாத்தியமாகிறது. வாய் மூடியிருக்கும் நிலையில், மலின் மேதியிடம் இருந்து பாடல் ஒலிப்பது, கேட்பவர்களை வியப்பில் ஆழ்த்துகிறது. இந்த திறமையை மேலும் வளர்க்க அவருக்கு போதுமான நேரம் கிடைப்பதில்லை. விவசாயம் பார்ப்பதற்கே நேரம் சரியாகப் போகிறது. இருப்பினும், ஆர்வம் காரணமாக, வாய் மூடி, பாடல்கள் பாடுவதற்கு பழக்கப்படுத்தி வருகிறார். இந்த கிராமத்தை சேர்ந்த சக விவசாயிகளும், நண்பர்களும் இவரை, ஊக்குவித்து உற்சாகப்படுத்தி வருகின்றனர். கவுகாத்தி கேந்திராவின் துõர்தர்ஷன் உட்பட பல்வேறு பிரத்யேக நிகழ்ச்சிகளை அளித்துள்ளார் மலின் மேதி.
Thinamalar
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment