Wednesday, April 30, 2008

1,500 பெண்களுக்கு எய்ட்ஸ் பரப்பிய அமெரிக்க வெறியன்

முகமூடி அணிந்த ஒருவன், தான் எய்ட்ஸ் நோயாளி என்றும், அதை 1,500 பெண்களுக்கு பரப்பி இருப்பதாகவும் தெரிவித்துள்ளான். யூ டியூப் என்ற இணையதளத்தில் இவனது பேட்டி, வீடியோ காட்சிகளாக விரிகிறது. தன்னை எதற்கும் பயன்படாத"டிரேஷ்மேன்' என்று அழைத்துக்கொள்கிறான் இவன். தனக்கு எய்ட்ஸ் நோய் தாக்கியதைத் தொடர்ந்து, வெறித்தனமாக பெண் களை தேடித்தேடி பாதுகாப்பற்ற அந்தரங்க உறவு கொண்டுள்ளான். முதல் வீடியோவில் தனது கையில் ஒரு பட்டியலை வைத்துக் கொண்டு, தன்னால் எய்ட்ஸ் பரப்பப்பட்ட பெண்கள், அவர்களின் வயது, சிலரின் முகவரியையும் வாசிக்கிறான்.



"கற்பழிப்பவர்களை கொல்வதை விட மிக முக்கியமான விஷயத்தை உங்களுக்கு சொல்லப்போகிறேன்' என்ற, மிரட்டல் குரலுடன் அவனது வீடியோ காட்சிகள் துவங்குகிறது."எனது கையில் இருக்கும் பட்டியலில் உள்ள பெண்கள் எல்லாருக்கும் எச்.ஐ.வி.,யை பரப்பியுள்ளேன். நான் படிக்கும் பட்டியலில் உங்கள் பெயர் இருந்தால், உங்களுக்கு நான் எய்ட்ஸ் நோயை பரப்பி உள்ளேன். உங்களை கடவுள் ஆசீர்வதிக்கட்டும்' என்று, வீடியோ காட்சியில் அவன் குரல் ஒலிக்கிறது. தனக்கென்று இணையதள முகவரியையும் இவன் வைத்துள்ளான்.



"கேங்ஸ்டா' என்ற பெயரில் உள்ள முகவரியில் ஏராளமான ஆபாச காட்சிகள் இடம் பெற்றுள்ளன. அத்துடன், "டிராஷ்மேன்' குறித்த விவரங்களும் இடம் பெற்றுள்ளன.இவன் எதற்காக இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறான் என்பது தெரியவில்லை. ஒழுக்கம் கெட்ட பெண்களுக்கு விடுக்கும் எச்சரிக்கையா அல்லது பெண் சமுதாயத்துக்கு தீங்கு இழைக்க வேண்டும் என்ற நோக்கமாக என்பதும் புரியவில்லை. உடனடியாக இவனுக்கு மனநல சிகிச்சை அவசியம் என்று டாக்டர்கள் கூறியுள்ளனர்.

No comments: