
மகாராஷ்டிர மாநிலம் வசாய் மாவட்டத்தில் உள்ள கிரிட்ஸ் என்ற கிராமத்தை சேர்ந்தவர் நீலம்; இவர் கணவர் சவுதி அரேபியாவில் வேலை செய்கிறார்; இவர்களுக்கு நினோக்ஷா என்ற 18 மாத குழந்தை உள்ளது.பக்கத்தில் உள்ள சண்டோர் என்ற கிராமத்தில் உள்ள மாமா வீட்டுக்கு சமீபத்தில் குழந்தையுடன் சென்றார் நீலம். சுற்றிலும் வயல்கள் சூழ்ந்த அந்த வீட்டின் முற்றத்தில் விளையாடிக் கொண்டிருந்தது குழந்தை.அதை பார்த்து ரசித்துக்கொண்டிருந்தார் தாய் நீலம். அப்போது திடீரென குழந்தை , தரையில் சரிந்து விழுந்தது. பதறிப்போன தாய், போய் தூக்கிய போது, குழந்தை வயிற்றில் ரத்தம் கொட்டியது. உடனே மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றாள். அங்கு டாக்டர்கள் பரிசோதித்து "சோனோகிராம்' ஸ்கேன் எடுத்தனர். வயிற்றில் சிறிய ரவை குண்டு பாய்ந்திருந்தது தெரிந்தது. தாமதிக்காமல் உடனே அறுவை சிகிச்சையை ஆரம்பித்தனர்.
தினமலர்

No comments:
Post a Comment