ராஜவேணியும், அபுதாஹீரும் கரும்பு வெட்டும் இடத்தில் கூலி வேலை செய்த போது காதல் ஏற்பட்டது. ஆறு மாதமாக காதலித்த இருவரும், திருமணம் செய்ய முடிவு செய்து, வீட்டை விட்டு வெளியேறினர்.கும்பகோணம் பஸ் ஸ்டாண்டிலிருந்து, இருவரும் சென்னைக்குப் புறப்பட தயாராக இருந்தனர். அண்ணனை காணாமல் தேடி வந்த அபுதாஹீரின் தம்பி, கும்பகோணம் பஸ் ஸ்டாண்டில் இருவரையும் கண்டுபிடித்தார்.அவர் அபுதாஹீரை வீட்டுக்கு வருமாறு அழைத்தபோது ஏற்பட்ட பிரச்னையை பார்த்த போலீஸ் எஸ்.ஐ., பக்கீர்முகமது, விசாரணை நடத்தினார். "காதல் விவகாரம்' என்று தெரிந்ததும், காதலர்களை கும்பகோணம் மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தார்.
தினமலர்

2 comments:
இந்து முறைப் படி திருமணம் னு போட்டுருக்குறீங்க .ஆனா திருமணத்தப் பத்தி ஒரு தகவலும் இல்லையே. இந்து முறைப் படி திருமணம் எந்த கோயில் அப்படிங்கற விபரமும் சொல்லி இருக்கலாமே.
இந்த செய்தி நேற்றைய தினமலர் நாளிதழில் வெளியான செய்தி. அவர்களும் அதில் மேலதிக விபரம் எதுவும் தெரிவிக்கவில்லை. வேறு எங்காவது இதுபற்றி மேலதிக விபரம் கிடைத்தால் இணைக்கிறேன்.
நன்றி
ஒரு கணணி
Post a Comment