மயக்க மருந்து-வேலைக்காரி கற்பழிப்பு: 69 வயது முதியவர் கைது
பொன்னேரி: குளிர்பானத்தில் போதை மருந்தை கலந்து கொடுத்து இளம் பெண்ணை மயக்கி கற்பழித்த 69 வயது முதியவர் கைது செய்யப்பட்டார்.
திருவள்ளூர் நந்தியம்பாக்கத்தை சேர்ந்த மைதிலி (19). அவர் 10 நாளே ஆன கைக் குழந்தையுடன் பொன்னேரி போலீசில் புகார் கொடுத்தார்.
அதில், நந்தியம்பாக்கத்தில் வசிப்பவர் லட்சுமணன் (69). இவரது மனைவி இறந்துவிட்டார். இவர் தனது 2 மகன்கள், ஒரு மகளுடன் வசித்து வருகிறார்.
மகன்களும் மகளும் தினமும் சென்னைக்கு வேலைக்கு சென்று வருகின்றனர். இதனால், வீட்டு வேலை செய்வதற்காக என்னை கடந்த 5 வருடங்களுக்கு முன்பு சேர்த்துக் கொண்டனர்.
வேலைக்கு சேர்ந்த நாளில் இருந்தே, லட்சுமணன் எனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்தார். பலமுறை அவரை கண்டித்தேன். ஒருமுறை என்னிடம் தவறாக நடக்க முயற்சித்தபோது கூச்சல் போட்டதால் என்னை தனி அறையில் அடைத்து வைத்து லட்சுமணன் கொடுமைப்படுத்தினார்.
அடிக்கடி எனக்கு குளிர் பானம் தருவார்:
மேலும் வீட்டில் வேலைபார்க்கும்போது அடிக்கடி எனக்கு குளிர் பானம் தருவார்.
குளிர்பானத்தில் போதை மாத்திரை கலந்து கொடுத்து என்னை அவர் கற்பழித்ததும், அதனால் நான் கர்ப்பமடைந்ததையும் பின்னர் தெரிந்து கொண்டேன்.
இதையடுத்து மீஞ்சூரில் ஒரு பெண் டாக்டரிடம் அழைத்துச் சென்று எனக்கு இரண்டு முறை கருக்கலைப்பு செய்தார். அதன்பிறகும் போதை மாத்திரை கொடுத்து லட்சுமணன் என்னை கற்பழிப்பது தொடர்ந்தது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பும் அதே பெண் டாக்டரிடம் அழைத்துச் சென்று, மருந்து மாத்திரைகள் வாங்கிக் கொடுத்தார். இந்த முறை எனது கரு கலையவில்லை. மீண்டும் ஒரு முறை டாக்டரிடம் அழைத்துச் சென்றார். ஆனால், டாக்டர் இல்லாததால் ஒன்றும் செய்ய முடியவில்லை.
இந்நிலையில், கடந்த 20ம் தேதி, பொன்னேரி அரசு மருத்துவமனையில் லட்சுமணன் என்னை பிரசவத்துக்காக சேர்த்தார். 22ம் தேதி எனக்கு பெண் குழந்தை பிறந்தது. குழந்தையை மருத்துவமனையிலேயே விட்டுவிடும்படி லட்சுமணன் என்னை மிரட்டினார். நானும் பயந்து விட்டுவிட்டு வந்தேன். ஆனால் போலீசார் என்னை கண்டுபிடித்து குழந்தையை என்னிடம் கொடுத்தனர்.
இந் நிலையில் குழந்தையை நான் கொலை செய்யவில்லை என்றால் என்னை கொலை செய்துவிடுவதாக லட்சுமணன் என்னை மிரட்டுகிறார். எனக்கும் எனது குழந்தைக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று மைதிலி கூறியிருந்தார்.
இதையடுத்து லட்சுமணனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். தலைமறைவாகிவிட்ட மீஞ்சூர் பெண் டாக்டரை போலீசார் தேடி வருகிறார்கள்.
Thatstamil
Wednesday, April 2, 2008
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment