மதுரை : துப்பாக்கிகளை, போலீசார் பாதுகாப்பாக வைத்திருக்க, கவிதை வடிவிலான அறிவுறுத்தலை, அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும், போலீஸ் தலைமை அனுப்பியுள்ளது.
"எனது பிரார்த்தனை' என்ற தலைப்பில் போலீஸ் நிலையங்களுக்கு கூடுதல் டி.ஜி.பி., விஜயகுமார் அனுப்பியுள்ள கவிதை :
"இது என்னுடைய துப்பாக்கி
இதுபோன்று பல இருக்கலாம்
ஆனால் இது எனக்குரியது
எனது துப்பாக்கிதான் உற்ற நண்பன்
இத்துப்பாக்கி எனது வாழ்வு
நானின்றி என் துப்பாக்கி பயனற்றது
துப்பாக்கியில்லாமல் நான் பயனற்றவன்
துப்பாக்கியை உண்மையோடு சுடுவேன்
என்னை கொல்லத் துடிக்கும்
எதிரியை நான் துல்லியமாக சுட வேண்டும்
அவன் என்னை சுடும் முன்பு
நான் அவனை சுட வேண்டும்
நான் அப்படி செய்வேன்!
கடவுள் முன்னிலையில் இந்த
உறுதிமொழியை எடுத்துக் கொள்கிறேன்
நானும், என் துப்பாக்கியும்
இந்நாட்டின் பாதுகாவலர்கள்
எங்கள் பகைவரைவிட
நாங்கள் வல்லவர்கள்
வாழ்வின் ரட்சகர்கள்
பகைவர் இல்லாத வரை
அமைதி நிலவட்டும்!'
இவ்வாறு, கவிதையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த உறுதிமொழி கவிதையை, அனைத்து போலீஸ் நிலையங்களிலும் போலீசார் பார்வையில் படும்படி, துப்பாக்கி ஸ்டாண்ட் அருகே அறிவிப்பாக வைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தினமலர்
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment